திநகர் குமரன்ஸ் புடவை கடையில் ஒருவர் ஒரு ஒட்டகச் சிவிங்கியுடன் போனார். அங்கு அவர் நிறைய ஆடைகளை வாங்கி விட்டு அவர் சட்டைப் பைக்குள் கை வைத்தார் பை அவ்வளவு கனமாக இல்லாததை அவதானித்தேன் ஆனால் கடைக்காரர் கேட்ட சரியான தொகையை அவர் தன் சட்டைப்பையில் இருந்து எடுத்துக் கொடுத்தார். பணத்தை எண்ணக் கூடவில்லை. மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பின்னர் வெளியே வந்தார். அவர் பின்னே ஒட்டகச் சிவிங்கியும் சென்றது. அவர் பிரின்ஸ் ஜுவல்லேர்ஸ் நகைக் கடைக்குள் போனார். ஆவல் மீதியால் அவர் பின்னே சென்றேன் அங்கும் நிறைய நகைகளை வாங்கிவிட்டு கடைக்காரர் கேட்ட தொகையை பைக்குள் இருந்து எடுத்துக் கொடுத்தார். என் கண்களையே நம்ப முடியவில்லை. அவர் பின்னே அவர் ஒட்டகச் சிவிங்கியும் செல்ல நானும் தொடர்ந்தேன். இப்போது அவர் ரங்கநாதன் தெருவில் சரவணா ஸ்டோர்ஸ் சென்றார். மீண்டும் அதே கதை.
என்னால் எனது ஆர்வத்தைத் தடுக்க முடியவில்லை. அவரை சரவணா ஸ்டோர்ஸின் வெளியில் வைத்து மறித்து எப்படி ஐயா இப்படி உங்களால் வெறும் சட்டைப்பையில் இருந்து சரியான தொகைப் பணத்தை ஒவ்வொரு தடவையும் எடுக்க முடிகிறது என்றேன். அவர் என்னைப் பனகல் பார்க்கிற்கு அழைத்துச் சென்று தன் கதையைக் கூறினார். நான் பொருளியலிலும் அரசற்வியலிலும் முதுமானப் பட்டம் பெற்ற பின்னர் எனக்கு கல்லூரியொன்றில் விரிவுரையாளராக வேலை கிடைத்தது. அந்த வருமானம் போதாததால் சவுதி அரேபியாவில் ஒரு செல்வந்தர் வீட்டில் வேலைக்காரனாக வேலைக்குச் சென்றேன். அங்கு ஒன்றரை ஆண்டுகள் வேலை செய்த பின்னர் ஒரு நாள் வீட்டில் இருந்த பழைய பொருட்களைத் துப்பரவு செய்யும் போது ஒரு விளக்கை தேய்த்த போது அதில் இருந்து ஒரு பூதம் கிளம்பி வந்து வேண்டும் வரம் இரண்டு கேள் என்றது. திருமணமாகாத எனது மூன்று தங்கைகளை மனதில் நினைத்துக் கொண்டு பெரும் தொகைப்பணம் கேட்க யோசித்தேன். பின்னர் பெரும் தொகைப்பணம் கையில் இருந்தால் வருமானவரி செலுத்துவது, தாதாக்களுக்கு அளப்பது, அரசியல்வாதிகளுக்கு அளப்பது அது இது எல்லாவற்றையும் நினைத்து விட்டு நான் சட்டைப்பைக்குள் கைவைக்கும் போதெல்லாம் வேண்டிய பணம் வேண்டும் என்று வரம் தரும்படி கேட்டேன். என்று சொல்லித் தன் கதையை முடித்தார். நன்கு படித்தவர் என்றபடியால் பூதத்திடம் நன்கு யோசித்து உங்கள் வரத்தை கேட்டீரகள் என்று அவரைப் பாராட்டினேன். பின்னர் அது சரி ஐயா ஏன் இந்த ஒட்டகச் சிவிங்கி உங்கள் பின்னால் தொடர்ந்த படியே வருகிறது என்றேன்.
அவர் சிரித்து விட்டு பூதம் இரண்டு வரங்கள் எனக்குக் கொடுத்தது. தீபிகா படுகோனை மனதில் நினைத்துக் கொண்டு நான் கேட்ட இரண்டாவது வரம் நிண்ட அழகிய பளபளப்பான கால்கள் நீண்ட கழுத்துடன் என்பின்னால் வாலைச் சுருட்டிக் கொண்டு தொடரக்கூடிய ஒரு சுப்பர் ஃபிகர் வேண்டும் எனக் கேட்டேன், கிடைத்தது இதுதான் என்றார்.
கதையின் நீதி: ஒருவன் எவ்வளவு பெரிய அறிவாளியாக இருந்தாலும் தனக்கான பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் தன் அறிவைக் கோட்டை விட்டு விடுவான்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
4 comments:
முதல் பந்தி....
அருமை நகைச்சுவை கையாண்ட விதம் கலக்கல் வாழ்த்துக்கள்..!
super story
waw supper message :)
நீதி சொன்ன நீதிமான் வாழ்க.. வாழ்க..
Post a Comment