கிரேக்க நாடு ஒரு பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடு. ஆசியாவில் ஜப்பானும் தென் கொரியாவும் மட்டுமே அபிவிருத்தியடைந்த நாடுகள். ஐரோப்பிய ஒன்றியத்திலும் யூரோ நாணய வலயத்திலும் கிரேக்கம் உறுப்புரிமை பெற்றுள்ளது. ஐரோப்பாவிலேயே ஊழல் குறைந்த நாடு கிரேக்கம். ஐரோப்பாவிலேயே கிரேக்கர்கள்தான் அதிக நேரம் வேலை செய்பவர்கள். 2009-ம் ஆண்டில் இருந்து கிரேக்கப் பொருளாதாரம் வீழ்ச்சியடையத் தொடங்கியது. 2010/11இல் அது 8% வீழ்ச்சியைக் கண்டது. கட்டிட நிர்மாணத்துறை 73% வீழ்ச்சியைக் கண்டது. 2008இல் 7% மாக இருந்த வேலையற்றோர் தொகை 2011இல் 16%ஐத் தாண்டியது.
ஒரு நாட்டில் மக்கள் வேலையை இழக்கும் போது அந்நாட்டின் அரச நிதியத்திற்கு இரு முனைப் பாதிப்பு ஏற்படுகிறது. ஒன்று வேலையை இழக்கும் நபர் செலுத்தும் வருமான வரி இழப்பு மற்றது வேலையை இழந்தவர்க்கான பராமரிப்புச் செலவு அரசுக்கு அதிகரிக்கும். யூரோ நாணயத்தில் கிரேக்கம் இணைந்த பின்னர் கிரேக்க அரசு தனது செலவீனங்களைக் கன்னா பின்னா என்று அதிகரிக்கத் தொடங்கி விட்டது. அத்துடன் பல கிரேக்கச் செல்வந்தர்கள் பரவலாக வரி ஏய்ப்புச் செய்யத் தொடங்கிவிட்டனர். இவை யாவும் கிரேக்க அரசின் கடன் பளுவை கடுமையாக அதிகரிக்கச் செய்தது. கிரேக்க அரச கடன் 340பில்லியன் யூரோக்களாக அதிகரித்தது. பதினொரு மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட ஒரு நாட்டுக்கு இது பெரும் கடன் சுமையாகும். எரிபொருள் விலை அதிகரிப்பு உலகப் பொருளாதார வீழ்ச்சி போன்றவற்றை எதிர் கொள்ளும் நிலையில் கிரேக்கம் இருந்திருக்கவில்லை.
பெரியண்ணன் வைச்சதுதான் சட்டம்
ஒரு நாட்டுக்குப் பொருளாதார நெருக்கடி ஏற்படும்போது அந்நாடு தனது நாணய மாற்று வீதத்தையும் வங்கிக் கடன் வட்டி வீதத்தையும் பொருளாதார சூழ் நிலைக்கு ஏற்ப மாற்றியமைக்கும். கிரேக்கம் 17 நாடுகளைக் கொண்ட யூரோ கட்டமைப்பில் இருப்பதனால் அப்படிப்பட்ட நடவடிக்கைகளைச் செய்ய முடியாது. யூரோ நாணயத்தின் பெறுமதியும் அதன் வட்டி வீதமும் அதில் உள்ள 17 நாடுகளில் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஜேர்மனியின் பொருளாதார நிலைமைக்கு ஏற்பவே நிர்ணயிக்கப் படுவதாக குற்றச் சாட்டு உண்டு. யூரோ நாணயக் கட்டமைப்பில் இருக்கும் நாடு தனது கடன் பளு பண வீக்கம் போன்றவற்றை சில வரையறைகளுக்குள் வைத்திருக்க வேண்டும். இதனால் கிரேக்கம் யூரோ நாணயக் கட்டமைப்பில் இருந்து விலக்கப் பட வேண்டும் என்ற கோரிக்கைகளும் எழுந்தன. கிரேக்கம் அப்படி விலக்கப்படுமிடத்து அது பலத்த நெருக்கடியைச் சந்திக்கும். அந்த நெருக்கடி மற்ற நாடுகளுக்கும் பரவும்.
கடன் கொடுத்தவர்கள் கலங்கும் காலம் இது
கிரேக்கம் தனது கடன் நிலுவைகளைச் செலுத்த முடியாமற் போனால் அதில் பாதிப்படுபவை கடன் கொடுத்த மற்ற நாட்டு வங்கிகளே. கடன் கொடுத்த வங்கிகள் இழுத்து மூடப் பட வேண்டிய நிலை ஏற்பட்டும் அச்சம் மற்ற நாடுகளை பற்றிக் கொண்டது. இதில் அதிக அக்கறை காட்டியவை பிரான்சும் ஜேர்மனியும். கிரேக்க அரசுக்கு கடன் கொடுத்தவை பெரும்பாலும் பிரெஞ்சு ஜேர்மனி வங்கிகளே. ஜேர்மனியும் பிரான்சும் கிரேக்கத்தின் பொருளாதார வீழ்ச்சி தமது நாட்டுப் பொருளாதாரத்தைப் பாதிக்கும் என பெரும் அச்சம் கொண்டன. கிரேக்கப் பொருளாதார நெருக்கடியும் ஸ்பெயின், அயர்லாந்து, இத்தாலி, போர்த்துக்கல் போன்ற நாடுகளின் பொருளாதார நெருக்கடிகளும் சேர்ந்து ஐரோப்பியப் பொருளாதாரத்தையும் உலகப் பொருளாதாரத்தையும் நெருக்கடிக்கு உள்ளாக்குவதைத் தவிர்க்க ஐரோப்பிய ஒன்றியமும் பன்னாட்டு நாணய நிதியமைப்பும் இணைந்து கிரேக்கத்துக்கு கைகொடுக்க முன் வந்தன. 2010 மே மாதத்தில் 110 பில்லியன் யூரோக்களும் ஜூலையில் 109பில்லியன் யூரோக்களும் கிரேக்கத்திற்கு வழங்கப்பட்டன.
கிரேக்கத்திற்கு கடன் கொடுத்துக் கலங்கும் நாடுகள் |
கிரேக்கம், அயர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், இத்தாலி போன்ற நாடுகளின் நிதி நெருக்கடியைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் 440பில்லியன் யூரோக்களுடன் ஐரோப்பிய நிதி நிலைப்பாட்டு வசதியகம் என்ற ஒரு நிதியத்தை ஆரம்பித்தது. இந்தத் தொகை போதாமற் போக அது ஒரு ரில்லியன் யூரோக்களாக அதிகரிக்கப் பட்டது.
யூரோ நாணய வலய நாடுகளும் பன்னாட்டு நாணய நிதியமும் கிரேக்கத்திற்கு கடன் கொடுத்த வங்கிகளும் மற்ற ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் கூடி கிரேக்கத்தை அதன் அரச செலவுகளைக் குறைக்க நிபந்தனை விதித்து அதனைக் கடன் நெருக்கடியில் இருந்து மீட்க நிதி உதவி செய்தன. கிரேக்கத்தின் அரச கடனில் 50%ஐ கடன் கொடுத்தோர் வெட்டி எறிவதாகவும் உடன்பாடு செய்யப்பட்டது. இந்த கடனில் 50%ஐ விட்டுக் கொடுப்பதை உலகெங்கும் உள்ள ஊடகங்கள் "hair cut" என விமர்சித்தன. பல ஐரோப்பிய நகரங்களில் கிரேக்கர்கள் முடி வெட்டும் தொழில் புரிவதால் இந்தக் கிண்டல்.
ஐரோப்பிய ஒன்றியமும் பன்னாட்டு நாணய நிதியமும் மேற்கொண்ட கிரேக்க நிதி நெருக்கடி மீட்பு நடவடிக்கை உலகெங்கும் பங்குச் சந்தைகளில் வரவேற்பைப் பெற்றது.
கிரேக்கம் தனது அரச செலவீனங்களைக் குறைக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் போட்ட நெருக்குதல் கிரேக்க ஆளும் கட்சியைப் பெரும் நெருக்கடிக்கு உள்ளாக்கியது. அரச செலவீனங்கள் குறைக்கப்படுவதை மக்கள் விரும்ப மாட்டார்கள் அது தனது இருப்பை கேள்விக்குறியாக்கும் என கிரேக்கப் பிரதமர் பப்பண்டோஸ் அஞ்சுகிறார். இதற்காக அவர் ஐரோப்பிய ஒன்றியமும் பன்னாட்டு நாணய நிதியமும் கொடுக்கும் உதவியும் நிபந்தனைகளும் நாட்டு மக்களுக்கு ஏற்புடையாதா என்று அறிய ஒரு கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் என திடீரென அறிவித்தார். இது உலகெங்கும் பெரும் அதிர்ச்சியைத் தோற்றுவித்தது. பங்குச் சந்தகள் விலை வீழ்ச்சி கண்டன. ஐரோப்பிய நகரங்களில் இருந்து கிரேக்கப் பிரதமரை முட்டாள் எனக் கண்டிக்கும் கூச்சல்கள் எழுந்தன. கிரேக்கத்திலும் எதிர்ப்புகள் எழுந்தன. எதிர்ப்புக்களையடுத்து கருத்துக் கணிப்பு வாக்கெடுப்புக் கைவிடம்ப்பட்டது. பிரதம மந்திரிக்கு எதிராக ஆளும் கட்சியிலும் பலர் கிளர்ந்தெழுந்தனர். விளைவு பிரதமர் பப்பண்டோஸ் இப்போது பாராளமன்றில் நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர் கொள்கிறார்.
G-20 நாடுகளின் அதிருப்தி
பிரான்ஸில் தற்போது கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும் G-20 நாடுகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் தமது நிதி நெருக்கடியை இதுவரை தீர்க்காததியிட்டு தமது ஏமாற்றத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தின. கிரேக்கக் கடன் முறிகளின் இலாப வீதங்கள்( bond yield) 100ஆக அதிகரித்துள்ளன
No comments:
Post a Comment