சிந்து நதிக்கரை உருவானது
தென் பொதிகையில் தவழ்ந்தது
குமரி முனையையும் கடந்தது
கதிர மலையிலும் கமழ்ந்தது
தமிழா உன் குடும்பம் பெருமைக்குரியது
முள்ளி வாய்க்காலுடன் முடங்காது
தமிழா உன் குடும்பம்
கங்கையும் கொண்டது
கடாரமும் வென்றது
கலிங்கத்தைக் கலங்கடித்தது
சிங்களத்தைச் சிதறடித்தது
தமிழா உன் குடும்பம் வீரம் விளைத்தது
முள்ளி வாய்க்காலுடன் முடங்காது
தமிழா உன் குடும்பம்
கலைகள் அறுபத்து மூன்று கொண்டது
ஏற்றம் மிகு இலக்கணம் கொண்டது
பொது மறையை வையகத்திற்குத் தந்தது
தமிழா உன் குடும்பம் அறிவு நிறைந்தது
முள்ளி வாய்க்காலுடன் முடங்காது
தமிழா உன் குடும்பம்
வேற்றுமையை வேரோடு அறுத்திடு
புல்லுருவிகளைப் புறக்கணித்திடு
ஒன்று பட்டு பலத்தை வளர்த்திடு
தமிழா உன் குடும்பம் மேன்மை பெற்றிடும்
முள்ளி வாய்க்கால் உன் குடும்பத்தின்
முடிவல்லத் தமிழா


1 comment:
அருமைங்க.....
Post a Comment