ஈரானின் அணுக்குண்டுத் தயாரிப்புத் திட்டத்தைத் தொடர்ந்து ஐக்கிய அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் முறுகல்கள் தீவிரமடைந்து வருகின்றன. ஈரானை அணுக்குண்டு தயாரிக்கவிடாமல் தடுக்க ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதித்தன. இந்த ஆண்டு ஆரம்பத்தில் பாரசீக வளைகுடாவிற்குள் வெளிநாட்டுப் போர்க்கப்பல்கள் வருவததைத் தடுக்கும் சட்டமூலம் ஈரானியப் பாராளமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அத்துடன் ஈரானியப் படைத் தளபதி அமெரிக்கப் போர்க்கப்பல்கள் பாரசீகக் குடாவையும் ஓமான் வளைகுடாவையும் இணைக்கும் எரிபொருள் விநியோக முக்கியத்துவம் வாய்ந்த ஹோமஸ் நீரிணைக்குள் வரக்கூடது என்று எச்சரித்தார்.
2011 ஆகஸ்ட் மாதம் ஈரானுக்குச் சென்ற பன்னாட்டு அணுசக்தி முகவரகம் ஈரான் இரகசியமாக அணுக்குண்டு தயாரிக்கிறது என்பதையிட்டு தாம் கரிசனை கொண்டுள்ளதாக தெரிவித்தது. அதைத் தொடர்ந்து ஈரான் மீது யாராவது தாக்குதல் நடாத்தினால் அவர்கள் ஈரானின் இரும்புக் கரங்களைச் சந்திக்க வேண்டிவரும் என்று எச்சரித்தது. பின்னர் நவம்பர் மாதம் ஈரானில் உள்ள பிரித்தானியத் தூதுவரகம் ஈரானியர்களால் ஆக்கிரமிக்கப்பட்டது.
31-01-2012இலன்று ஐக்கிய அமெரிக்க மூதவையின் உளவுக் குழுவிற்கு ஐக்கிய அமெரிக்க உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் ஆர் கிலப்பர் வழங்கிய அறிக்கையில் ஈரான் அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்தலாம் எனத் தெரிவித்தார். ஈரானின் உச்ச தலைவரான அலி கமயினி போன்றோர் ஈரான் மீது மேற்குலகம் திணிக்கும் பொருளாதாரத் தடை ஈரானிய அரசைக் கவிழ்க்கும் எண்ணம் கொண்டதாயின், தேவை ஏற்படின், அமெரிக்க மண்ணில் தாக்குதல் நடத்தும் என்று தெரிவித்துள்ளார். அத்துடன் ஐக்கிய அமெரிக்கவினதோ அல்லது வேறு மேற்கு ஐரோப்பிய நாடுகளினதோ நலன்கள் மீது ஈரானிய ஆதரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்றும் ஜேம் ஆர் கிலப்பப்ர் எச்சரித்துள்ளார்.
ஈரானுடனான நேரடி மோதலைத் தவிர்க்கவே ஐக்கிய அமெரிக்கா அதன் மீது பொருளாதாரத் தடைகளை ஏற்படுத்தியது. அத்துடன் இஸ்ரேல் ஈரானின் அணு உற்பத்தி நிலைகள் மீதோ யூரேனியம் பதப்படுத்தும் நிலைகள் மீதோ தாக்குதல் நடாத்தாமல் இருக்க ஐக்கிய அமெரிக்கா பெரும் பாடுபடுகிறது. ஈரானிய அணு விஞ்ஞானிகள் தொடர்ந்து கொல்லப்படுவது ஈரானை ஆத்திரத்திற்கு உள்ளாக்கியுள்ளது.
அல் கெய்தா ஆபத்து இப்போதும் உள்ளது.
ஐக்கிய அமெரிக்க மூதவையின் உளவுக் குழுவிற்கு உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் ஆர் கிலப்பர் அல் கெய்தாவின் ஆபத்து இப்போதும் உள்ளது என்று தெரிவித்தார். அல் கெய்தா பாரிய தாக்குதல்களை ஐக்கிய அமெரிக்க மண்ணில் நடத்த முடியாவிடினும் அதனால் சிறு தாக்குதல்களைச் செய்ய முடியும் என்றார்.
போர் ஆபத்து தொடர்கிறது
ஈரானுக்கும் ஐக்கிய அமெரிக்காவிற்கும் இடையிலான போர் ஆபத்து இன்னும் விலகவில்லை என்பதை அமெரிக்க அரசின் நிலைபற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் சில வரிகளும் உறுதி செய்கின்றன. ஒபாமா தனது உரையில் ஈரானின் அணுஆயுத உற்பத்தியை தடுக்க எந்த ஒரு தெரிவையும் தான் மேசையில் இருந்து விலக்கவில்லை என்று தெரிவித்தார். - I will take no options off the table to achieve that goal.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment