கைப்பேசி தாயரிக்கும் நிறுவனமான Motorolaவை Google 12.5பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வாங்குகிறது. கூகிள் இதுவரை செய்தவற்றில் இது மிகப்பெரிய முதலீடாகும். உலகெங்கும் பொருளாதார நெருக்கடிகள் நிறைந்த இந்த வேளையில் Motorolaவின் பங்குகளை 63% அதிக விலை கொடுத்து கூகிள் வாங்குகிறது.
கூகிளின் Android மென்பொருள் இப்போது 150மில்லியன் கருவிகளில் உலகெங்கும் பாவிக்கப்படுகிறது. 39 வெவ்வேறு உறப்பத்தியாளர்கள் Android மென்பொருளை தங்கள் கருவிகளில் இணைக்கிறார்கள். தற்போது 43% மேற்பட்ட கைப்பேசிகள் Android மென்பொருளுடன் வருகின்றன. இந்த வளர்ச்சி கூகிளை கைப்பேசித் உற்பத்தித் துறையில் ஈடுபடச் செய்கிறது. இதன் மூலம் கூகிள் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு சவாலை விடுக்கிறது. கூகிள் உலக கணனி/கைப்பேசித் துறைகளில் மைக்குரோசொப்ற்றிக்கும் ஆப்பிளிற்கும் போட்டியாக விளங்குகிறது.
Motorola 17,000இற்கும் அதிகமான ஆக்கவுரிமைகளைக்(patent) கொண்டது.
இந்த முதலீடு கூகிளின் Android மென்பொருளை மற்ற கைப்பேசி உற்பத்தி நிறுவனங்கள் பாவிப்பதைப் பாதிக்காது என கூகிள் கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
முதலில் அருட்தந்த்தைக்கு ஒரு அறிமுகம்: Fr. Jegath Gaspar Raj is a Catholic priest currently residing in Chennai , India. His academic qualif...
-
ஆண்கள் பெண்களைச் சைட் அடித்தல், பெண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், ஆண்கள் ஆண்களைச் சைட் அடித்தல், பெண்கள் பெண்களைச் சைட் அடித்தல் போன்றவை பற்...
-
2022 பெப்ரவரி 24-ம் திகதி இரசியா செய்ய ஆரம்பித்த ஆக்கிரமிப்பிற்கு எதிரான போரில் உக்ரேனின் அடுத்த உத்தி பெரிய தாக்குதல்களை நடத்துவதாக இருக்...

1 comment:
புதிய செய்தி,
என்னுடைய வலைப்பூவில்
விண்டோஸ் 7 Service Pack 1யை ISO கோப்பாக தரவிறக்கம் செய்ய
Post a Comment