Sunday 15 July 2012

இந்தியாவினதும் அமெரிக்காவினதும் குட்டை உடைத்த வாஷிங்டன் போஸ்ற்

வாஷிங்டன் போஸ்ற் வெளியிட்ட படம்
அமெரிக்கப் பத்திரிகையான வாஷிங்டன் போஸ்ற் ஒரு வாரத்துக்குள் இலங்கை தொடர்பாக மூன்று கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. மூன்று கட்டுரைகளும் பிரபல்யம் பெற்றதுடன் அதிக பின்னூட்டங்களையும் பெற்றுள்ளன.

1. Abuse by Sri Lanka’s army rubs salt in wounds of war, Tamil women say.
2, Sri Lanka plays balancing act between U.S. and Iran.
3. Sri Lanka is descending toward dictatorship, rights activists and opposition leaders say; U.S. is determined to remain engaged.

இலங்கை வல்லரசு நாடுகளின் போட்டி நாடுகளின் போட்டிக் களமாக மாறிவிட்டது என்பதற்கு இந்த மூன்று கட்டுரைகளும் உறுதி செய்கின்றன ஒரு கட்டுரை அதைத் தெளிவாகத் தெரிவிக்கிறது:
The Indian Ocean island of Sri Lanka might seem an unlikely cockpit for a game of global power politics, but that is exactly what it has become.

அமெரிக்கா இலங்கை தொடர்பாக இந்தியாவின் வழமையான நிலைப்பாட்டில் இருந்து மாற்றி ஒரு புது நிலைப்பாட்டை இந்தியாவை எடுக்க வைக்க முயல்கிறது. ஆனால் இலங்கையிடம் தொடர்ச்சியாகத் தட்சணை பெற்று இலங்கைக்கு சாதகமாக இந்திய வெளியுறவுக் கொள்கையை வகுத்த இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாட்டை மாற்றுவது எளிதல்ல. அது மட்டுமல்ல இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் சாதி வெறியும் வர்ணாச்சிரம தர்மமும் மனுதர்மக் கொள்கையும் இலங்கையில் தமிழர்கள் அடக்கி ஆளப்பட வேண்டிய சூத்திரர்கள் என்ற நிலைப்பாட்டை இலகுவில் மாற்றுவது கடினம்.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட போர்க் குற்றங்களை வாஷிங்டன் சுட்டிக்காட்டத் தவறாத வேளை விடுதலைப் புலிகளை வழமை போல் ஒரு மோசமான பயங்கரவாத இயக்கமாக சித்தரிக்கிறது.  இலங்கையில் இனக்கொலை இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்தே ஆரம்பித்து விட்டது என்பதை வாஷிங்டன் போஸ்ற் கட்டுரையாளர் சைமன் டினையர் உணரவில்லை. இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான பயங்கரவாதம் 1956இல் தமிழர்களை உயிருடன் எரித்தும் உடமைகளைக் கொள்ளையடித்தும் குழந்தைகளைக் கொதி தாரில் போட்டுக் கொன்றும் ஆரம்பித்து வைக்கப்பட்டதையோ அதன் விளைவாக விடுதலைப் புலிகள் படைக்கலன்கள் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டதையோ கட்டுரையாளர் உணரவில்லை.

இலங்கைக்கு எதிராக பன்னாட்டு மட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்போது அதற்கு எதிரான ஊர்வலங்களில் தமிழர்களை இலங்கைப் படையினர் மிரட்டி பங்கு பெறச் செய்வதை வாஷிங்டன் போஸ்ற் அம்பலப் படுத்தியது.  இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான மிரட்டல்கள் கொலைகள் மற்றும் மக்கள் காணாமல் போதல் போன்றவற்றையும் அம்பலப்படுத்துயுள்ளது வாஷிங்டன் போஸ்ற்.

Another woman complained about soldiers turning up in her kitchen and demanding a cup of coffee. “We are scared,” said the mother of six. “More than that, I am frustrated, I am angry. It is a feeling you cannot describe.”

இலங்கைப் படையினர் சமையல் கட்டுக்குள் நுழைந்து காப்பி கேட்கிறார்கள் என ஒரு பெண் கூறியுள்ளார் என்கிறது வாஷிங்டன் போஸ்ற். ஆனால் இலங்கைப் படையினர் ஒரு வீட்டுக்குள் புகுந்து செய்யும் மிகவும் மரியாதையான செயல் காப்பி கேட்பதுதான் என்பதை கட்டுரையாளர் உணரவில்லை.

மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் கொல்லப்பட்டதை மூடி மறைத்து வெறும் 40,000 தமிழர்கள் மட்டும் கொல்லப்பட்டனர் என்கிறது வாஷிங்டன் போஸ்ற்.

தமிழர்கள் ஒருதிறந்த வெளிச் சிறைக்குள் வாழுகிறார்கள் என ஒரு கிருத்துவ பாதிரியார் சொல்லவதை வாஷிங்டன் போஸ்ற் வெளியிட்டுள்லளது:
Tamils feel as if they are living under an army of occupation, said Father S.M. Praveen, who runs the Center for Peace and Reconciliation in the northern town of Jaffna. “It is like an open prison,” he said. “The military decides everything.”Praveen said intimidation has increased since March, when the United States sponsored a U.N. Human Rights Council resolution calling on the Sri Lankans to promote postwar reconciliation. Four of his workers, who were documenting alleged human rights abuses and land grabs by the army, received death threats or were attacked by thugs who threw oil on them, the latest method of intimidating those who criticize the government or army. All four have been forced into hiding, he said.

இலங்கையில் சீனாவின் தலையீடு அதிகரிப்பதையும் அம்ப்பந்தோட்டையில் சீனா அமைத்த துறைமுகதையும் சுட்டிக்காட்டும் வாஷிங்டன் போஸ்ற் தனது பின்புறத்தில் சீனா ஆதிக்கம் வளர்வதையிட்டு இந்தியா கரிசனை கொண்டுள்ளது என்கிறது. இந்தியாவும் அமெரிக்காவும் அதிக ஈடுபாடு காட்டுவதற்கான காரணத்தை கட்டுரையாளர் சுட்டிக்க்காட்டுகிறார். போரின் போது முக்கியமானவர்களாக இலங்கையால் கருதப்பட்ட இந்தியாவையும் அமெரிக்காவையும் போர் முடிந்த பின்னர் இலங்கை ஓரம் கட்டுவதாக அமெரிக்காவும் இந்தியாவும் உணர்கின்றன என்கிறார் கட்டுரையாளர். இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மீறப்படுவதற்காகவோ தமிழர்களுக்கு எதிராக அநீதி இழைக்கப்படுவதற்காகவோ அமெரிக்காவும் இந்தியாவும் ஈடுபாடு காட்டவிலை. தாம் ஓரங்கட்டப்படுவதால் அவை இரண்டும் மனித உரிமை மீதும் இலங்கையில் ஒரு நல்லிணக்கம் தேவை என்பது போல் பாசாங்கு செய்கின்றன.

2 comments:

Anonymous said...

"அவை இரண்டும் மனித உரிமை மீதும் இலங்கையில் ஒரு நல்லிணக்கம் தேவை என்பது போல் பாசாங்கு செய்கின்றன"

superb

சத்தியா said...

தமிழர் நாம் குண்டுச் சட்டிக்குள் குதிரையோட்டிக் கொண்டிருக்கின்றோம். இப்படியான கட்டுரைகள் வெளிவரும் போது எமது புத்திஜீவிகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்? படித்து விட்டு எனக்கென்ன வந்தது என்று புரந்தள்ளிவிட்டு வாழவிருக்கின்றார்களா? இவ்வகையான கட்டுரைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கும் எம் போராட்டங்களின் உண்மை நிலையை எடுத்து இயம்புவதற்கும் ஏன் துணிகின்றார்கள் இல்லை? இப்படிப்பட்ட செய்திகளை எமக்கு சுட்டிக்காட்டுவதில் என்னபலன். சம்பந்தப்பட்ட கட்டுரையாளருக்கு உண்மை நிலையை தெரியப்படுத்தலாமே. அதன் பின் யார் பயங்கரவாதிகள் என்பதனை அவர்கள் புரிந்து கொள்வார்களே. செய்வார்களா?

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...