Monday, 9 April 2012

பங்களாதேசத்திற்குள் இந்தியப் படைகள் செல்லுமா?

கிழக்குப் பாக்கிஸ்தானிற்குள் இந்தியப் படைகள் புகுந்து அதைப் பாக்கிஸ்தானில் இருந்து பிரித்து பங்களாதேசத்தை தனி நாடாக்க உதவின. மீண்டும் இந்தியப் படைகள் பங்களாதேசத்துக்குள் ஊடுருவலாம் என இப்போது கருதப் படுகிறது. பங்களா தேச அரசின் அனுமதியுடன் இது நடக்கலாம். இது தொடர்ப்பன செய்திகள் இப்போது கசிந்துள்ளன.

இந்திய பங்களாதேச இணையவெளிப் போர்(Bangladesh-India Cyber War)
இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் Black Hat Hackers என்னும் பெயர் கொண்ட பங்களாதேசத்தின் இணைய ஊடுருவிகள்(Hackers) பாக்கிஸ்த்தான், சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய எமிரேட் அரசு ஆகிய நாடுகளின் இணைய ஊடுருவிகளின் உதவியுடன் இந்தியாவின் 25,000இற்கு மேற்பட்ட வலைத்தளங்களைத் தமதாக்கிக் கொண்டனர். இதில் இந்திய எல்லைப் பாதுகாப்புப் படைப் பிரிவு உட்படப் பல முக்கிய இணையத் தளங்களும் அடங்கும். இவை இந்திய இணைய ஊடுருவிகள் பங்களாதேசத்தின் பல அரச இணையத் தளங்களை ஊடுருவியமைக்குப் பதிலடியாக அமைந்தது. பங்களாதேச இணைய ஊடுருவிகள் ஏழு கோரிக்கைகளை வைத்து இந்தியாவை மிரட்டினர்:
1. இந்தியா பங்களாதேச இணையத் தளங்களை ஊடுருவக் கூடாது.
2. இந்திய பங்களாதேச எல்லையில் அப்பாவி பங்களாதேசிகளைக் கொல்லக் கூடாது
3. திபாமுக் அணை கட்டுவதை இந்தியா நிறுத்த வேண்டும்.
4. பங்களாதேசத்துடன் நீர் பங்கீட்டு ஒப்பந்தம் செய்ய வேண்டும்.
5. இந்தியத் தொலைக்காட்சிச் சேவைகளை பங்களாதேசத்தில் ஒளிபரப்புதை நீக்க வேண்டும் அல்லது பங்களாதேச் தொலைக் காட்சிச் சேவைகள் இந்தியவில் ஒளிபரப்புவதற்கான தடையை நீக்க வேண்டும்.
6. பங்களாதேச எல்லையில் இந்தியாவின் படை நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.
7. பங்களாதேச மக்களுக்கு எதிரான எந்த நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளக் கூடாது.

பங்களாதேச இணைய ஊடுருவிகள் பங்களாதேசத்தில் செயற்படும் இசுலாமியத்தீவிரவாதிகள் எனவும் இவர்களுக்கு பாக்கிஸ்த்தான், சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய எமிரேட் ஆகிய நாடுகளில் இருக்கும் தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக இந்தியத் தரப்பு கருதுகிறது. பங்களாதேசத்தில் இருக்கும் தீவிரவாதிகள் பங்களாதேச ஆட்சியாளர்கள் இந்திய ஆதரவாளர்களாக இருக்கிறார்கள் என்றும் இதைப்பாவித்து இந்தியா பங்களாதேசத்தைச் சுரண்டுகிறது என்றும் கருதுகிறார்கள்.

ஒரு இந்திய ஆதரவாளரான பங்களாதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா தனது நாட்டில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளை இந்தியாவுடன் இணைந்து ஒளித்துக் கட்டத் திட்டமிடுகிறார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் சிறப்புத் தூதுவர் சதிந்தர் லம்பா ஏப்ரல் 5ம் திகதி பங்களாதேசத்திற்கு ஒரு பயணத்தை மேற்கொண்டார். அவர் பங்களாதேசத்தில் இருந்து இந்தியாவிற்குள் இசுலாமியத் தீவிரவாதிகள் ஊடுருவுவதைத் தடுக்க இருதரப்புப் படைத்துறை ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். இந்திய பங்களாதேச எல்லையினூடாக தீவிரவாதம், கள்ளநோட்டுக்கள், ஆயுதங்கள், போதைப் பொருட்கள் போன்றவை இந்தியாவிற்குள் நுழைகின்றன. அது மட்டுமல்ல பாக்கிஸ்த்தானின் உளவுத் துறைக்குச் சேவை செய்யும் வியட்னாமியர் ஒருவர் நேப்பாள எல்லையூடாக பலகோடி இந்தியக் கள்ள பணத்தாள்களுடன் பிடிபட்டார்.

மேற்குறிப்பிட்ட பிரச்சனைகளுக்கு தீர்வாக இந்தியப் படைகள் பங்களாதேசத்துக்குள் சென்று அங்குள்ள ஒரு இசுலாமியத் தீவிரவாதிகள் ஒழிப்பு நடவடிக்கையில் விரைவில் ஈடுபடலாம்.


4 comments:

தமிழ்மகன் said...

நம்மை முட்டாள் ஆக்கும் கூகுள் !

Read This Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/profit-sharing-phenomenon.html

Anonymous said...

Bangladesh should learn from Tamils.
IPKF killed thousands of innocent Tamils and stirpped thousands of Tamil women of thier dignity..

Anonymous said...

////இந்த ஆண்டு பெப்ரவரி மாதம் Black Hat Hackers என்னும் பெயர் கொண்ட பங்களாதேசத்தின் இணைய ஊடுருவிகள்(Hackers) பாக்கிஸ்த்தான், சவுதி அரேபியா, மலேசியா, இந்தோனேசியா, ஐக்கிய எமிரேட் அரசு ஆகிய நாடுகளின் இணைய ஊடுருவிகளின் உதவியுடன் இந்தியாவின் 25,000இற்கு மேற்பட்ட வலைத்தளங்களைத் தமதாக்கிக் கொண்டனர்.//// இது இசுலாமியத் தீவிரவாதிகள் செய்ததுனா ????

///இவை இந்திய இணைய ஊடுருவிகள் பங்களாதேசத்தின் பல அரச இணையத் தளங்களை ஊடுருவியமைக்குப் பதிலடியாக அமைந்தது. ////

இது என்ன இந்து தீவிரவாதிகள் செய்ததா ????

ஹா ஹா ஹா வேடிக்கை !!!!

Anonymous said...

THANKS FOR SAYING ISLAMIC EXTREMISTS...OTHERS SAY TERRORISTS

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...