இளங்காலைக் குளிராக
இளவேனில் தளிராக
புதிதாக ஒரு உறவு
புரியாத ஒரு உணர்வு
உன் இதயத்தை மெல்ல வருட
ஒரு சில வரிகள் தொடுத்தேன் இனிய தோழியே
உன் நீள் குழலில் ஒரு வண்டாக நான் அமர வேண்டும்
பூவிலும் மேலான மாதவிப் பூவிது
நல்ல மாதவப் பேறிது
நான் சொல்பவை யாவும்
நிழல்களின் நிதர்சனங்கள்
நிழலாக தொடர்வதில் தனி சுகம்
பொய் முகங்களிடை வாழும்
போலியான வாழ்க்கையிலே
பொய்களுக்குள் இனிய
உண்மையைத் தேடி எடுப்பது தனி சுகம்
உன் நினைவோடு என் நினைவை
இணைய விடுவதும் ஒரு புதிய சுகம்
அன்பில் ஊற்றேடுத்து
ஆசையில் கொதித்து
பாசம் என்னும் ஆவியாகி
அவை கலந்து பெறட்டும் தனியின்பம்
ஆவியாகக் கலந்தன இருவர் ஆவிகள்
ஆசையாகத் தழுவிக் கொண்டன
இணைய வெளியில் இனந்தெரியா ஒரு தவிப்பு
நெஞ்சைத் துளைக்கயில் நீ வந்தாய் இதமாக
பாலை வனத்திடை ஒரு பசுஞ்சோலையாக
துள்ளியலைந்த கன்று
தாயைக் கண்டது போல் ஓர் உனர்வு
வளரத் துடித்த கொடிக்கு
படரக் கிடைத்த துணைபோல்
கரை தேடிய ஓடத்திற்கு
கலங்கரை விளக்கம்மானாய் நீ
கொங்கிறிற் காட்டிடை
வழி தொலைத்த ஓட்டுனர்
முன் வந்த Sat Nav நீயடி தோழி
ஒரு பாதை ஒரு பயணம்
ஒரு இனிய துணை
கை கோர்த்து நடப்பதில் தனி சுகம்
ஐந்து விரல்களை ஐந்து விரல்கள் வருட
காதோரம் காற்று வந்து
சொல்லும் இரகசியம் கேட்டு
அல்லாரிப்பில் ஆடும் குழல்
இப்படியே நீளட்டும் இப்பாதை
முடிவில்லாமல் தொடரட்டும் இப்பயணம்
என்றும் காணாத தனி சுகம்
நீளும் பாதை அகலத்தில் குறையாதோ
நெருக்கத்தை அதிகரிக்காதோ
நெருக்கத்தில் கேட்கிறது
நீ விடும் மூச்சொலி
இனிய இசையாக
காந்த விழியின் ஓரப்பார்வையால்
என்னை ஒளிப்பதிவு செய்ய
No comments:
Post a Comment