தென் அமெரிக்க நாடுகளில் இருந்து பாக்கிஸ்த்தான் மற்றும் தூரகிழக்கு நாடுகளில் உள்ள மனிதாபிமானமுள்ள பத்திரிகைகள் இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் மனித உரிமைக்கழகத்தில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானத்திற்கு ஆதரவாக ஆசிரியத் தலையங்கங்கள் தீட்டிக் கொண்டிருக்க, சனல் - 4 தொலைக்காட்சி அதிக அக்கறை எடுத்து இலங்கையின் போர்க்குற்றங்களை வெளிக்கொண்டுவந்து கொண்டிருக்க அல்ஜசீராத் தொலைக்கட்சி இலங்கையில் நல்லிணக்கம் சாத்தியமா என்று கேள்வி எழுப்ப தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் பார்ப்பனர்களால் நடத்தப்படும் இந்துப் பத்திரிகையான இலங்கைக்கு எதிரான கட்டுப்பாடுகள் சிங்களத் தேசியவாதத்தைத் தீவிரப்படுத்திவிடும் என்று எச்சரித்து சிங்களவர்களுக்கு வக்காலத்து வாங்குகிறது. எல்லாம் தட்சணை செய்கிற வேலை. இந்திய என்.டி.ரிவி தொலைக்காட்சியில் ஜெனீவாவில் கொண்டுவரப்படவிருக்கும் தீர்மானம் தொடர்பான கலந்துரையாடல் வந்த போது அதில் இருவர் இலங்கைக்கு வக்காலத்து வாங்கினர். சுப்பிரமணிய சுவாமி, ஜி. பார்த்தசாரதி ஆகிய இரு பார்ப்பனர்கள் அவர்கள். எல்லாம் தட்சணை செய்கிற வேலை.
என்.டி.ரிவி தொலைக்காட்சியில் 12 வயதுச் சிறுவன் கொல்லப்பட்ட படம் காட்டியபோது அதை சிரித்துக் கொண்டு பார்த்துக் கொண்டிருந்தார் சுப்பிரமணிய சுவாமி. இதைப் பற்றி பிரித்தானியாவில் வாழும் இலங்கையைச் சேர்ந்த பி ஏ காதர் என்னும் அரசியல் ஆய்வாளர் தனக்கு அதைப்பார்க்கும் போது சுப்பிரமணிய சுவாமியை அறைய வேண்டும் போல் இருந்தது என்றார். எல்லாம் தட்சணை செய்கின்ற வேலை.
துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பேசிய இன்னொரு பார்ப்பனரான சோ என்ற தமிழின விரோதி ராஜபக்சவைப் பாராட்டினார். சுவாமி இன்னும் ஒருபடி மேலே போய் மஹிந்த ராஜபக்சவிற்கு பாரத் ரத்னா பட்டம் வழங்க வேண்டும் என்றார். எல்லாம் தட்சணை செய்கிறவேலை.
தமிழ்நாட்டில் இந்தியா ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்படக் கூடாது என்ற குரல் வலுவாகவும் பரவலாகவும் ஒலிப்பதைப் பார்த்தவுடன் இந்திய பாதுகாப்புச் ஆலோசகர் சிவ் சங்கர மேனன் தமிழ்நாடு சென்று முதல்வர் ஜெயலலிதாவைச் சந்திக்க முயல்கிறார். எல்லாம் தட்சணை செய்கின்ற வேலை.
பத்தாயிரம் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட 1983-ம் இலங்கை இனக்கலவரத்தை அப்போதைய பாரதப் பிரதமர் ஒரு இனக்கொலை என்றார். இந்திய சட்டவாளர் அமைப்பும்(Bar Association of India) அதையே சொன்னது. 2008-2009 இலங்கையும் இந்தியாவும் இணைந்து நடத்திய இன அழிப்புப் போரின் போது மூன்று இலட்சம் அப்பாவித் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். அதை இந்தியப் பாராளமன்றத்தில் ஒரு உறுப்பினர் இனக்கொலை எனக் கூறிய போது அது கடும் எதிர்ப்புக்கு உள்ளாகி அவர் சொன்ன வார்த்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. எல்லாம் தட்சணை செய்கிற வேலை.
ஜெனிவாவில் இருந்து வரும் செய்திகளின்படி இந்தியா திரைமறைவில் இலங்கைக்கு ஆதரவாகச் செயற்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் இந்தியாவின் அதிகார மையமான தென்மண்டலத்தில் இருக்கும் பார்ப்பனர்கள் தமிழின விரோதிகளாகவும் சிங்கள சார்பானவர்களாகவும் இருப்பதுதான். எல்லாம் தட்சணை செய்கிற வேலை.
ராஜபக்ச! தொடர்ந்து தட்சணையை வழங்கிக் கொண்டிருங்கள். ஷேமமாய் இருபீர். எல்லாவற்றையும் அவாள் பார்த்துக்குவா.....
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
அவா பக்ஷேயை நன்னாத்தானே பாத்துகிறா. இதுக்கு மேல என்ன?
Post a Comment