Sunday, 8 April 2012

உயிர்த்தெழும் எம் ஞாயிறு


கல்வாரி மலையிலே
தொடர்ந்தது தேவன் பயணம்
கால்வாரி இந்தியாவை நம்பித்
தொடங்கியது எம் போராட்டம்

சிலுவை சுமந்து சென்றான் தேவன்
தீயாகங்கள் சுமந்து சென்றது எப்போராட்டம்

மன்னாதி மன்னனை தேவாதி தேவனைத்
தேசத் துரோகி என்றனர்
தியாகத்தின் உச்சித் திலங்கங்களை
பயங்கரவாதிகள் என்றனர்.

முட்கிரீடம் தாங்கிச் சென்றான் தேவன்
நச்சுப் பதக்கம் எந்தினர் எம் தியாகிகள்

முப்பது காசுக்காக காட்டிக்
கொடுத்தான் தேவாதி தேவனை
பிராந்திய ஆதிக்கத்திற்கு
கூடி அழித்தனர் எம் இனத்தை

சிலுவையில் அறையப்பட்டவன்
மூன்றாம் நாள் எழுந்தான்
முள்ளி வாய்க்காலில்
வனவாசம் முடித்து
அஞ்ஞாத வாசம் தொடங்கியவன்
வருவான் நாளை

கற்பிட்டியும் எதிரியின்
புதைகுழியாகும்
மன்னாரும் தமிழன்
இன்னார் என உரைக்கும்

பாலாவியில் எதிரி
ஆவிபோகும்
கீரிமலையும் திருமலையும்
எரிமலையாகும்

அம்பாறைக் கரும்பும்
இரும்பாய் மாறி
எதிரி மேற்பாயும்
படுவான் கரையும்
எழுவான் கரையாய் மாறும்
எழுவான் கரையில்
எதிரி விழுவான் நிரையாக

நம்பியிருங்கள்
உயிர்த்தெழும் எம் ஞாயிறு
கொதித்தெழும் எம் ஈழம்
பரலோக ஆட்சி
இகம் வரும் முன்பே
தமிழன் ஆட்சி
ஈழத்தில் மலரும்

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...