Monday, 15 August 2011

Motorolaவை Google வாங்குகிறது

கைப்பேசி தாயரிக்கும் நிறுவனமான Motorolaவை  Google 12.5பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குகிறது. கூகிள் இதுவரை செய்தவற்றில் இது மிகப்பெரிய முதலீடாகும். உலகெங்கும் பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த இந்த வேளையில் Motorolaவின் பங்குகளை 63% அதிக விலை கொடுத்து கூகிள் வாங்குகிறது.

கூகிளின் Android மென்பொருள் இப்போது 150மில்லியன் கருவிகளில் உலகெங்கும் பாவிக்கப்படுகிறது. 39 வெவ்வேறு உறப்பத்தியாளர்கள் Android மென்பொருளை தங்கள் கருவிகளில் இணைக்கிறார்கள். தற்போது 43% மேற்பட்ட கைப்பேசிகள் Android மென்பொருளுடன் வருகின்றன. இந்த வளர்ச்சி கூகிளை கைப்பேசித் உற்பத்தித் துறையில் ஈடுபடச் செய்கிறது. இதன் மூலம் கூகிள் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு சவாலை விடுக்கிறது. கூகிள் உலக கணனி/கைப்பேசித் துறைகளில் மைக்குரோசொப்ற்றிக்கும் ஆப்பிளிற்கும் போட்டியாக விளங்குகிறது.

Motorola 17,000இற்கும் அதிகமான ஆக்கவுரிமைகளைக்(patent) கொண்டது.

இந்த முதலீடு கூகிளின் Android மென்பொருளை மற்ற கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் பாவிப்பதைப் பாதிக்காது என கூகிள் கூறுகிறது.

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...