இசுலாமிய நாடுகளில் துருக்கி, இந்தோனேசியா, சவுதி அரேபியா ஆகியவற்றுக்கு அடுத்தபடியா நான்காவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டது ஈரான். ஒபெக் நாடுகளில் இரண்டாவது பெரிய எரிபொருள் ஏற்றுமதி நாடு ஈரான். ஐக்கிய அமெரிக்காவின் திறைசேரி ஈரானின் ஐந்து அரச வங்கிகளின் மீது தடை விதித்ததைத் தொடர்ந்து ஈரானின் வெளியுலக நாணயத் தொடர்புகள் முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது என்று சொல்கப்படுகிறது. ஐக்கிய அமெரிக்காவின் பராக் ஒபாமாவின் நிர்வாகம் ஈரானியப் பொருளாதாரத்திற்கு ஒரு சுருக்குக் கயிறைப் போட்டது. ஈரானின் மத்திய வங்கியுடன் எந்த வங்கியாவது தொடர்புகளை வைத்திருந்தால் அந்த வங்கிகள் அமெரிக்க டாலரின் பன்னாட்டுக் கொடுப்பனவு முறைமையில் இருந்து விலக்கப்படும் என்ற அறிவிப்பே அந்தச் சுருக்குக் கயிறு. பல வங்கிகள் அதை ஏற்றுக் கொண்டன. இது ஈரானிய நாணயத்தின் மதிப்பைப் பெரிதும் பாதித்தது. ஐரோப்பிய ஒன்றியம் ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதியைத் தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஜப்பானும் தென் கொரியாவும் ஈரானில் இருந்து எரிபொருள் இறக்குமதி செய்வதைக் குறைத்துக் கொண்டன. இது ஈரானியப் பொருளாதாரத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஈரானிய நாணயமான ரியாலின் பெறுமதி ஃபெப்ரவரி முதலாம் திகதி(நேற்று) 11% வீழ்ச்சியடைந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் ஈரானிய நாணயம் 80% பெறுமதிக் குறைவு. இப்போது ஒரு அமெரிக்க டாலர் 20,500 ரியாலகளாக இப்போது விற்கப்படுகிறது. ஏற்பட்டது. ஈரானின் மத்திய வங்கியால் ஈரானின் வட்டி வீதம் 20% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது நாட்டில் உள்ள சந்தை வட்டி வீதத்திலும் அரைப்பங்கு என்று சொல்லப்படுகிறது.
எண்ணெய் விலை அதிகரிப்பு
பெப்ரவரி முதலாம் திகதி எண்ணெய் விலையும் ஒரு டாலரால் அதிகரித்தது. இவ் அதிகரிப்புக் காரணம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் நாணயப் பிரச்சனையும் கிரேக்கத்தின் கடன் பிரச்சனையும் தீர்க்கப்படும் அறிகுறி காணப்படுவதும் ஒரு காரணம். இப்பிரச்சனைகள் தீர்க்கப்பட்டால் உலகப் பொருளாதாரம் வளர்ச்சியடையும் அதனால் எண்ணெய்க்கான தேவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
டாலர் என்று குறுந்தகவல் அனுப்பத்தடை
ஈரான் தனது நாணயமான ரியால் விற்கப்படுவதைத் தடுக்க பெரும் முயற்ச்சி செய்கிறது. மேற்கு நாடுகளின் நாணயங்களான டாலர், யூரோ, பவுண் ஆகியவை வாங்குவதைத் தடை செய்துள்ளது. ஈரானில் கைப்பேசிகளினூடாகவும் மின்னஞ்சல்கள் ஊடாகவும் "டாலர்" என்ற சொல் அனுப்புவதை ஈரான் தடை செய்துள்ளது. இரகசியக் காவல்துறையினர் சாதாரண உடையில் நாணயப் பரிவர்த்தனை நிலையங்களுக்குச் சென்று டாலர் வாங்க முடியுமா என்று விசாரித்து இரகசியமாக டாலர்களை விற்பவர்களைக் கைது செய்கிறது.
ஈரானியப் பொருளாதாரம் மேலும் மோசமடையலாம்
ஐக்கிய அமெரிக்க அரசு ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையைத் தீவிரப்படுத்தும் போது ஈரானியப் பொருளாதாரம் மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிலர் ஈரானிய நாணயத்தில் மதிப்பிறக்கத்திற்கு பொருளாதாரத் தடையிலும் பார்க்க மனோதத்துவக் காரணிகளே அதிகம் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்கின்றனர். ஈரானில் பல அத்தியாவசியப் பொருள்களுக்குத் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இத்தனை பிரச்சனைகளுக்கு மத்தியிலும் ஈரானியப் பொருளாதாரம் அடுத்த 12 மாதங்களில் 8% வளர்ச்சியடையும் என்று ஈரானிய அதிபர் மஹ்மூத் அஜ்மடிநெஜாத் தெரிவித்துள்ளார். பன்னாட்டு நாணய நிதியம் 2011இல் ஈரானியப் பொருளாதாரம் வளர்ச்சி ஏதும் அடையவிலலை என்கிறது.
ஈரானில் விலைவாசி பெரிதும் அதிகரிப்பு
ஈரான் எரிபொருளை ஏற்றுமதி செய்து பல பொருட்களை இறக்குமதி செய்கிறது. ரியாலின் பெறுமதி வீழ்ச்சியால் ஈரானில் பொருட்களின் விலைகள் பெரிதும் அதிகரித்துள்ளது.
அமெரிக்கா வாங்கவிருக்கும் அடி
தனது நாணயத்திற்கு உலகில் இருக்கும் நம்பிக்கையை ஒரு ஆயுதமாகப் பாவித்து ஈரானியப் பொருளாதாரத்தை சில நாட்களில் உலகில் இருந்து தனிமைப் படுத்திவிட்டது அமெரிக்கா. ஒரு சில நாட்களில் ஈரானிய நாணயத்தின் பெறுமதியை 40% குறைத்தும் விட்டது. ஆனால் அமெரிக்க டாலரில் நம்பிக்கை வைத்து அதை ஒரு பன்னாட்டு நாணயமாக ஏற்றுக் கொண்ட நாடுகளை இது சிந்திக்க வைக்கலாம். இன்று ஈரானுக்கு நடப்பது நாளை எமக்கு நடக்கலாம் என்ற சந்தேகம் பல நாடுகளுக்கு ஏற்பட்டால் அவை வேறு மாற்று வழிகளைத் தேடலாம். இது அமெரிக்காவிற்கோ உலக பொருளாதார வளர்ச்சிக்கோ ஏற்புடையதல்ல. ஈரானிய எரிபொருள் ஏற்றுமதி தடைபட்டால் எண்ணெய் விலை 20 முதல் 30 டாலர்களால் அதிகரிக்கலாம் என்று பன்னாட்டு நாணய நிதியம் எதிர்வு கூறியுள்ளது. சவுதி அரேபியா தனது எண்ணெய் உற்பத்தியை அதிகரித்து ஈரானிய் ஏற்றுமதி நிறுத்தத்தை ஈடுசெய்யலாம். அது எந்த அளவிற்கு ஈடு செய்யும் என்பதை எதிர்வு கூறமுடியாமல் இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment