Friday, 25 May 2012

களம் பல கண்டோம்.... உய்ய விடுமா இந்தியா

கடாரத்தில் களமாடிய தமிழர்
கலிங்கத்தில் களமாடிய தமிழர்
இமயத்தில் களமாடிய தமிழர்
என இன்றும் சொல்லலால்
பயனுண்டோ பெருமையுண்டோ

சிந்து நதிக்கரையில் இருந்து
புலம் பெயர்ந்தது யார்
வட வேங்கட மலை வரை
நிலமிழந்தது யார்
கதிரமலையில்
பலமிழந்தது யார்

காலி முகத்திடலில்
களமாடி காடையரால்
உதைபட்டது யார்
கச்சேரி முன்றனில்
களமாடி வதைபட்டது யார்

எம்மிளைஞர்கள் ஆடிய களம்போல்
அர்பணித்த தியாகம் போல்
கண்டதுண்டோ கேட்டதுண்டோ
வாலியைக் கொன்றது போல்
பின்னாலிருந்து கொன்றது யார்

எக்களமாடினாலும்
எத்தியாகம் செய்தாலும்
இந்தியா என்றொரு நாடு
பக்கத்தில் இருக்கும்வரை
விடிவில்லை எமக்கு
முடிவில்லை எம் துயரிற்கு


No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...