இப்போது உலகின் பல பாகங்களிலும் உள்ள பெரும் பிரச்சனை உடல் எடையை உரிய நிலையில் வைத்திருப்பதே. மனிதனின் வேலைகளை இலகுவாக்க பல இயந்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனிதனுக்கு உடலால் செய்யக் கூடிய வேலை குறைந்து விட்டது. இதனால் மனிதனின் உடல் எறையைக் குறைக்க உடற்பயிற்ச்சி இயந்திரங்கள் உருவாக்கப்பட்டன. நகரங்கள் தோறும் உடற்பயிற்ச்சி நிலையங்கள் பல அமைக்கப்பட்டுள்ளன. உடற்பயிற்ச்சி செய்தும் எடை குறையாமைக்கான காரணங்கள்:
1. காலையில் போதிய உணவு எடுக்காவிடில் உடல் எடை கூடும். காலையில் தானியங்களை உண்பவர்கள் பின்னர் பசியால் அதிக உணவை உண்பார்கள். காலையில் முட்டை உண்பவர்கள் போதிய கலோரியும் புரதமும் பெறுவதால் அவர்கள் பின்னர் அதிக உணவு உண்பதில்லை.
2. காலையில் தேநீருக்குள் பால் கலத்தல். தேநீரில் உள்ள theaflavins and thearubigins ஆகியவை எமது குடல் கொழுப்பை உறிஞ்சுவதைக் குறைக்கும் தன்மை கொண்டவை என இந்திய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் தேநீருக்குள் பால் கலக்கும் போது அவை இந்தக் குடலில் கொழுப்பு உறிஞ்சும் தன்மையைக் கூட்டி விடுகின்றன.
3. வெள்ளைதான் எனக்குப் பிடிக்காத கலரு. வெள்ளைப் பாண், வெள்ளை அரிசிச் சாதம் போன்றவற்றை தவிர்த்து விட்டு மண்ணிறப்பாண் கறுப்பரிசிச் சாதம் சாப்பிடவேண்டும்.
4. உறைகளை (Lables) வாசிக்காதல். நீங்கள் உண்ணும் உணவுகளில் இருக்கும் கலோரிகள் மற்றும் கொழுப்பு சம்பந்தமான தகவல்கள் உணவுப் பொதிகளின் உறைகளில் இருக்கும் அவற்றை வாசித்து அதற்கேற்ப உங்கள் உணவுகளை உண்ணவும். உடற்பயிற்ச்சி செய்பவர்களிடை செய்த ஆய்வின்படி உறையில் இருப்பவற்றை வாசித்து அறியும் பழக்கம் உள்ளவர்கள் அப்பழக்கம் இல்லாதவர்களிலும் பார்க்க அதிக எடை இழப்பைச் செய்கிறார்கள் என்று அறியப்பட்டுள்ளது.
5. பழரசங்கள் அதிகம் அருந்துதல். பழரசங்களில் அதிக சீனி(சர்க்கரை) உள்ளது. அளவிற்கு அதிகமாக பழரசம் அருந்துதல் எடையை அதிகரிக்கும்.
6. தயிர்(yoghurt) உண்ணாமை. கொழுப்பு இல்லாத தயிர் உண்டால் அது உடலில் கொழுப்பு சேர்வதை அதிலும் முக்கியமாக வயிற்றுப் பகுதியில் கொழுப்புச் சேர்வதைக் குறைக்கும்.
7. உணவுப் படங்களைப் பார்த்தல். சஞ்சிகைகளில் வரும் உணவுப் படங்களைப் பார்த்தல் எமது உணவின் மீதான ஆசையைத் தூண்டி அதிகம் உண்ண வைகிறது என்று Professor Kathleen Page, a psychologist at the University of Southern California, செய்த ஆய்வு கூறுகிறது.
8. வேலையிடத்தில் நண்பர்களுடன் இணைந்து உண்ணுதல். வேலையிடத்தில் நண்பர்களுடன் இணைந்து உண்பவர்கள் அதிகமாக உண்பார்களாம்.
9. உணவுப் பாத்திரம். நீங்கள் உண்ணும் உணவும் உணவுப் பாத்திரமும் ஒரே மாதிரியான நிறத்தில் இருந்தால் அது உங்களை அதிகம் உண்ணத் தூண்டுமாம்.
10. உறக்கமின்மை. போதிய உறக்கமின்மை உங்கள் உடற்கூறுகளை அதிக எடை அதிகரிப்பை விரும்பச் செய்யும்.
11. தனித்து எடைக் குறைப்புச் செய்தல். நீங்கள் உங்கள் நண்பர்களுடன் இணைந்து எடைக்க்குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டால் தனித்து ஈடுபடுவதிலும் பார்க்க அதிக எடை இழப்பை ஏற்படுத்தலாம்.
12. சாப்பிடும் இடத்தில் கண்ணாடி இல்லாமை. நீங்கள் சாப்பிடும் இடத்திற்கு அருகில் முகக் கண்ணாடி இருந்தால் அது உங்களை குறைத்து உண்ணச் செய்யும்.
13. தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு உண்ணுதல். கையேந்தி நிலையில் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டு உண்ணும் போது நீங்கள் தேவைக்கு அதிகமாக உண்கிறீர்கள்.
14. பலதரப்பட்ட உணவுகளை வீட்டில் வாங்கிக் குவித்தல். வீட்டில் பலதரப்பட்ட உணவுகள் இருந்தால் நீங்கள் அதிகம் உண்பீர்கள். மிகக் குறைந்த தரப்பட்ட உணவுகள் வீட்டில் இருந்தால் ஒரே உணவைத் திருப்பித் திருப்பு உண்பதால் அலுப்புத் தட்டி நீங்கள் சிறிதளவே உண்பீர்கள்.
15. இணைவும் பிரிவும். புதிதாகத் திருமணமானவர்களும் விவாக இரத்துச் செய்தவர்களும் அதிக உணவை உண்டு அதிக எடை அதிகரிப்பைப் பெறுவதாக புள்ளி விபரங்கள் கூறுகின்றன.
16 தனியாக உடற்பயிற்ச்சி செய்தல். நீங்கள் தனியாக உடற்பயிற்ச்சி செய்வதிலும் பார்க்க நண்பர்களுடன் இணைந்து உடற்பயிற்ச்சி செய்தால் அதிக எடையை இழக்கலாம்.
17 வீட்டிற்குள் உடற்பயிற்ச்சி செய்தல். வீட்டிற்குள் உடற்பயிற்ச்சி செய்வதிலும் பார்க்க வெளியில் உடற்பயிற்ச்சி செய்தால் அதிக எடையை இழக்கலாம். வீட்டிற்குள் செய்தவதாயின் இசை கேட்ட படி செய்ய வேண்டும்.
18 மென்று உண்ணாமை. உணவை நன்கு மென்று உண்ண வேண்டும். நன்கு மென்று உண்ணாவிடில் எடை அதிகரிக்கும்.
19 உங்கள் வயது. உங்கள் வயது அதிகரிக்கும் போது உங்கள் உணவைக் குறைக்க வேண்டும்.
20. உங்கள் பெற்றோர்கள். உங்கள் உடலில் உள்ள பரம்பரைக் குணத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் சம்பந்தம் உண்டு. சிலர் எவ்வளவு சாப்பிட்டலும் மெலிதாக இருப்பதற்கு இதுதான் காரணம்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
thax
Post a Comment