Thursday, 5 July 2012

பன்னாட்டு நீதி இலங்கைக்கு வேறு சிரியாவிற்கு வேறு

அரபு நாடுகளில் எழுந்த மல்லிகைப் புரட்சி, அரபு வசந்தத்தின் விளைவாக மேற்கு நாடுகளுக்கு எதிரான தனித்தன்னாட்சியாளர்கள் பதவியில் இருந்து விரட்டப்படுகின்றனர். சவுதி அரோபியா, பாரெயின் போன்ற மேற்குலகிற்கு சார்பான ஆட்சியாளர்களைக் கொண்ட நாடுகளில் தனித்தன்னாட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சிகள் வெளியார் உதவிகள் இல்லாமையால் அடக்கப்பட்டுவிட்டன.

சிரியக் கிளர்ச்சியின் பின்னணி
சிரியாவில் கடந்த ஐம்பது ஆண்டுகளாக பாத் கட்சி ஆட்சியில் இருக்கிறது.  மக்களுக்கு சரியான அடிப்படைஅக்கட்சியின் தலைவர் அல் பஷார் அதாத். பிரித்தானியாவில் மருத்துவம் கற்ற அல் பஷார் அசாத் அவரது தந்தையின் இறப்பின் பின்னர் பதவிக்கு வந்தார். இவரது ஆட்சியில் சிரியாவில் அரசியல் சீர்திருத்தங்கள் ஏற்படும் என்று எதிர்பார்த்தபோதிலும் அப்படி எதுவும் நடக்கவில்லை.  துனிசியாவில் பென் அலிக்கு எதிரான அரபு வசந்தம் சிரியாவிற்கும் பரவி அங்கு 15-03-2011இல் இருந்து அசாத்திற்கு எதிராக கிளர்ச்சி ஆரம்பித்தன. லிபியாவில் ஆட்சியில் இருந்த மும்மர் கடாந்பிக்கு எதிராக மேற்கு ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க நாடுகளின் படைத்துறைக் கூட்டமைப்பான நேட்டோ ஐக்கிய நாடுகள் சபையில் லிபிய விமானப் பறப்பபுக்களைத் தடுக்கும் தீர்மானத்தை வெற்றீகரமாகத்  நிறைவேற்றி விமானப்பறப்புக்களைத் தடுக்கும் போர்வையில் கடாஃபியின் படைகளை அழித்தன. ஆனால் அப்படியான தீர்மானம் ஒன்றும் சிரியாவிற்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபையில் நிறைவேற்ற முடியாமல் சீனாவும் இரசியாவும் தமது ஆபிரிக்கப் பிராந்திய நலன்களைக் கருத்தில் கொண்டு தம் இரத்து அதிகாரத்தைப் பாவித்து தடுத்து விட்டன.


கொடுக்க வேண்டியதைக் கொடுக்காமல் கெடுக்கின்றனர்.
சிரியக் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக நேட்டோ நாடுகள் துருக்கியினூடாக படைக்கலன்களை வழங்கினாலும் அவை ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இருக்கின்றன. தாம் வழங்கும் படைக்கலன்கள் இசுலாமியத் தீவிரவாதிகளின் கையில் போய்ச் சேர்ந்துவிடும் என்று அமெரிக்கா அஞ்சுகிறது. சிரிய ஆட்சியாளர்களுக்கு இரசியாவும் ஈரானும் படைக்கலன்களை கிளர்ச்சியை அடக்க வழங்குகின்றன. இந்த இரு அயோக்கியக் கும்பல்களிடை சிரிய மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர்.

சிரியா தொடர்பான முந்தைய பதிவு:போட்டிகளுக்குள் சிக்கிய சிரியக் கிளர்ச்சி

சிரியக் கொடுமைகள்
பஷார் அசாத்தின் படைகள் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக கடுமையாக நடந்து கொள்கின்றன. கடந்த பதினைந்து மாதங்களில் பதினையாயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர். கிளர்ச்சியாளர்கள் கடுமையாகச் சித்திரவதை செய்கின்றனர். சிரிய மக்களின் அவலத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை எதுவும் செய்ய முடியாமல் இருக்கின்றது. அதிகாரம் எதுவுமற்ற முன்னாள் ஐநா செயலர் கோபி அனானின் சமாதான முயற்ச்சிகள் படு தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.

நவி பிள்ளை அம்மையார்
லிபிய மக்களின் அவலத்தைக் கண்ட ஐக்கிய நாடுகளின் சபையின் மனித உரிமைக்கழகத்தின் ஆணையாளர் நவி பிள்ளை எனப்படும் நவநீதம் பிள்ளை அவர்கள் சிரியாவில் மக்களுக்கு எதிராக நடக்கும் அட்டூழியங்களுக்கான சாட்சியங்கள் கிடைத்திருப்பதால் பன்னாட்டு நீதிமன்றத்திற்கு இது எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அந்த அம்மையாரின் திருவாசகம் இப்படி இருந்தது:

  • "I believe the evidence points the commission of crimes against humanity." She quoted several human rights violations that provide rationale for referral of Syria’s case to International Criminal Court, like arbitrary detention, attacks on hospitals, extreme use of artillery and killings of suspected government informants.
சிரியாவில் ஒரு நாளில் மட்டும் இருபத்தி ஐந்தாயிரம் பேர் கொல்லப்படவில்லை. மொத்தமாக மூன்று இலட்சம் பேர் கொல்லப்படவில்லை. எந்த ஒரு ஐநா விசாரணைக்குழுவும் சிரியாவில் போர்க்குற்றமும் மானிடத்திற்கு எதிரான குற்றமும் நடந்ததமைக்கான போதிய ஆதாரங்கள் இருப்பதாகச் சொல்லவில்லை. சிரியப் படையினர் பெண்களை மானபங்கப்படுத்தி மார்புகளை கத்திகளால் குதறிக் கொல்லவில்லை. சிரியாவில் காயப்பட்டவர்கள் உயிரோடு புதைக்கப்படவில்லை.  சிரியாவில் சரணடையுங்கள் மறு வாழ்வு தருகிறோம் என்று சொல்லிவிட்டு சரணடைய வந்தவர்களைச் சுட்டுத் தள்ளவில்லை. ஆனாலும் சிரிய ஆட்சியாளர்களை பன்னாட்டு குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்கிறார் நவி பிள்ளை அம்மையார். அவரின் இத் துணிச்சலான கூற்றுக்குப் பாராட்டும் நன்றியும் தெரிவித்துக் கொண்டு இலங்கையில் இவ்வளவு அட்டூளியங்கள் நடந்தும் அவற்றிற்கான காத்திரமான சாட்சியங்கள் இருப்பதாக ஐநா நிபுணர் குழு அறிக்கை தெரிவித்திருந்தும், டப்ளின் தீர்ப்பாயம் இலங்கையில் போர்க்குற்றம் நடந்தது விசாரணை தேவை எனத் தெரிவித்திருந்த போதும், பல காணொளிப் பதிவுகள் வெளி வந்த போதும் இலங்கை ஆட்சியாளர்கள் பன்னாட்டுக் குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று நவி பிள்ளை அம்மையாரோ வேறு எந்த ஐக்கிய நாடுகள் உயர் அதிகாரிகளோ தெரிவிக்க வில்லை. கொலையாளிகளையும் கொல்லப்பட்டவர்களையும் நல்லிணக்கம் செய்யும் படி தீர்மானம் நிறைவேற்றாமல் ஏன் பன்னட்டுக் குற்றவியல் நீதி மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படவேண்டும்? பன்னாட்டு நீதி என்பது தண்ணீருக்கு வேறு மசகு எண்ணெய்க்கு வேறு.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...