Monday 19 March 2012

இந்தியா தோற்றுவிட்டது: இலங்கையில் சீனாவுடனான போட்டியில்

1977இற்குப் பின்னர் இலங்கையில் அமெரிக்கா திருக்கோணமலைத் துறை முகத்திலும் சிலாபத்திலும் காலூன்றத் திட்டமிட்டபோது அதை தடுக்க தமிழர்களுக்கு உதவுவது போல் இந்தியா பாசாங்கு செய்து கொண்டு இலங்கை இனப்பிரச்சனையில் தலையிட்டது. இலங்கையில் தமிழர்களின் போராட்டத்திற்கு உதவுவது போல் இந்தியா நடித்தது. இலங்கையில் ஏற்கனவே இருந்த ஆயுதப் போராட்டக் குழுக்களுக்குள் பிளவுகள் ஏற்படுத்தியும் புதிய ஆயுதக் குழுக்களை ஏற்படுத்தியும் இந்தியா சதி செய்தது. அப்போது இந்திய அரசின் சார்பாக தமிழ் ஆயுதக் குழுக்களுடனான தொடர்பாடல் ஒருங்கிணைப்பு இந்துப் பத்திரிகை ஆசிரியர் ராம் ஊடாக மேற்கொள்ளப்பட்டது. ஆயுதக் குழுக்களுடனும் அரசியல் கட்சிகளுடனும் தொடர்பை ஏற்படுத்திய பார்ப்பனர் ராமிற்குப் பெரும் அதிர்ச்சி. அங்கு அவாளுடைய ஆளுவள் யாரும் முக்கிய பதவியில் இல்லை. இலங்கைத் தமிழர்கள் மத்தியில் அவாள் ஒரு இரண்டாந்தர "சாதியாகவே" காணப்பட்டா. யாழ் மேட்டுக் குடியினரின் நிலை அப்படி இருந்தது.

ஈழத் தமிழர்களின் அவாளுக்கு முக்கியமில்லாத நிலைப்பாடு தமிழகத்திலும் பரவினால் என்ன செய்வது என்று அவாள் யோசிக்கத் தொடங்கினாள். விளைவு ஈழத் தமிழர்கள் விடுதலைப் போராட்டம் எப்பாடு பட்டாவது ஒடுக்கப்பட வேண்டியது என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் சகல சதிகளையும் மீறி ஈழத் தமிழர்கள் ஆயுத ரீதியில் பலம் பெற்று வருவது அவாளையும் டில்லி அதிகார மையமான தென்மண்டலத்தில் இருக்கும் அவாள் ஆட்களையும் கடுமையாகச் சிந்திக்க வைத்தது. தனிய இந்தியாவின் உதவியுடன் ஈழத் தமிழர்கள் போராட்டத்தை சிங்களவர்களால் அடக்க முடியாது என்று டில்லி அதிகார மையமான தென்மண்டலத்தில் இருக்கும் அவாள் ஆட்களால் உணரப்பட்டது. இலங்கைக்கான உதவிகளைச் சீனாவில் இருந்து பெறலாம் என்று இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்தியாவின் எதிர்ப்பைச் சம்பாதிப்பதைத் தவிர்க்க சீனாவிடம் இருந்து பகிரங்க உதவிகளைப் பெறத் தயங்கி இருந்த இலங்கை சீனாவிடமிருந்து ஈழத் தமிழர்களின் போராட்டத்திற்குப் பெரும் உதவிகள் பெறத்தொடங்கியது.  பின்னர் இந்தியா ஒரு பெரும் பொய்யைச் சொன்னது: "இலங்கைக்கு ஈழத் தமிழர்களுக்கு எதிரான போரில் தான் உதவாவிடில் சீனா இலங்கைக்கு உதவி சீனா இலங்கையைத் தன்வசமாக்கிவிடும்." விளைவு ஈழத் தமிழ்ர்கள் வகை தொகையின்றிக் கொல்லப்பட்டனர். இதனால்தான் அம்பாந்தோட்டையில் சீனா துறைமுகம் அமைக்க இந்தியா வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது

இலங்கையில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியாவால் கட்டுப்படுத்த முடியவில்லை. பல படைத்துறை ஆய்வாளர்கள் இது பற்றி பல எச்சரிக்கைகளை இந்தியாவிற்கு விடுத்த போதும் தமிழர்களின் போராட்டத்தை ஒழித்துக் கட்டுவதே சிவ் சங்கர் மேனன் எம் கே நாராயணன், சோனியா காந்தி ஆகியோரின் ஒரே நோக்கமாக இருந்தது. இதற்காக அவர்கள் இந்தியாவின் பிராந்திய நலன்களையும் பலியிட்டனர்.


இந்தியாவின் அதர்ம சங்கட நிலை
பெப்ரவரி மாதம் 27-ம் திகதி தொடங்கி ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும்  மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்பட்ட தீர்மானத்தை எதிர்ப்பது என்று இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டனர். இதை இந்தியாவின் தற்போதைய  நிதியமைச்சர் பிரணாப் முஹர்ஜீ (இவர் 2009இல் இந்தியாவின் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்தபோது சிங்களவர்களுடன் பெரிதும் ஒத்துழைத்தவர்)  ஏற்கனவே பகிரங்கமாக அறிவித்து விட்டார். இலங்கைக்கு ஆதரவாக இந்தியா செயற்பட்டால் 2012இல் நடக்க இருக்கும் இந்தியப் பாராளமன்றத் தேர்தலில் ப சிதம்பரம் சிவகங்கைத் தொகுதியில் தில்லு முல்லு செய்தாலும் வெல்ல முடியாத நிலை ஏற்படும். காங்கிரசுடன் சேர்ந்தால் திமுக ஒரு தொகுதியில் தன்னும் வெல்ல முடியாத நிலை ஏற்படும். இதனால் ப சிதம்பரம் அவசரமாக சோனியா காந்தியைத் தேடி ஓடினார். ஆனால் சோனியாவோ ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவால் கடுமையாக மிரட்டப்பட்டுள்ளார். இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தால் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்புப் போரில் இந்தியா செய்த பங்களிப்புக்களை பகிரங்கப் படுத்துவேன் என்பதே மஹிந்த விடுக்கும் மிரட்டல். ஆதரித்தால் இன அழிப்புக்கு செய்த பங்களிப்பு அம்பலமாகும் ஆதரிக்காவிட்டால் தமிழ்நாட்டில் 2014 நடக்கவிருக்கும் தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க வேண்டும்.

இந்தியாவின் மூன்றாம் பிரச்சனை
ஜெனீவாவில் இந்தியா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டால் அது மேற்கு நாடுகளின் வெறுப்பையும் சம்பாதிக்க வேண்டி வரும். இலங்கையில் ஏற்பட்டுள்ள சீன ஆதிக்கத்தை விலக்கவே அமெரிக்கா இலங்கைப் போரின் போது நடந்த அத்து மீறல்களுக்கான பொறுப்புக் கூறல் என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளது.

 இந்தியாவின் தோல்வி
ஜெனீவாவில் சீனா திவிரமாக இலங்கைக்கு ஆதரவு தெரிவிக்கிறது. இதியா இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படாவிடில் சினாவுடனான சிங்களவர்களுக்கு உதவும் போட்டியில் இந்தியா படு தோல்வியடைந்து விட்டது என்பது உறுதி செய்யப்படும்.

இந்தியா மீண்டும் சதி செய்யுமா?
பாரதப் போரில் கண்ணன் தான் கையில் ஆயுதமின்றி பாண்டவர்களுடனும் தனது யாதவப் படை கௌரவர்களுடனும் இருப்பதாகக் கூறிக் கொண்டு எல்லோரையும் அழித்தான். இந்தியாவும் அந்த மாதிரியான சதியை பெப்ரவரி மாதம் 27-ம் திகதி தொடங்கி ஜெனீவாவில் நடந்து கொண்டிருக்கும்  மனித உரிமைக்கழகத்தின் 19வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக முன்மொழியப்படும் தீர்மானத்திலும் செய்யலாம்.இந்தியா செய்யக் கூடிய சதிகள்:
  • முன்மொழியப்படும் தீர்மானத்தில் இலங்கைக்கு சாதகமான மாற்றங்களைச் செய்யும் படி அமெரிக்காவை வேண்டலாம். 
  • இந்தியா தனக்கு ஆதரவான நாடுகளை இலங்கைக்கு சாதகமாக வக்களிக்கத் தூண்டலாம்.
ஈழத் தமிழர்களின் சுதந்திரப் போரை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற வெறி இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் தூர நோக்குப் பார்வையை மறைத்து விட்டது. சீனாவிடம் தோல்வியடைந்த இந்தியா இனி இலங்கையில் மேற்குலகத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியை எப்படிக் கையாளப் போகிறது?

    No comments:

    Featured post

    உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

    விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...