Saturday 28 January 2012

நகைச்சுவைக் கதை: காணாமல் போன மனைவி

அன்று சுந்தரின் சம்பள நாள் இரண்டு நாள். வீட்டுக்குப் போனால் மனைவி முழுப்பணத்தையும் அபகரித்து விடுவாள் என்று சுந்தர் இரண்டு நாட்கள் நண்பர்களுடன் வெளியோர் சென்று தங்கி நன்றாக குடித்துக் கும்மாளமடித்து விட்டுத் திரும்பினாள். வீடு திரும்பினான். பத்திரகாளியாக மனைவி ஜானகி. இரண்டு நாட்களாக காணவில்லை எங்கு போனாய் என்று கூச்சலிட்டாள் ஜனகி. சுந்தர் தான செய்த எல்லாவற்றையும் ஒன்றும் விடாமல் சொன்னான் சுந்தர். எல்லாவற்றையும் கேட்டுவிட்டு மனைவி ஜானகி நான் ஒரு வாரம் காணமல் போனால் உனக்கு எப்படி இருக்கும் என்றாள். அது மிக மகிழ்ச்சிகரமான ஒரு வாரமாக இருக்கும் என்று தன் மனதுக்குள் நினைத்த சுந்தர் ஒரு மாதிரிச் சமாளிப்பேன் என்றான். சமாளிப்பியா மவனே சமாளிபியா என்று கேட்டுக் கொண்டே சரமாரியாக சுந்தரின் மூஞ்சியில் குத்து விழுந்தது. ஒரு வாரம் கழித்து முகத்தில் உள்ள வீக்கங்கள் போனபின்னர்தான் அவனால் கண்திறந்து மனைவியைப் பார்க்கக் கூடியதாக இருந்தது.


இரகசியமாகக் கதைத்த பையன்
அவர் ஒரு சட்டவாளர். தனது கட்சிக்காரர் ஒருவரின் இலக்கத்திற்கு தொலைபேசி அழைப்பு விடுத்தார். மறுமுனையில் ஒரு சிறுவன் இரகசியமாக ஹலோ என்றான். சட்டவாளர் வீட்டில் அப்பா இல்லையா என்றார். அப்பா பிஸியாக இருக்கிறார் என்றான் சிறுவன் இரகசியமாக. வீட்டில் அம்மா இருக்கிறாரா என்றார் சட்டவாளர். அம்மா சரியான பிஸி என்றான் சிறுவன் மீண்டும் இரகசியமாக. வீட்டில் வேறு யார் பெரியவங்க இருக்கிறார்கள் என்றார் சட்டவாளர். காவல்துறையினர் இருவர் என்றான் பையன் மீண்டும் படு இரகசியமாக. அவர்களிடம் போனைக் கொடு என்றார் சட்டவாளர் பதற்றத்துடன். பையன் மேலும் இரகசியமாகச் சொன்னான் அவர்களும் சரியான பிஸி. இப்போது சட்டவாளர் நடுங்கியபடியே கேட்டார் வேறு யாராவது இருக்கிறார்களா என்றார் சட்டவாளர். தீயணைக்குப் படையினர் ஆறுபேர் என்றான் பையன். இப்போது சட்டவாளர் தம்பி இவங்க எல்லாம் என்னடா செய்கிறார்கள் என்றார் உரத்த குரலில். அதற்குப் பையன் சும்ம கத்தாதை ஐயா அவர்கள் எல்லோரும் என்னைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டு தொலைபேசியைத் துண்டித்து விட்டான்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...