இயற்கை அன்னைக்குத் தங்கப் பதக்கம்.
பாக்கிஸ்த்தான் பத்திரிகையின் மூடத்தனமான கருத்துப்படம் |
உற்று நோக்கிய நாடுகள்
கடந்த ஒலிம்பிக்கை நடாத்திய நாடு என்ற வகையில் சீனாவும் அடுத்த ஒலிம்பிக்கை நடத்தும் நாடு என்ற வகையில் பிரேசிலும் 2012 ஒலிம்பிக் நடத்த பிரித்தானியாவுடன் கடும் போட்டியிட்ட நாடு என்ற வகையில் பிரான்சும் தாம்தான் உலைன் பெரும் சக்தி என்று நினைத்துக் கொண்டிருக்கும் நாடு என்ற வகையில் அமெரிக்காவும் இலண்டன் ஒலிம்பிக்கை உன்னிப்பாகக் கவனித்தன. சீன பீஜிங் ஒலிம்பிக்கின் தொடக்க விழாவில் இல்லாத ஒன்று இலண்டன் ஒலிம்பிக் விழாவில் இருந்தது என்கின்றனர் சீனர்கள். இலண்டன் ஒலிம்பிக் விழாவிற்கு ஓர் ஆத்மா சேர்க்கப்பட்டிருந்தது என்றனர் சீனர்கள். பிரெசில் நாட்டுப் பத்திரிகைகள் இலண்டன் ஒலிம்பிக்கை பூரணத்துவத்தை அண்டியது (near perfect) என்று சொல்லி இலண்டன் தமக்கு பெரும் சவால் விடுத்து விட்டது என்கின்றன. பிரெஞ்சு ஊடகங்கள் இலண்டனில் மக்களின் நட்புத்தன்னமையைப் பாராட்டின. ஒரு ஊடகவியளாளர் தான் தனது வாழ்நாளின் இறுதிக் கட்டத்தின் போது இலண்டனில் வாழ விரும்புகிறேன் என்றார். ஆனாலும் பிரேஞ்சுப் பத்திரிகைகள் சில தமது மிதிவண்டிப் போட்டியாளர்கள் பிரித்தானியப் போட்டியாளர்களிடம் தோற்றதை ஏற்றுக் கொள்கிறார்கள் இல்லை. இலண்டன் தில்லு முல்லு செய்து விட்டது என்கின்றனர். அமெரிக்கப் பத்திரிகைகள் பல இலண்டனைப் புகழோ புகழ் என்று புகழ்கின்றன.
பிரித்தானிய அரச குடும்பம்
ஒஸ்ரேலியர்களுக்கு பிரித்தானிய இளவரசர் வில்லியவும் கேம்பிரிட்ஜ் இளவரசி கேற்றும் பிரித்தானிய வீரர்களை ஊக்கப்படுத்தியதையும் அவர்கள் வெற்றியடைந்த போது ஆராவரித்து மகிழ்ந்ததையும் கண்டிக்கின்றன. இவர்கள் எமது நாட்டுக்கும் சேர்த்துத்தான் இளவரச இளவரசியாகச் செயற்படுகிறாரகள். எமது நாட்டினதும் வருங்கால அரச அரசியர். அவர்கள் ஏன தமது நாட்டு வீரர்களை ஊக்குவிக்கவில்லை என்று கேள்வி எழுப்புகின்றனர். பிரித்தானியப் பத்திரிகைகள் அவர்களை மிகச்சிறந்த இரசிகர்கள் என்று புகழ்கின்றன.
செலவீனம்
இலண்டன் ஒலிம்பிக் ஒரு சிக்கனமான ஒலிம்பிக் என்று கூறலாம். பல்லாயிரக்கணக்கானோர் தொண்டர் சேவை அடிப்படையில் பணிக்கு அமர்த்தப்பட்டனர். இலண்டன் ஒலிம்பிக்கிற்கான நிதி பல்வேறு வழிகளில் பெறப்பட்டது. 2006-ம் ஆண்டிலிருந்து நகராட்சிச் சபை வரிகளை இருபது பவுண்களால் அதிகரிக்கச் செய்ததன் மூலம் 625 மில்லியன் பவுண்கள் சேகரிக்கப்பட்டது. இலண்டன் அபிவிருத்தி முகவரகத்திடம் இருந்து இருநூற்றைம்பது மில்லியன் பவுண்கள் பெறப்பட்டது. ஒன்றரை பில்லியன் பவுண்கள் லொத்தர் மூலம் பெறப்பட்டது. மொத்தச் செலவீனம் ஒன்பது பில்லியன்கள். வர்த்தக நிறுவங்களின் விளம்பர்ங்கள் மூலமும் பெருந்தொகைப் பணம் பெறப்படும்.
உன்னதமான முகாமைத்துவம்
பாரிய நிகழ்வுகளைச் சிறப்பாக செய்து முடிக்கும் திறன் பிரித்தானியர்களிடம் உண்டு. அத்துடன் நேரம் தவறாமை அவர்களது அடுத்த சிறப்பு அம்சம். மூன்றாவதாக பாதிட்டுக்குள் செலவை கட்டுப்படுத்தும் திறனும் அவர்களிடம் உண்டு. ஒலிம்பிக் ஏற்பாட்டில் பிரித்தானியர்களின் இந்தத் திறமை நன்கு பயன்படுத்தப்பட்டது. நன்கு வெளிப்படுத்தப்பட்டது. பல விளையாட்டுத் துறை விமர்சகர்களும் ஒலிம்பிக் அவதானிகளும் பிரித்தானியா ஒலிம்பிக் போட்டியை மிகச் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்ததைப் பாராட்டுகிறார்கள். பன்னாட்டு ஒலிம்பிக் குழுத் தலைவர் இலண்டன் கடந்த இரு வாரங்களாக விளையாட்டை பல அம்சங்களில் புத்துணர்வூட்டியது( refreshed the game in many aspects) இலண்டன் 2012 ஒரு உன்னதமான ஒலிம்பிக் என்றார்.
வெற்றிடமான கதிரைகள்
ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பத்தில் பல இடங்களில் கதிரைகள் வெற்றிடமாக இருந்ததும் பலர் வெளியில் நுழைவுச் சீட்டுக் கிடைக்காமல் தவித்ததும் பலத்த கண்டனங்களுக்கு உள்ளாகின. ஆனால் பல தனியார் நிறுவங்கள் அந்த கதிரைகளுக்கு உரிய நுழைவுச் சீட்டை வாங்கியிருந்தமை கண்டறியப்பட்டது. அந்த நிறுவனங்களின் ஊழியர்களும் அந்த நிறுவங்களிடமிருந்து பரிசாகப் பெற்றவர்களும் வேறு பல காரணங்களுக்காக அங்கு வராமல் போனதும் கண்டறியப்பட்டது.
தோல்வி வேண்டியதால் வெளியேற்றப்பட்ட வீரர்கள்
எட்டு பெண் பட்மின்ரன் வீராங்கனைகள் தோல்வியடைவதற்காக விளையாடிமைக்காக போட்டியில் இருந்து வெளியேற்றப்படனர். அல்ஜீரிய ஓட்டக்காரர் தான் 1500மீட்டர் ஓட்டப்போட்டியில் வெல்வதற்கு சக்தி வேணும் என்பதற்காக 800மீட்டர் ஓட்டப்போட்டியில் விரைவாக ஓடுவதைத் தவிர்த்தார். இதற்காக அவர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். பின்னர் அவரின் உடல் நிலை அன்று சரி இல்லை என்று மருத்துவர்கள் சான்றிதழ் வழங்கியமையால் மீண்டும் சேர்க்கப்பட்டார். தென் கொரிய வீரரைத் தாக்கு தனது டுவிட்டரில் எழுதியமைக்காக சுவிஸ் கால்பந்து வீரர் மைக்கேல் மொர்கனெல்லவை அவரது நாட்டு ஒலிம்பிக் குழுவே போட்டியில் இருந்து நீக்கியது. கிரேக்க நீளப்பாய்சல் வீராங்கனையும் இனக் குரோத வாசங்கள் டுவிட் செய்ததால் விலக்கப்பட்டார்.
கண்டனத்துக்கு உள்ளான பிபிசி
இலண்டனைப் புகழும் பல ஊடகங்கள் பிபிசி தொலைக்காட்சிச் சேவை பிரித்தானிய வீரர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தமையைக் கண்டித்தன. ஒஸ்ரேலியாவில் ஒரு நாட்டில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது அந்த நாட்டுத் தேசியத் தொலைக்காட்சிகள் உள்நாட்டு வீரர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைத் தடுக்க வேண்டும் என்ற குரல் அமைப்பு ரீதியாக எழுந்துள்ளது. பிபிசியின் இணையத் தளத்தில் ஒலிம்பிக்கில் போட்டியிடும் நாடுகளின் பூகோளப்படங்கள் இணைக்கப்பட்டபோது இஸ்ரேலின் தலைநகர் போடாமல் போனதை இஸ்ரேலியப் பத்திர்கைக்கள் கடுமையாகச் சாடின. பல இசுலாமிய இணையத் தளங்களும் பிபிசியின் பாராபட்சத்தைக் கண்டித்திருந்தன.வெள்ளையர் அல்லாதவர்களைப் பிரித்தானிய வீரர்கள் தோற்கடிக்கும் போது பிபிசி அதிக மகிழ்ச்சியடைந்தது என்கின்றன சில இணையத் தளங்கள். அமெரிக்க ஊடகங்கள் பிபிசி பாராபட்சமாக நடக்கவில்லை என்கின்றன.
பொருளாதாரம்
ஒலிம்பிக் போட்டிகளின் மூலம் பிரித்தானியப் பொருளாதாரத்திற்கு 13பில்லியன் பவுண் பெறுமதியான மதிப்பு உயர்வு ஏற்படும் என்று எதிர்ப்பார்க்கப் படுகிறது. ஒலிம்பிக்கின் போது இலண்டன் நகரத்தில் பெரும் வாகன நெருக்கடி ஏற்படும் என்ற செய்தி பலமாக அடிபட்டதால் பலரும் இலண்டன் செல்வதைத் தவிர்த்தனர். உல்லாசப் பிரயாணிகளும் இலண்டர் செல்வதைத் தவிர்த்தனர். இதனால் இலண்டன் நகர வர்த்தகர்களுக்கு வருமான இழப்பு ஏற்பட்டது. மேற்கு முனை இலண்டன் நகரில் சில நாடக இசை அரங்குகள் தற்காலிகமாக மூடப்பட்டன.
களத்திலும் சாதித்த பிரித்தானியர்கள்
ஒரு நாட்டில் ஒலிம்பிக் நடக்கும் போது அந்த நாட்டு வீரர்கள் வழமையிலும் அதிக வெற்றி பெறுவது வழக்கம். பிரித்தானியாவும் அதற்கு விதி விலக்கல்ல. டெனிஸில் பெற்ற வெற்றி போற்றத்தக்கது. பிரித்தானியர்களுக்குப் பிடித்தமான கால்பந்தாட்டப் போட்டியில் தண்ட உதையில் இங்கிலாந்து தோல்வியடையும் வழமை ஒலிம்பிக்கிலும் தொடர்ந்தது. அதுவும் ஒரு ஆசிய நாடான தென் கொரியாவிடம் பிரித்தானிய அணி தோல்வியைக் கண்டது. இரசிய விளையாட்டுத் துறை அமைச்சர் பிரித்தானியர்களும் சீனர்களைப் போலவே மோசமானவர்கள் என்றார். பிரித்தானிய இரசிகர்கள் தங்கள் நாட்டு வீரர்களுக்கு மட்டும் ஆர்பரித்து ஆதரவு தெரிவிக்கிறார்கள் என்பது அவரது குற்றச் சாட்டு.
பொய்பிக்கப்பட்ட எதிர்பார்ப்புக்கள்
இலண்டன் ஒலிம்பிக் தொடங்க முன்னர் பல முனைகளிலும் இருந்தும் பல எதிர்மறையான எதிர்பார்ப்புக்கள் முகாமை, காலநிலை, பாதுக்காப்பு, போக்குவரத்துத் தொடர்பாக எழுந்தன. அவையாவும் பொய்பிக்கப்பட்டுவிட்டன. பிரித்தானியர்கள் இப்போது தம்மைத் தாமே புகழ்ந்து பெருமைப் பட்டுக் கொள்கின்றனர். தம்மைப் பற்றிய தமது மற்றவர்களினதும் கருத்துக்களுக்கு இலண்டன் ஒலிம்பிக் ஒரு திரும்பு முனையாக அமைந்து விட்டதாக பிரித்தானியர்கள் இப்போது கருதுகின்றனர். இந்த வெற்றி மனப்பானம பரவி மற்றத் துறைகளிலும் பிரித்தானியா வெற்றி பெறுமா?
ஒலிம்பிக் தொடர்பான முந்தைய பதிவு:
No comments:
Post a Comment