Monday, 17 September 2012

பிரித்தானியாவின் மிகை மேன்மையான நீர்முழ்கிக் கப்பல்

உலகின் அதி நவீனமானதும் அதிக பலம் வாய்ந்ததுமான ஒரு நீர் மூழ்கிக் கப்பலை பிரித்தானியா ஒரு பில்லியன் பவுண்கள் செலவழித்து உருவாக்கியுள்ளது. இதற்கு HMS Ambush எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த வகை நீர்மூழ்கிக் கப்பல்கள் Astute-class sub என வகைப்படுத்தப்பட்டுள்ளன. அணுவலுவால் இது தொடர்ந்து 25 ஆண்டுகள் செயற்படக்கூடியது. BAE Systems என்னும் பிரித்தானிய நிறுவனம் இதை பிரித்தானியக் கடற்படைக்காக உருவாக்கியுள்ளது.

வழமையாக நீர் மூழ்கிக் கப்பல்கள் நீரின் மேற்பரப்பில் உள்ளவற்றை அறியப் பயன்படுத்தும்  periscope இன்றி பிரித்தானியா நிர்மாணித்த HMS Ambushஆல் செயற்படமுடியும். இதில் 103 கடற்படையினர் பயணிக்க முடியும். இந்த நீர்மூழ்கிக் கப்பலை உருவாக்க இருபது மில்லியன் மனித மணித்தியாலங்கள் செலவழிக்கப்பட்டன. இதனால் மாதக் கணக்காக நீரின் அடியில் இருக்க முடியும். அதற்குத் தேவையான உயிர்க்காற்றையும் (ஒக்சியின்) குடிநீரையும் கடல் நீரில் இருந்து இதனால் தயாரிக்க முடியும். 7400தொன் எடையும் 320 அடி நீளமும் கொண்ட HMS Ambushஐ எதிரிகள் இலகுவில் இனம் கண்டு கொள்ள முடியாதபடி உருவாக்கியுள்ளனர்.

HMS Ambush இல் துல்லியமாக இலக்குகளைத் தாக்கும் டொம்ஹாக் ஏவுகணைகள் (super-accurate Tomahawk cruise missiles) 38ஐக் கொண்டிருக்கும். அத்துடன் மற்ற கடற்கலன்களைத் தாக்கி அழிக்கும் Spearfish torpedoesகளும் இணைக்கப்பட்டிருக்கும்.1200மைல்கள் தொலைவு வரை Tomahawk cruise missilesகளால் தாக்கி பேரழிவை ஏற்படுத்தலாம்.
உள்ளகம்

ஒரு நாளின் 500மைல்கள்(800கி மீ) பயணிக்கக் கூடிய HMS Ambush நீர் மூழ்கிக் கப்பல் உலகின் எப்பாகத்திலும் இரு வாரங்களுக்குள் சென்றடையக் கூடியதாக இருக்கும். இதன் sonar உணரிகள் 3000மைகளுக்கு அப்பால் இருக்கும் கடற்கலன்களின் நடமாட்டத்தை துல்லியமாகக் கண்டறியக் கூடியது. இந்த sonar உணரிகள் இரண்டாயிரம் மடிக்கணனிகளின் வலுவைக் கொண்டன.உலகிலேயே அதிக அளவு நீருள்ஒலிவாங்கி (hydrophone) கருவிகளைக் கொண்டது HMS Ambush

ஆரம்ப வைபவம்:



மொத்தத்தில்HMS Ambushஇற்கு இப்போது இணை இல்லை எனப்படுகிறது. "நீங்கள் மட்டும் நவீன பேரழிவு மிக்க படைக்கலன்களை உருவாக்குங்கள். நாம் உருவாக்கினால் பெரும் பிரச்சனைகளைக் கிளப்புங்கள்" என்று ஈரானில் முணு முணுப்பது கேட்கிறது.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...