இந்தியாவில் வாழும் பார்ப்பனர்கள் தங்கள் ஆலோசனைப் படியே இந்தியா ஆளப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். அதனால் இந்தியாவின் பல உயர் பதவிகளில் அவர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை அவர்களே தீர்மானிக்கிறார்கள். இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்கள் தங்கள் சாதிய நலன்களுக்கு இலங்கைத் தமிழர்கள் ஆளக்கூடாது என்று கருதுகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை தமிழர்கள் சூத்திரர்கள் அவர்கள் அடிமையாக இருக்க வேண்டியவர்கள். அவர்களின் திட்டம் வடக்குக் கிழக்கில் வாழும் தமிழர்களும் மலையகத்தில் வாழும் தமிழர்களைப் போலவே வாழ வேண்டும் என்பதே. இதற்காக அவர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களைக் கூடக் கருத்தில் கொள்ளாமல் இலங்கையில் சீன ஆதிக்கத்தை வளரவிட்டனர். சீனாவின் உதவியுடந்தான் இலங்கையில் தமிழர்களின் ஆயுத போராட்டத்தை ஒழிக்க முடியும் என்பது அவர்களுக்கு நன்கு தெரியும். சிங்கள் ஆட்சியாளர்களுடன் இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் நல்ல நெருக்கமான உறவுகளைப் பேணி வருகிறார்கள். அவர்களின் வீட்டுத் திருமண வைபவங்களுக்கு கோத்தபாய ராஜபக்ச போன்றவர்கள் அழைக்கப்பட்டுகிறார்கள்.
இலங்கை தொடர்பாக இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் தற்போதைய பிரச்சனைகள் இரண்டு. ஒன்று 2014-ம் ஆண்டு நடக்கவிருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை அடிபடக் கூடாது. இரண்டாவது 2014இல் இந்தியாவில் ஆட்சி மாறினாலும் இந்தியாவின் இலங்கைத் தமிழர்களை அடக்கி வைக்கும் கொள்கை மாறக்கூடாது. இதற்காகவே இந்தியப் பாராளமன்றக் குழுவின் இலங்கைப் பயணத்தை அவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
இலங்கையில் போருக்குப் பின்னர் தமிழர்களின் நிலைபற்றி அறிந்து கொள்வதே இந்தியப் பாராளமன்றக் குழுவின் இலங்கைப் பயணத்தின் நோக்கம் என்று கூறப்பட்ட போதிலும் மறை முகத்திட்டம் இந்திய எதிர்கட்சியும் தமிழர்களை அடக்கி வைக்கும் கொள்கையைக் கடைப்பிடிக்கச் செய்வதே. இதன் மூலம் 2014 பாராளமன்றத் தேர்தலில் இலங்கைப் பிரச்சனைய முன்வைத்து எதிர்கட்சி தமிழ்நாட்டில் பிரச்சாரம் செய்யாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் தமிழர்கள் தொடர்பாக ஒரே கொள்கையுடையதாக ஆக்கிவிட்டால். தேர்தல் முடிவுகளை தமிழர்கள் பிரச்சனை பாதிக்காது. காங்கிரசு தோல்வியடைந்து எதிர்க்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இலங்கைத் தமிழர்கள் அடக்கப்படும் கொள்கை மாறாது.
இறுதியில் அசிங்கம் அம்பலம்
சுஸ்மா இலங்கையில் இருக்கும் போதே இந்தியா இலங்கையில் பல்லாயிரக் கணக்கான் அப்பாவித் தமிழர்களைக் கொன்றும் 3500இற்கு மேற்பட்ட பெண்களை மானபங்கப்படுத்தியும் இலட்சக் கணக்கானோரை வீடிழக்கச் செய்தும் கொண்டுவந்த இலங்கை அரசமைப்பிற்கான 13வது திருத்தத்தில் சொல்லப்பட்டபடி தமிழர்களுக்கு காணி மற்றும் காவல்துறை தொடர்ப்பான அதிகாரங்கள் வழங்கப்பட மாட்டாது என இலங்கை அதிபர் திட்டவட்டமாக அறிவித்து இந்தியாவின் முகத்தில் கரி பூசினார். ஏற்கனவே இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மஹிந்த தன்னிடம் 13வது திருத்தத்தில் உள்ள அதிகாரங்களிலும் பார்க்க அதிக அதிகாரங்களைத் தமிழர்களுக்கு வழங்குவேன் எனத் தெரிவித்ததாக பீற்றிக் கொண்டார். பின்னர் மஹ்ந்த தனது நண்பர் ஒருவரின் பிறந்த நாள் வைபவத்தில் தான் இந்திய வெள்யுறவுத் துறை அமைச்சரை ஏமாற்றியதாகச் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொண்டர். இலங்கை சென்ற சுஸ்மா சுவராஜ் இறுதியில் மஹிந்த ராஜபக்சவைத் தனியாகச் சென்று சந்தித்தார். இது தூதுக் குழுவின் நிகழ்ச்சி நிரலில் இருந்திருக்கவில்லை. இது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் இரகசிய நிகழ்ச்சி நிரலின் படி நடந்ததா? சந்திப்பில் தட்சணை பரிமாறப்பட்டதா? இந்தக் கேள்விகளுக்கு விடை தெரியும். இறுதியில் சுஸ்மா சுவராஜ் தனது உண்மையான வடிவத்தை வெளிப்படுத்தினார். ஒன்று பட்ட இலங்கையே தமது கொள்கை என்றார். இலங்கை அரச ஊடகங்கள் தொடர்ந்து இந்தியப் பாராளமன்றக் குழு இலங்கை அரசைப் பாராட்டுவதாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டே இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
1 comment:
உங்கள் இணையதளத்திற்கு ஏராளமான வாசகர்கள் வரவேண்டுமா...? http://www.hotlinksin.com/ திரட்டியில் உங்கள் ஒவ்வொரு பதிவுகளையும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.
Post a Comment