ராகுல் காந்தி பிறக்கும் போதே அவர் இந்தியாவின் பிரதமர் என்று இந்தியார்களின் தலையில் எழுதப்பட்டுவிட்டது. கடந்த ஒன்பது ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு வரும் ராகுல் ஓர் உருப்படியான பேட்டி கூட பத்திரிகைக்களுக்கு கொடுத்ததில்லை. இந்திய அரசில் ஓர் உருப்படியான பதவி வகித்ததில்லை. பாராளமன்றத்தில் ஓர் உருப்படியான உரை நிகழ்த்தியதில்லை. ஆனால் இவர்தான் இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரி.
தகுதிமிகு காந்தி
திக்கெங்கும் ஏழைகள் வீடுகளுக்குச் சென்று உண்ணுவதை தனது பொழுது போக்காகக் கொண்ட ராகுல் காந்திக்கு அடுத்த பிரதம மந்திரியாவதற்கான அத்தனை தகுதிகளும் இருக்கின்றன என்கிறார் சோனியாவின் செல்லப் பிராணிகளில் ஒன்றான திக் விஜய சிங். Bastard children உருவாக்குவதில் வல்லவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட நேருவின் குலக்கொழுந்து ராகுல். பல்கலைக் கழகத்தில் பயிலும் போது விரிவுரையாளரின் அறையில் இருந்து பிடிபட்டதால் பல்கலைக் கழகத்தில் இருந்து ரவீந்திர நாத் தாகூரால் விரட்டப்பட்டவர் எனக் குற்றம் சாட்டப்பட்ட இந்திரா காந்தியின் பேரன் ராகுல் காந்தி. போபர்ஸ் பீரங்கி புகழ் ராஜீவ் காந்தியின் மகன் ராகுல் காந்தி. இலங்கையில் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்ல உதவி செய்தார் எனக் குற்றம் சாட்டப்படும் சோனியா காந்தியின் வயிற்றில் உதித்தவர் ராகுல் காந்தி. இதை விட வேறு என்ன தகுதிகள் வேண்டும் இந்தியாவை ஆள?
மக்களாட்சிக் கேலிக் கூத்து ராகுல் காந்தி
இந்தியாவின் ஆட்சியில் முக்கிய பொறுப்பு வகிப்பதா இல்லையா என்பதை ராகுல் காந்தி தான் முடிவு செய்ய வேண்டும் என்று 18-ம் திகதி அம்மா சோனியா பேட்டியளித்து இருந்தார். ராகுல் முக்கிய பதவி வகிக்க வேண்டுமா இல்லையா என்பதை இந்திய மக்கள் முடிவு செய்யத் தேவையில்லை. காங்கிரசுக் கட்சியும் முடிவு செய்யத் தேவையில்லை. ராகுல் முடிவு செய்யட்டும். இந்தியாவை ஆள காங்கிரசுக் கட்சியை விட்டால் வேறு கட்சியில்லை. காங்கிரசுக் கட்சியை ஆள் காந்தி பெயரைத் திருடி தன் குடும்பப் பெயராக்கிய கான் குடும்பத்தை விட்டால் வேறு எவருமில்லை. காங்கிரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக கட்சி உறுப்பினர்களால் ராகுல் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தாயாரால் முடி சூட்டப்பட்டார். தாயாரின் வேண்டுதலை ஏற்ற ராகுல் கட்சித் தலைமை முடிவு செய்யட்டும் என்றார். யார் அந்தக் கட்சித் தலைமை கட்சியின் தலைவர் அம்மா சோனியா. பொதுச் செயலாளர் மகன் ராகுல். இந்த குடும்ப ஆதிக்கம் தான் உலகிலேயே அதிகம் படித்த பிரதம அமைச்சரையும் உலகிலேயே திறமையான நிதி அமைச்சரையும் கொண்டுள்ள இந்தியா பொருளாதாரத்தில் உடுப்படாமல் இருப்பதற்குக் காரணம்.
பாதை திறந்த ராகுல் காந்தி
காங்கிரசுக் கட்சியில் ஓரளவிற்கு முதுகெலும்புள்ளவர் பிரணாப் முஹர்ஜீ. அவர் இருக்கும் வரை ராகுல் காந்தி இந்தியாவின் பிரதம மந்திரி ஆக முடியாது அதனால் பிரணாப்பை ராஸ்ரபதி பவனுக்கு அனுப்பி ராகுல் முன்னுக்கு வருவதற்கான பாதை திறக்கப்பட்டுள்ளது. பிரணாப்பின் வெற்றி நிச்சயம் என்றவுடன் அம்மா ராகுல் ஆட்சியில் பங்கு வகிப்பதைப் பற்றி முடிவு செய்யட்டும் என்றார். ஆனால் அம்மா சோனியவிடம் ஒரு பெரும் பயம் உண்டு. பிரணாப் முகர்ஜீயின் பிரதம மந்திரிக் கனவை சிதைத்தவர் ராஜீவ் காந்தி. ராஜீவ் தன் மந்திரி சபையில் கூட பிரணாப்பிற்கு இடம் கொடுக்கவில்லை. அந்தப் பழியை இந்தியக் குடியரசுத் தலைவராகிய பின்னர் தீர்த்துக் கொள்வாரா என்ற அச்சம் சோனியாவிடம் இன்றும் உள்ளது.
சாதித்துக் காட்டிய ராகுல் காந்தி
2004 மார்ச் மாதத்தில் இருந்து அமேதி தொகுதிக்கான பாராளமன்ற உறுப்பினராக இருக்கும் ராகுல் காந்தி அந்த தொகுதியை முன்னேற்ற எந்த உருப்படியான நடவடிக்கையும் எடுத்ததில்லை. இந்தியாவின் பிந்தங்கிய தொகுதிகளில் ஒன்றாக அது இருந்து வருகிறது. 2008இல் காங்கிரசின் இளைஞர் அமைப்பின் செயலாளராக ராகுல் நியமிக்கப்பட்ட போது தான் இளைஞரணியைச் சீர் திருத்தப் போவதாக அறிவித்தார். அதாவது இளைஞர் அணிக்குள் வாரிசு அரசியலை ஒழிக்கப் போவதாகச் சூளுரைத்தார் ஆனால் அவரால் அதைச் செய்ய முடியவில்லை. 2012 மார்ச் மாதம் நடந்த சட்டசபைத் தேர்தலில் ராகுல் தீவிர பிரச்சாரம் செய்த இடமெல்லாம் அவரது குடும்பச் சொத்தாகக் கருதப்படும் காங்கிரசுக் கட்சி படு தோல்வியைச் சந்தித்தது.
நாணயக் கடத்தல் காந்தி?
27-09-2001-ம் திகதி அமெரிக்க லோகன் விமான நிலையத்தில் இரண்டு மில்லியன் டாலர்கள் கொண்ட பயணப்பையுடன் ராகுல் காந்தியும் அவரது அப்போதைய காதலி வெரோணிக்காவுடன் பிடிபட்டாராம். வெரோணிக்கா ஒரு கொலம்பிய போதைப் பொருள் வியாபாரியின் மகள். சோனியா அப்போதைய பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பேயியைத் தொடர்பு கொண்டு ராகுல் காந்தியை மீட்டாராம். அதன் பின்னர் ராகுல் அமெரிக்காப் பக்கம் தலைகாட்டியதில்லை.
பாதுகாப்பு அமைச்சர் ராகுல் காந்தி
ஆட்சியில் முக்கிய பொறுப்பு வகிக்க முன்வரும் ராகுல் காந்திக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. உலக படைக்கலன் சந்தையில் அதிக பணம் செலவிடும் நாடு இந்தியா. ராகுலின் சுவிஸ் வங்கிக்கணக்கிற்கு இந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் பதவி பெரிதும் உதவும்.
ராகுல் கடைசிக் காந்தி
ராகுல் காந்திக்கு என்று ஒரு தொலை நோக்கு கிடையாது. இந்தியப் பாது காப்புப் பற்றியோ வெளி நாட்டுக் கொள்கை பற்றியோ அல்லது இந்தியப் பொருளாதரம் பற்றிய அறிவோ அல்லது இந்தியாவை எந்தத் திசையில் கொண்டு செல்வதென்ற கொள்கையோ கிடையாது. இது வரை ராகுல் காந்திக்கு அமைச்சர் பதவி கொடுக்காததிற்கு முக்கிய காரணம் அவரது மொக்கை அமபலமாகி விடும் என்றுதான். ராகுல் பிரதம மந்திரியான பின்னர் அவர் அடிக்கவிருக்கும் கூத்துக்கள் இந்தியாவை பலதுறையிலும் மோசமாக்கும். அதன் பின்னர் காந்தி குடும்பத்தில் எவரும் இந்தியாவை ஆள முடியாது. இதற்கு இந்தியர்கள் தயாராக வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment