ஓமான் வளைகுடாவையும் பாராசீக வளைகுடாவையும் இணைக்கும் 35மைல்கள் அகலமுள்ள ஹோமஸ் நீரிணையை தான் மூடி விடுவேன் என்று ஈரான் மீண்டும் எச்சரித்துள்ளது. கடல் மூலமான உலக எரிபொருள் வழங்கலில் 40% ஈரானிற்கு அண்மையில் உள்ள் ஹொமஸ் நீரிணையூடாக நடக்கிறது. உலக் மொத்த எண்ணை வழங்கலில் இது 20% ஆகும். நாளொன்றிற்கு 15 எண்ணை தாங்கிக் கப்பல்கள் இதனூடாக பயணம் செய்கின்றன. சவுதி அரேபியா, ஈராக்,குவைத், பாரெய்ன், கட்டார், துபாய், போன்ற நாடுகளில் இருந்தூ ஏற்றுமதியாகும் எரிபொருள் ஹோமஸ் நீரிணையூடாகவே நடக்கின்றது. இதை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து உலகை ஆட்டிப்படைக்கலாம் என்பது ஈரானின் கனவு.
ஹோமஸ் நீரிணை உலகின் கப்பல் போக்குவரத்திற்கு மிகச்சிரம்மான கடல் பகுதிகளில் ஒன்றாகும். 2007-ம் ஆண்டு ஜனாரி 1ஒ-ம் திகதி அமெரிக்க நீர்மூழ்கிக்கப்பலான USS Newport ஒரு ஜப்பானிய நீர் மூழ்கிக் கப்பலுடன் மோதிக் கொண்டது. 2009-ம் ஆண்டு மார்ச் 20-ம் திகதி அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றும்(USS New Orleans) நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றும்(USS Hartford) மோதிக் கொண்டன. 1988 ஏப்ரில் மாதம் அமெரிக்கப் போர்க்கப்பலான USS Samuel Roberts ஒரு கடற்கண்ணியில் மோதுண்டதைத் தொடர்ந்து அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் ஒரு நாள் கடற்போர் நடந்தது. ஈரான் இதற்கு முன்பும் பலதடவை ஹோமஸ் நீரிணையை மூடிவிடப்போவதாகப் பல தடவை மிரட்டியதுண்டு.
ஈரான் அணு ஆயுதங்களை உற்பத்தி செய்கின்றது என்ற குற்றச் சாட்டை மேற்கு நாடுகளும் இஸ்ரேலும் முன்வைத்துள்ளன. அதை தடுப்பதற்கு ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானுக்கு எதிராக பொருளாதாரத் தடையை விதித்துள்ளன. இதனால் ஆத்திர மடைந்த ஈரான் ஹோமஸ் நீரிணைய மூடிவிடப்போவதாக எச்சரிக்கிறது. இதைத்தொடர்ந்து ஈரானுக்கும் மேற்கு நாடுகளுக்குமிடையிலான முறுகல் அதிகரித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியம் ஈரானுக்கு எதிரான பொருளாதாரத் தடையைக் கொண்டு வந்ததும் ஈரான் அத் தடையால் அதிகப் பாதிப்படையப் போவது ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் ஐரோப்பிய ஒன்றியமே என்றும் அறிவித்துள்ளது.
ஈரானின் அணு ஆயுத உற்பத்தியைத் தடுக்க பல சதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த இரண்டு ஆண்டுகளில் மூன்று ஈரானிய அணுவிஞ்ஞானிகள் கொல்லப்பட்டனர். ஒருவர் தாக்குதலில் இருந்து தப்பியுள்ளார். ஈரானிய ஏவுகணைத் தாயாரிப்புத் தொழிற்சாலையில் பாரிய வெடிவிபத்து அண்மையில் ஏற்பட்டது. இவ்விபத்து அங்குள்ள கணனித் தொகுதிகளை ஊடுருவி மேற்கொள்ளப்பட்டிடுக்கலாம் என நம்பப்படுகிறது.
ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடிவிடுவேன் என்று எச்சரித்ததைத் தொடர்ந்து பிரித்தானியா தனது கடற்படையை வளைகுடாவிற்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. பொருளாதாரத் தடையை விதித்த ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் ஈரானின் எண்ணெய் ஏற்று மதியைத் தடை செய்ய தமது கடற்படைகளைப் பாவிக்குமா என்பதுதான் அடுத்த கேள்வி. அப்படி ஒரு தடையை ஐக்கிய அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் மேற்கொள்ளும் பட்சத்தில் ஈரான் ஹோமஸ் நீரிணையை மூடும். ஹோமஸ் நீரிணை மூடும் பட்சத்தில் உலக எண்ணை விநியோகத்தில் பெரும் பாதிப்பு ஏற்படும். ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத், சவுதி அரேபியா ஈராக், காட்டார், பாஹ்ரெய்ன் ஆகிய நாடுகளில் இருந்து மேற்கொள்ளப்படும் எரி பொருள் விநியோகம் பாதிப்புக்குள்ளாகும். இதனால் உலக எரிபொருள் விநியோகத்தில் 30% தடை படும். இது உலகு எங்கும் பெரும் பொருளாதாரச் சிக்கலைக் கொண்டுவரும்.
மேற்குலகக் கடற்பலமும் புலிகளின் உத்தியும்
ஹோமஸ் நீரிணையை மூடுவது தம்க்கு காப்பி குடிப்பது போல் இலகுவானது என்று ஈரானியக் கடற்படைத் தளபதி ஏற்கனவே அறிவித்திருந்தார். ஈரானின் மரபு வழிப் படையால் தம்முன் நின்று பிடிக்க முடியாது என்று மேற்குலக நாடுகள் உறுதியாக நம்புகிறது. ஆனால் அதன் கொரில்லாப்பாணி கடற்படைத் தாக்குதல் எப்படி இருக்கும் என்பதுதான் கேள்வி. ஈரான் தன்னிடம் இருக்கும் சிறிய விசைப் படகுகள் மூலமும் கண்ணிவெடிகள் மூலமும் இதைச் சாதிக்கலாம் என்று நம்புகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளின் விசைப்படகுத் தொழில் நுட்பத்தை இந்தியா வாங்கியது போல் ஈரானும் வாங்கியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்தன. அவ்விசைப் படகுகளில் ஹிஸ்புல்லா இயக்கத் தற்கொடைப் போராளிகள் மூலம் மேற்குலகின் விமானம் தாங்கிக் கப்பல்களை Swarming Attack மூலம் அழிக்கலாம் என்று ஈரான் நம்புகிறது. Swarming Attack என்பது எதிரியை பலமுனைகளில் இருந்து தாக்குவது. ஒரு பெரிய கப்பலை நோக்கிப் பல விசைப் படகுகள் செல்லும் போது அவற்றி ஒன்று அல்லது பல படகுகள் தற்கொலைப் படகுகளாக இருக்கும். அதில் ஒன்று பெரிய கப்பலைத் தாக்கி சேதம் விளைவித்து அதை மூழ்கச் செய்யும். இப்படிப்பட்ட தாக்குதல்கள் பல தமிழீழ விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கனவே அமரிக்கக் கப்பலகள் ஈரானியப் படையினர் வளைகுடாவில் கடற்கண்ணிகளை பரப்புகின்றனரா என்று கண்காணிக்கத் தொடங்கிவிட்டன.
ஈரானால் ஒரு சில நாட்கள் மட்டு மே ஹோமஸ் நீரிணையை மூட முடியும் அதை அமெரிக்கப்படைகளால் சில நாட்களில் மீண்டும் திறக்க முடியும். என அமெரிக்கப் படை வல்லுனர்கள் கூறுகின்றனர். ஈரானின் படை நிலைகள் மீது நேட்டோ விமானப் படைகள் முதலில் தாக்குதல் தொடுத்து அவற்றை நிர்மூலமாக்கும். ஈரானியப் படை நிலைகள் பற்றி ஏற்கனவே அமெரிக்கா தனது ஆளில்லா விமாங்கள் மூலம் தகவல்கள் திரட்டி வைத்துள்ளது. ஈரானைச் சுற்றவர உள்ள பத்துக்கு மேற்பட்ட நாடுகளில் அமெரிக்கப் படை நிலைகள் உள்ளது இந்து சமூத்திரத்தில் உள்ள கடற்படைப் பிரிவு பாரசீக வளைகுடாவிற்கு நகர்த்தப்படலாம். மேலும் இஸ்ரேல் ஈரானின் கணனிகளை ஊடுருவி அதன் படைத்துறை கட்டளைப் பணியகத்தைச் செயலிழக்கச் செய்யலாம். பின்னர் கடற்சண்டையும் ஆளில்லா விமானத் தாக்குதலும் தொடரலாம். இதனால் ஈரானால் ஒரு சில நாட்கள் மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். ஆனால் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபி ஒரு சில வாரங்களே தாக்குப் பிடிப்பார் என நேட்டோப் படையினர் முதலில் தெரிவித்தனர். ஆனால் அவர் ஆறு மாதங்கள் நின்று பிடித்தார். லிபியப் போர் எரிபொருள் விநியாகத்தைப் குறிப்பிடத்தக்க அளவு பாதிக்க வில்லை. ஆனால் வளைகுடாப் போர் பாதிக்கும். ஹோமஸ் நீரிணை மூடப்பட்டால் ஜப்பான், கொரியா, சீனா, இந்தியா போன்ற நாடுகளுக்கான எண்ணை விநியோகம் பெரிதும் பாதிக்கப்படும். இது ஈரானுக்கு ஒரு பாதகமான நிலையை ஏற்படுத்தும். ஈரான் ஹோமஸ் நீரிணை முடப்படும் என்ற எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து ஈரானிய நாணயத்தின் பெறுமதி பெரும் வீழ்ச்சியைக் கண்டது. இந்த ஆண்டு மார்ச் மாதம் ஈரானில் பாராளமன்றத் தேர்தலும் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தலும் நடக்க இருக்கிறது. பாராளமன்றத் தேர்தலைப் புறக்கணிக்கப் போவதாக ஈரானின் சீர்திருத்தவாதிகள் அறிவித்திருக்கின்றனர். ஈரானில் மக்கள் கிளர்ந்து எழாமல் திசை திருப்பவே இந்த ஹோமஸ் நீரிணை நாடகம் ஆடப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. ஹோமஸ் நீரிணையில் ஒரு போர் மூளுமானால் உலகெங்கும் எரிபொருள் விலை 200 அமெரிக்க டாலர்களாக அதிகரிக்கலாம். இப்போது இருக்கும் பொருளாதார சூழலில் இதனை எந்த ஒரு நாடும் விரும்பாது. இது ஈரானுக்கு ஆதரவாக ஒரு நாடுகளும் செயற்படாமல் போகச் செய்யலாம். ஈரானைத் தனிமைப்படுத்தலாம்.
ஹோமஸ் நீரிணையை மூடுவது ஈரான் பொருளாதாரத் தற்கொலை செய்வதற்கு ஒப்பானது:
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...

-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
No comments:
Post a Comment