சுருட்டுப் புகைத்தலில் பிரிய முள்ள ஒரு இளம் தம்பதியர் மிக மிக விலை உயர்ந்த சுருட்டுக்களை வாங்கினார்கள். அவற்றைத் தாம் எப்போதும் வைத்துப் பாதுகாக்க வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். அவற்றுக்கு சகல ஆபத்துக்களில் இருந்து காப்புறுதியும் பெற்றுக் கொண்டார்கள்.
சுருட்டுப் பிரியர்களான அவர்களுக்கு அந்த உயர்ரக சுடுட்டுக்களைப் புகைக்காமல் இருக்க முடியவில்லை. முழுவதையும் புகைத்துத் தள்ளிவிட்டனர். எல்லாம் முடிந்த பின்னர் தான் தாம் செய்த தவறை உணர்ந்து கொண்டனர். தமது சுருட்டுக்கள் எரிந்துவிட்டன என்றும் அதற்கு இழப்பீடு வழங்கும் படி காப்புறுதி நிறுவனத்திடம் வேண்டு கோள் விடுத்தனர். காப்புறுதி நிறுவனம் புகைத்தலினால் ஏற்பட்ட இழப்புக்கு ஈடு செய்ய முடியாது என்று மறுத்தது. இளம் தம்பதிகள் நீதி மன்றம் சென்றனர். தாம் சகலவிதமான இழப்புக்களுக்கும் எதிராக காப்புறுதி செய்ததாக அவர்களது வாதம் அமைந்திருந்தது. வழக்கு பல நீதிமன்றங்களில் பல நாட்கள் நடந்தன. உச்ச நீதிமன்றம் இழப்பீடு வழங்கும் படி உத்தரவிட்டது. மகிழ்ச்சியாக வீடு திரும்பிய தம்பதிகளுக்குக் காத்திருந்தது அதிர்ச்சி! விலை உயர்ந்த பொருட்களைத் தீமூட்டி அழித்தமைக்காக அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment