Wednesday, 18 April 2012

சீனாவிற்கு ஆப்பு வைக்கும் இந்தியாவின் அடுத்த ஏவுகணை அக்னி -5.

அக்னி - 5
 இந்தியா தனது அக்னி - 5 என்னும் கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகளைப்(Inter-Continental Ballistic Missile-ICBM) பரிசோதிக்க விருக்கிறது. ஒடிசாவின் வீலர் தீவில் இருந்து அக்னி - 5 ஏவப்படவிருக்கிறது. இதற்கு முந்திய அக்னி ஏவுகணைகள் பாக்கிஸ்த்தானைப் பதம் பார்க்கும் வல்லமை கொண்டவை. அக்னி - 5 சீனாவை இலக்கு வைத்து உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அக்னி - 5 ஏவுகணைகள் 5000கிமீ இற்கு அப்பால் சென்று தாக்கக் கூடியதாக இருக்கலாம். இலக்கை laser gyroscope தொழில் நுட்பம் மூலம் கண்டறிந்து தாக்கும் திறனை அக்னி - 5 ஏவுகணைகள் கொண்டிருக்கும். அக்னி - 4  3500கிமீ வரை சென்று தாக்கும் வல்லமை உடையது.இந்தியாவின் படை வல்லமையில் இது ஒரு மைல்கல்லாக அமையலாம் என்று கூறப்படுகிறது.
click on picture to enlarge..

உலகில் ஐக்கிய அமெரிக்கா, இரசியா, பிரான்ஸ், சீனா ஆகிய நாடுகள் மட்டுமே கண்டம் விட்டுக் கண்டம் பாயும் எறியியல் ஏவுகணைகளைப்(Inter-Continental Ballistic Missile) பாவிக்கும் திறன் கொண்டவை. வட கொரியா அண்மையில் பரிசோதித்த ஏவுகணை நிலத்தில் இருந்து ஏவப்பட்ட 90 நொடிகளில் வெடித்துச் சிதறியதால் பல படைக்கல விற்பன்னர்கள் தங்கள் கவனத்தை இந்தியாவின்பால் ஆர்வத்துடன் திருப்பியுள்ளனர்.
 
அக்னி-3 இன் தாக்கும் திறன்
 அக்னி - 5 ஆல் அமெரிக்கக் கண்டத்தைத் தவிர மற்ற நான்கு கண்டங்களையும் அணுக் குண்டால தாக்கும் வல்லமையை இந்தியா பெறும். ஆயிரம் கிலோ எடையுள்ள குண்டுகளை இதனால் வீச முடியும். இலகுவாக தெருவில் வைத்தும் ஏவக்கூடிய வகையில் அக்னி - 5 வடிவமைக்கப்பட்டுள்ளது. அகனி - 5 இன் அடுத்த கட்டமாக செய்மதிகளைக் அழிக்கக் கூடிய ஏவுகணைகளை இந்தியா தயாரிக்கலாம்.

2012 மார்ச் 5-ம் திகதி பாக்கிஸ்த்தான் Hatf-II battlefield range ballistic missile பரிசோதனையை வெற்றீகரமாக முடித்ததாக அறிவித்திருந்தது.

கடல் தரை வான் ஆகிய மும் முனைகளிலும் இந்தியா அணுக்குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்ளும் திறனை அக்னி - 5 வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அக்னி - 5 மூன்று தட்டுக்கள் கொண்டதும் திரவ எரிபொருளில் இயங்கக் கூடியதுமாகும். அதன் மொத்த உயரம் 17 மீட்டர்கள்.
 மூன்று தட்டும் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து தேவையான உயரத்திற்கு செல்ல உதவும். முதல் தட்டு இயந்திரம் 40 கிமீ உயரத்திற்கும் இரண்டாவது 150 கி மீ உயரத்திற்கும், மூன்றாவது 300 கி மீ உயரத்திற்கும் எடுத்துச் செல்லும்.

தமிழர்களைப் பொறுத்தவரை இந்தியா வல்லரசாக முன் நல்லரசாக வேண்டும் என்பதே.
பிந்திக் கிடைத்த செய்திகளின்படி சீரற்ற கால நிலை காரணமக இன்று918/04/2012) இந்திய நேரப்படி மாலை 7-00 மணிக்கு ஏவவிருந்த அக்னி -5 பின் போடப்ப்ட்டுள்ளது.
ஏவுகணை வெற்றீகரமாக ஏவப்பட்டது: 19/04/2012 காலை இந்தியா தனது அக்னி - 5 ஏவுகணையை வெற்றீகரமாக ஏவியது. பன்னாட்டு அணு ஆயுத மற்றும் ஏவுகணை ஒப்பந்தங்களை இந்தியா மீறுவதை மேற்குலக நாடுகள் கண்டும் காணாமல் விட்டுவிடுவதாகவும் இந்தியா தனது பலத்தை மிகைப்படுத்தி எண்ணக் கூடாது என்றும் சீன ஆளும் கட்சியின் ஏடு ஒன்று தெரிவித்தது/

1 comment:

HOTLINKSIN.COM said...

இப்போது http://tamil.hotlinksin.com/ இணையதளத்தில் தமிழ் செய்திகளை இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெறலாம்.
அதே போல ஆங்கிலத்தில் செய்திகளை http://www.hotlinksin.com இணையதளத்திலும் இணைத்து ஏராளமான வாசகர்களைப் பெற்றிடுங்கள்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...