Friday, 20 April 2012

ஜெயலலிதா சொன்னது யாழ்ப்பாணத்தில் உண்மையானது

இந்தியப் பாராளமன்றக் குழு இலங்கை செல்லும் என்றவுடன் ஜெயலலிதா குழுவின் நிகழ்ச்சி நிரலைப் பார்த்தேன் அதில் விருந்துகளும், அரசின் கொண்டாட்ட நிகழ்ச்சிகளுமே அதிகம் இடம்பெற்றுள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களிடம் பேசுவதற்கு போதுமான சந்தர்ப்பங்கள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. இந்தப் பயணம் வெறும் கண் துடைப்பாகத் தான் அமையும் என்பது தெளிவாகியுள்ளது. சிறிலங்கா அதிபருடன் தமிழர் பிரச்சினை குறித்து விவாதிக்கும் ஒழுங்குகள் கூட இல்லை. அவருடன் விருந்து உண்ணவே ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

ஜெயலலிதா சொன்னது போல் இந்தியப் பாராளமன்றக் குழு மஹிந்தவைச் சந்தித்து சலாம் போட்டு வணங்கி விருந்துண்டது. இந்தியப் பாராளமன்றக் குழு விமானத்தில் இலங்கை செல்லாமல் மீனவர் படகில் சென்றிருந்தால்?????
யார் யாரோ எல்லம் சேர்ந்திருந்து வெட்டுறாங்கள்

இந்தியப் பாராளமன்றக் குழுவிறு எதிராக ஆர்ப்பாட்டம்
யாழ்ப்பாணம் சென்ற சுஸ்மா சுவராஜ் தலைமையிலான  இந்தியப் பாராளமன்றக் குழு 18-ம் திகதி புதன் கிழமை அதிக தமிழ்ப் பாராளமன்ற உறுப்பினர்களைக் கொண்ட அரசியல் கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உதவித் தூதுவரகத்தில் சந்திக்க ஏற்பாடாகி இருந்தது. அந்தச் சந்திப்பில் தாமும் கலந்து கொள்ள இலங்கைப் படைத்துறை அதிகாரியும் வட மாகாண ஆளுனருமான ஜீ.ஏ.சந்திரசிறியும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் சென்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியப் பாராளமன்றக் குழு என்ன உரையாடுகிறது என்பதை அறிவதே இவர்களின் நோக்கம். ஆனால் இந்திய உதவித் தூதுவர் இவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்தியப் பாராளமன்றக் குழுவும் நடாத்திய சந்திப்பில் இருவரையும் அனுமதிக்காமல் வெளியில் இரண்டு மணித்தியாலங்கள் காக்க வைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த இவர்கள். மறுநாள் நல்லூர் முருகன் கோவிலுக்கு இந்தியப் பாராளமன்றக் குழு செல்லும் போது அவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய பலரை பேருந்து வண்டிகளில் கொண்டு வந்து இறக்கி வைத்திருந்தனர். இதனை அறிந்த இந்தியத் தரப்பினர் தமது நல்லூர் முருகன் கோவில் தரிசனத்தை இரத்துச் செய்தனர். இலங்கையில் இந்தியா வாக்களித்த 50,000வீடுகளின் கட்டுமானம் தடைபட்டமைக்கு இந்தியாவைக் குற்றம் சாட்டினார் வட மாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி. இந்தியா ஐந்து இலட்சம் ரூப்பாக்கள் செலவில் ஒரு வீடு அமைப்பதாக உறுதி அளித்துவிட்டு இப்போது ஒன்றரை இலட்சம் செலவில் அமைக்கிற்து என்பதையும் அவர் அம்பலப்படுத்தினார்.


யாழ் அரச செயலக ஊழியர்களுக்குத் தடை
இலங்கை அரசு யாழ்ப்பாண அரச செயலக ஊழியர்களுக்கு இந்தியப் பாராளமன்றக் குழுவைச் சந்திக்கக் கூடாது என உத்தரவிட்டார். போருக்குப் பின்னர் யாழ்ப்பாணம் வந்த சகல வெளிநாட்டுப் பிரதிநிதிகளையும் சந்தித்து இலங்கை அரசுக்கு ஆதரவாகக் கதைத்த யாழ்ப்பாண அரசாங்க அதிபர் (இந்தியாவின் மாவட்டக் கலேக்டர்) கூட இந்தியப் பாராளமன்றக் குழுவைச் சந்திக்காதது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.


கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புறக்கணிப்பு
இந்தியப் பாராளமன்றக் குழு கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பிற்கு செல்லும் போது நடக்கவிருக்கும் சந்திப்பிற்கு உள்ளூர் நாடாளமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் அழைக்கப்படவில்லை. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும், அரசாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்களும், இந்திய பாராளுமன்ற குழுவின் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நடாத்துவது உண்மை கண்டறிய எவ்விதத்திலும் உதவமாட்டாது. இந்தியக் குழு ஏதாவது விதத்தில் இவர்களைச் சந்திக்க வேண்டும்.

எம்ஜீஆரின் பெயருக்கு இழுக்கு
மஹிந்த ராஜபக்சவின் கைக்கூலி எனக் கருதப்படுபவரும் ஈழத் தமிழர்களின் விரோதியாகக் கருதப்படுபவரும் கடந்த இந்தியப் பாராளமன்றக் குழு இலங்கை வந்த போது மஹிந்தவிற்குப் பொன்னாடை போர்த்திய பன்னாடையுமான சுதர்சன நாச்சியப்பன் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரை மறைந்த தமிழ்நாட்டு முதல்வர் எம் ஜீ இராமச்சந்திரனுக்கு ஒப்பிட்டு ஈழத்தமிழர்களுக்கு ஒரு காலகட்டத்தில் பேருதவி புரிந்த எம் ஜீ இராமச்சந்திரனை கேவல்ப்படுத்தியுள்ளார்.

பேரினவாதிகளுக்குத் தமிழர் பிரச்சனை புரியாது.
ஒரு பேரினவாதியும் பேரினவாதக் கட்சியைச் சேர்ந்தவருமான சுஸ்மா சுவராஜ் அவர்களுக்கு இலங்கை இனப்பிரச்சனையைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். இவர்கள் இந்தியாவில் உள்ள அதிகாரப் பரவலாக்கத்திற்கு அதிகாமான எதுவும் இலங்கைத் தமிழர்களுக்குக் கிடைக்க சம்மதிக்க மாட்டார்கள். உண்மையில் இந்தியாவில் உள்ளது அதிகாரப் பரவலாக்கம் அல்ல அது ஒரு நிர்வாகப் பரவலாக்கமே. இந்திய மாநில அரசுகளை மினுக்கப்பட்ட மாநகரசபைகள் (glorified municipal councils) என்றே அரசறிவியலாளர்கள் சொல்லுவர். இந்தியப் பாராளமன்றக் குழு இலங்கை சென்ற நாள் முதலாய் இலங்கை அரச ஊடகங்கள் இந்தியப் பாராளமன்றக் குழு அதற்குப் பாராட்டுத் தெரிவித்தது இதற்குப் பாராட்டுத் தெரிவித்தது என்று தொடர்ந்து செய்திகளை வெளிவிட்ட வண்ணம் இருக்கின்றன. யாழ்ப்பாணத்திற்கு சென்றவுடன் சுஸ்மா தான் யாழ்ப்பாணத்தின் அபிவிருத்தி கண்டு ஆச்சரியமடைந்தேன் என்றார். எப்படி இருக்க வேண்டிய யாழ் அன்னியர் ஆட்டியால் இப்படி இருக்கிறது என்று அந்தப் பேரினவாதி அறிந்திருக்க முடியாது. உள்ளூர் அரசியல் தொடர்பாக அவரது அறிவு அவர் நெற்றியில் இருக்கும் பொட்டை விடச் சிறியதே.
நமஸ்தே மஹராஜ்ஜீ நான் சுவராஜ்

ஜெயலலிதா தனது சொந்த அரசியல் செல்வாக்கை மனதில் கொண்டு முடிவு எடுத்தாலும் அவர் தனது கட்சியைச் சேர்ந்த பாராளமன்ற உறுப்பினர்கள் இலங்கை செல்ல மாட்டார்கள் என எடுத்த முடிவு சரியானதே.

1 comment:

Anonymous said...

தமிழரின் துயர் கேட்டறியப் போனார்களா? அல்லது நரமாமிச பட்சினி சிங்களவன் வீசி எறியும் தமிழரின் எலும்புத் துண்டங்களைப் பொறுக்கப் போனார்களா? இந்த கூட்டம்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...