Friday, 27 January 2012

பலான குடும்ப நகைச்சுவைகள்

ஒரு பேருந்து விபத்தில் பலர் இறந்துவிட்டனர். அதில் பயணம் செய்த மூன்று நண்பர்கள் சொர்க்கத்திற்குச் சென்றனர். அங்கு அவர்களுக்கு பல வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன. அவர்கள் வாகன வசதி செய்யும் பகுதிக்குச் சென்றபோது "நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு உண்மையாய் இருந்தீர்கள் என்பதைப் பொறுத்தே உங்களுக்கான வாகனங்கள் வழக்கப்படும்" என்று சொல்லப்பட்டது. முதல் போன சேகருக்கு பென்ஸ் கார் கொடுக்கப்பட்டது. பின்பு சந்துருவிற்கு பிஎம்டபிளியூ கார் வழங்கப்பட்டது. பின்னர் மணிக்கு ஒரு பழைய அம்பாஸடர் கார் வழங்கப்பட்டது. மூவரும் தங்கள் வண்டிகளை ஓட்டிச் சென்று சொர்க்கத்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு பின்னர் மாலை சந்த்தித்தனர். அதில் பென்ஸ்கார் பெற்ற சேகர் மிகக் கவலையுடன் காணப்பட்டான். மற்றவர்கள் காரணம் கேட்டபோது "இல்லை மச்சான் எனது மனைவிக்கு பழைய மிதிவண்டி ஒன்று கொடுத்திருக்கிறாங்கள்" என்றான்.

மகன்: அப்பா நம்பிக்கைக்கும் இரகசியத்திற்கும் என்ன வித்தியாசம்.
அப்பா: உனக்கும் உன் நண்பனுக்கும் நரேனுக்கும் உள்ள வித்தியாசம் போல்....நீ என் மகன் என்பது நம்பிக்கை..... நரேன் என் மகன் என்பது இரகசியம்.

மனைவி: நான் பாடும்போதெல்லாம் ஏன் போய் மொட்டையில் நிற்கிறீர்கள்/
கணவன்: அல்லாவிடில் பக்கத்து வீடுகளில் இருப்பவர்கள் நான் உன்னை உதைக்கிறேன் என்று நினைப்பார்கள்.

வாகனத்தில் எனது மனைவியும் பக்கத்தில் இருக்க ஓட்டிக் கொண்டிருந்தேன் வழியில் ஒரு நிறச் சைகையில் தரித்து நிற்கையில் பக்கத்து வண்டிக்காரன் தன் வண்டியில் பக்கத்தில் இருந்த பெண்ணின் முகத்தில் தடவிக் கொண்டிருந்தான். அதைக் காட்டி என் மனைவி அங்கு பாருங்க அவன் மனைவியை எவ்வளவு அன்பாக வருடிக் கொடுக்கிறான் நீங்களும் இருக்கிறியளே என்றாள். உனக்குத் தெரியாது அவனது மனைவி இன்று வேலைக்குப் போய்விட்டாள் அவன் தனது காதலியுடன் இப்போது இருக்கிறான். நானும் அப்படிச் செய்யவா என்றேன் நான்.

உனது தவறுகளைப் பார்த்து நீயே சிரித்தால் உன் ஆயுள் அதிகரிக்கும்.
உன் மனைவையின் தவற்களைப் பார்த்து நீ சிரித்தால் நீ அற்ப ஆயுளில் போகலாம்.

உன் காதலியை காதலிப்பவனுக்கு என்ன செய்யப் போகிறாய்?
அவனுக்கு சரியான தண்டனை அவளையே திருமணம் செய்வதுதான்.

மனவி: ஏன் எங்கள் marriage certificateஐத் திருப்பித் திருப்பி பார்த்துக் கொண்டே இருக்கிறீர்கள்?
கணவன்: எங்காவது  expiry date இருக்கிறதா என்று பார்க்கிறேன்.

இருக்கையிலும் இன்பம் தரும்
படுக்கையிலும் இன்பம் தரும்
வாகனத்தின் பின் ஆசனத்திலும் இன்பம் தரும்
அது என்ன?
கண் மூடிச் செய்யும் தியானம்

தத்துவங்களும் பொருள்களும்
தத்துவம்: பணம்தான் வாழ்க்கை என்றில்லை
பொருள்: கடன் அட்டையும் தான்.

தத்துவம்: மிருகங்கள் மீது அன்பு காட்டுங்கள்
பொருள்: ஏனெனில் அவை சாப்பிடச் சுவையானவை.

தத்துவம்: புத்தகங்கள் புனிதமானவை
பொருள்: அவற்றைத் தொடக்கூடாது

தத்துவம்: உங்கள் அயலவரை நேசியுங்கள்
பொருள்: ஆனால் பிடிபடக்கூடாது.

3 comments:

HOTLINKSIN.COM said...

கலக்கலான நகைச்சுவைகள். உங்கள் பதிவுகளை hotlinksin.comல் பகிரலாமே

Unknown said...

தத்துவங்களும் பொருள்களும் சூப்பர்............

குறுக்காலபோவான் said...

தத்துவங்களும் பொருளும் அருமை
ஆனால் இந்த பதிவில் உள்ள பலான ஜோக் ஏற்கனவே பிரபல பதிவர் 'ஜாக்கி சேகர்' தன் தளத்தில் வெளியிட்டுவிட்டார்.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...