அண்மைக் காலங்களாக அமெரிக்கா தனது தீவிரவாதிகளுக்கான போரில் ஆளில்லா விமனங்களைப் பாவித்து வருகிறது. ஆரம்பத்தில் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் வேவு நடவடிக்கைகளிலும் பாவிக்கப்பட்ட வேவு விமானங்கள் இப்போது மேலும் நவீன மயப்படுத்தப்பட்டு தாக்குதல்களுக்கும் பயன்படுத்தப் படுகின்றன. ஆப்க்கானிஸ்தானிலும் பாக்கிஸ்தானின் வட பகுதியிலும் 2006-ம் ஆண்டிலிருந்து அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் ஆயிரக்கணக்கான தீவிரவாதிகளைக் கொன்றுள்ளன. பாக்கிஸ்த்தானில் அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்களால் பல அப்பாவி மக்களும் கொல்லப்பட்டுள்ளனர். பாக்கிஸ்த்தான் அமெரிக்காவிடம் பலதடவை திரை மறைவில் இந்த ஆளில்லாப் போர் விமானங்களின் பாவனையை நிறுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளது. பாக்கிஸ்தானிடமும் பல ஆளில்லாப் போர் விமானங்கள் இருக்கின்றன. இப்போதுள்ள அதன் இரு ஆளில்லாப் போர் விமானங்கள் அணிகளை பாக்கிஸ்த்தான் ஆறு அணிகளாக உயர்த்த எண்ணியுள்ளது.
ஆளில்லாப் போர் விமானங்கள் பற்றிய முன்னைய பதிவைக் காண இங்கு சொடுக்கவும்.
பாக்கிஸ்த்தானிலும் யேமனிலும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் பல இசுலாமியத் தீவிரவாதிகளையும் அவர்களின் முக்கிய தலைவர்களையும் கொன்றுள்ளது. அமெரிக்க உளவுத்துறையான சிஐஏயும் சொந்தமாக ஆளில்லா விமானத் தளங்களை உலகின் பலபாகங்களிலும் இரகசியமாக அமைத்துள்ளது. 2012இல் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கிக் கொள்ளும் முடிவு ஆளில்லா விமானங்கள் மூலம் எதிர்காலப் போரை முன்னெடுக்க முடியும் என்ற நம்பிக்கையுடனேயே எடுக்கப்பட்டது. ஆளில்லாப் போர் விமானங்கள் அமெரிக்காவின் மரபு வழிப்போரிலும் திரை மறைவுப் படை நடவடிக்கைகளிலும் முக்கிய இடம் வகிக்கிறது. கடற் கொள்ளையர்களுக்கு எதிராகவும் அமெரிக்கா ஆளில்லா விமானங்களை களமிறக்கியுள்ளது.
அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்கள் கடந்த இரு வாரங்களாக(செப்டம்பர் 20011இன் இறுதிப் பகுதியில் இருந்து) ஒரு வகை கணனிக் கிருமிகளால் பாதிப்படைந்துள்ளன. அந்தக் கிருமிகள் அழிக்க அழிக்க மீண்டும் மீண்டும் வருகின்றன. “We keep wiping it off, and it keeps coming back,” says a source familiar with the network infection, one of three that told Danger Room about the virus. “We think it’s benign. But we just don’t know.” அமெரிக்காவின் Creech Air Force Base in Nevada. இல் உள்ள விமானங்களே இக் கிருமித் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளன.
அமெரிக்கப் படைத்துறையின் கணனி நிபுணர்கள் தமது ஆளில்லாப் போர் விமானங்களை பாதித்துள்ள கிருமிகள் தற்செயலாக உருவானவையா அல்லது வெளியில் இருந்து யாராவது அவற்றைத் திணித்தார்களா என்று அறிந்து கொள்ள முடியாத நிலையில் இருக்கின்றர்.
பிந்திக் கிடைத்த செய்திகள்:
அமெரிக்க ஆளில்லாப் போர் விமானங்கள் தொடர்ந்து பறப்புக்களில் ஈடு பட்டு வருகின்றன.
அமெரிக்காவின் படைத்துறையினரினதும் அமெரிக்கப் படைத்துறைக்கு ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனங்களினதும் கணனிகள் மீது அண்மைக்காலங்களாக பல ஊடுருவல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை சீனவில் இருந்து மேற்கொள்ளப்பட்டவை என்று நம்பப்படுகின்றன.
கணனி வழியாக நடக்கும் போர் பற்றிய முன்னைய பதிவைக்காண இங்கு செடுக்கவும்
ஈராக்கில் அமெரிக்காவின் ஆளில்லாப் போர் விமானங்களில் இருந்து அமெரிக்கப் படைகளுக்கு அனுப்பப்படும் காணொளிப் பதிவுகளை ஈராக் போராளிக் குழுவினர் $26 பெறுமதியான ஒரு சாதாரண மென்பொருளைப் பாவித்து தரவிறக்கம் செய்தமை ஆளில்லாப் போர் விமானங்களின் நம்பகத் தன்மை மீது பல படைத் துறை நிபுணர்களுக்கு பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியது.
அமெரிக்க கணனி நிபுணர்கள் Kaspersky நிறுவனத்தின் உதவியுடன் கிருமிகளை அழிக்க மேற் கொண்ட முயற்ச்சி தோல்வியில் முடிவடைந்தன. அவை மீண்டும் மீண்டும் வந்துகொண்டே இருந்தன. இதனால் வன்பொருளில் உள்ள சகல மென்பொருளையும் அழித்து விட்டு மீண்டும் முதலில் இருந்து ஆரம்பிப்பது பற்றி யோசிக்கின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment