Sunday, 17 July 2011

கடாபிக்கு எதிரான இறுதிச் சதி!

ஆகஸ்ட் முதலாம் திகதி ஆரம்பிக்கவிருக்கும் ரம்ழானுக்கும் முன்னர்  லிபியத் தலைவர் தளபதி மும்மர் கடாஃபியை லிபியாவில் இருந்து விரட்ட முடியுமா என்பதுதான் கடாஃபிக்கு எதிராகச் செயற்படும் நேட்டோப் படையினரைக் குடையும் கேள்வி. கடாஃபியோ நேட்டோவைக் குழப்பும் சமிக்ஞைகளை தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். தனது ஆதரவாளர்கள் நேட்டோ நாடுகளில் வீடுகளிலும் பணிமனைகளிலும் தாக்குதல் நடாத்துவார்கள் என்றும் ஒரு மிரட்டல் விட்டும் பார்த்தார்.

திருப்பதியில் லட்டுத் தட்டுப்பாடு போல்                                           திரிப்போலியில் எண்ணெய்த் தட்டுப்பாடு.
கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் திரிப்போலிக்கான எரிபொருள் செல்லும் குழாய்களைத் தகர்த்ததைத் தொடர்ந்து திரிப்போலியில் எண்ணெய்த் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இது கடாஃபியின் படையினரை ஒரு நெருக்கடி நிலைக்குத் தள்ளியுள்ளது. குழாய்த் தகர்ப்புக்கான ஆயுதங்களை கிளர்ச்சிக்காரகளுக்கு பிரான்ஸ் விமானங்கள் மூலம் போட்டிருந்தது. இது ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபைத் தீர்மானத்திற்கு விரோதமானது என இரசியா போன்ற நாடுகள் ஆட்சேபித்திருந்தன
தொடர்புக் குழு (Contact Group)கூட்டம்

தொடர்புக் குழுக் கூட்டம்.
கடாஃபிக்கு எதிரானவர்கள் தொடர்புக் குழு (Contact Group) என்ற அமைப்பை அமைத்துள்ளனர். இவர்கள் ஜுலை 15-ம் திகதி இஸ்த்தான்புல் நகரில் கூடினர். இக்கூட்டத்தில் 32 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபையை (National Transitional Council - NTC) லிபியாவின் சட்டபூர்வ அரசாக அங்கீகரித்தனர். இக்கூட்டத்தில் அமெரிக்க அரச செயலர் ஹிலரி கிளிண்டன் பங்குபற்றியமை இக்கூட்டத்திற்கு அமெரிக்கா கொடுத்த முக்கியத்துவத்தைக் காட்டுகிறது. 

மேலும் பிரித்தானிய விமானங்கள்
இஸ்த்தான்புல்லில் நடந்த தொடர்புக் குழு (Contact Group)க்கூட்டத்தைத் தொடர்ந்து பிரித்தானியா மேலும் சில ரொனேடோ விமாங்களை லிபியப் போரில் ஈடுபடுத்தவுள்ளது.
கிளர்ச்சிக்காரர்களின் தாக்குதல்


ஏன் இந்தத் திடீர் அங்கீகாரம்?
மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் ஒரு நன்கு பயிற்றுவிக்கப்பட்ட படையினர் அல்லர். அவர்கள் தொலவில் இருந்து சிறியரக ஏவுகணைகள் எறிகணைகளை வீசியே கடாஃபியின் படை நிலைகளைக் கைப்பற்றுகின்றனர். அதுவும் ஆமைவேகத்தில். அவர்களிடை ஒரு சிறந்த ஒழுங்கமைப்போ கட்டமைப்போ இல்லை. கடாஃபியின் படையினருடன் நேருக்கு நேர் மோதி அவர்களிடமிருந்து திர்ப்போலியைக் கைப்பற்றுவது  என்பது இலகுவில் நடக்கக்கூடிய காரியம் அல்ல என்பதை நேட்டோ அமைப்பினர் உணர்ந்துள்ளனர். மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபைக்கு (National Transitional Council - NTC) மேலும் படைக்கு ஆள்களைச் சேர்க்கவும் ஆயுதங்களைத் திரட்டவும் நிறைய நிதி தேவைப்படுகிறது. அதற்கான நிதி வழங்க நேட்டோ செய்த சதிதான் இந்த அங்கீகாரம். மேற்கு நாடுகள் இப்போது  இருக்கும் நிதி நெருக்கடியில் தங்கள் பணத்தை லிபியாவில் விரயமாக்குவது உள்ளக எதிர்ப்புக்களை உருவாக்கும். கடாஃபி அரசின் நிதி 34 பில்லியன் டாலர்களை அமெரிக்கா முடக்கி வைத்துள்ளது. மும்மர் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் அமைப்பான இடைக்காலத் தேசியச் சபையை சட்டபூர்வமான அரசாக அங்கீகரிப்பதன் மூலம் அந்த நிதியில் ஒருபகுதியை கிளர்ச்சிக்காரர்களுக்கு அமெரிக்கா வழங்கவிருக்கிறது. மூன்று பில்லியன்கள் கிளர்ச்சிக்காரர்களுக்கு வழங்கும் என்று எதிர்பார்க்கவிருக்கிறது. இப்பணத்தைப் பாவித்து கிளர்ச்சிக்காரர்கள் பிரித்தானியப் படையில் இருந்தவர்களை தங்கள் படையில் இணைத்துக் கொள்ளலாம். பிரித்தானியா தனது படையில் உள்ளவர்களை விடுப்பில் விடுவித்து அவர்கள் கடாஃபிக்கு எதிரான படையினர்களுடன் இணைந்து கொள்வார்கள். இச்சதியால் பிரித்தானியா தன் செந்தச் செலவில் சொந்தப்படையினரைப் போரில் ஈடுபடுத்தும் குற்றச் சாட்டில் இருந்து தப்பிக்கலாம். வேறு இடத்தில் இப்படிப்பட்ட சதி வெற்றிகரமாக அரங்கேறியது உண்டு.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...