Sunday 29 May 2011

வட ஆபிரிக்கா - பிரித்தானியாவின் இரட்டை வேடம் அம்பலம்


லிபிய மக்களுக்கு சுதந்திரம் வேண்டும் என்பதற்காக போராடும் மக்களுக்க்கு ஆதரவாக பிரித்தானியாவும் பிரான்சும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையைக் கூட்டி அங்கு லிபியாவில் விமானங்கள் பறப்பதைத் தடை செய்வது என்று ஒரு தீர்மானம் நிறைவேற்றி அதைச் சாக்காக வைத்துக் கொண்டு லிபியாவில் உள்ள கட்டங்கள் நேட்டோப் படைகள் மீது குண்டுகளை வீசித் தரை மட்டமாக்கி வருகின்றன. லிபியத் தலைவர் மும்மர் கடாபி இப்போது குண்டு வீச்சில் இருந்து தப்ப மருத்துவ மனைக்குள் தஞ்சம் புகுந்துள்ளார்.

வட ஆபிரிக்காவில் அநியாயம் பிடித்த சர்வாதிகாரிகளுக்கு எதிராக அங்குள்ள மக்கள் கிளர்ந்து எழுந்து மல்லிகைப் புரட்சி செய்து துனிசியாவிலும் எகிப்திலும் சர்வாதிகாரிகள் ஆட்சியில் இருந்து விரட்டப்பட்டனர். இந்த மக்கள் எழுச்சியை ஆபிரிக்க வசந்தம் என்று மேற்குலகப் பத்திரிகைகள் பாராட்டின.

பாஹ்ரெய்னில் பல இலட்சக் கணக்கான மக்கள் தம்மை ஆளும் மன்னர் அல் கலிபாவிற்கு எதிராக கிளர்ந்தெழுந்தனர். இவர்களுக்கு எதிராக மன்னர் தனது படைகளை ஏவி விட்டதுடன் பாஹ்ரெய்ன் மன்னருக்கு ஆதரவாக சவுதி அரேபியப் படைகளும் கிளர்ச்சி செய்யும் பொது மக்கள் மீது தாக்குதல் நடாத்தின. சவுதி அரேபியாவிலும் மன்னராட்சிக்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழுந்தனர். அங்கும் படைகள் மக்களுக்கு எதிராக வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டன. அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தும் சவுதி அரேபியாவின் படைகளுக்கு பிரித்தானியா பயிற்ச்சியும் ஆயுதங்களும் வழங்குவது இப்போது அம்பலமாகியுள்ளது.

பாஹ்ரெயின் ஒரு மேற்குலக சார்பு நாடு. அங்கு அமெரிக்காவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த படைத்தளம் உள்ளது. அமெரிக்காவின் ஐந்தாவது கடற்படைப் பிரிவு அங்கு நிலை கொண்டுள்ளது. 1948இல் இருந்தே அமெரிக்காவின் வளைகுடா கடற்படைத் தலைமையகமாக இது இருந்து வருகிறது. பாரசிகக்குடா, ஓமான் வளைகுடா, செங்கடல், இந்து மாக்கடலின் சில பகுதிகள் போன்றவற்றை அமெரிக்கக் கடற்படை இங்கிருந்தே வழிநடத்துகிறது. இதனால் பாஹ்ரெய்னில் மேற்குல்க சார்பு அரசு ஒன்று இருப்பது மிக முக்கியம். இதனால் நீதி லிபியாவிற்கு வேறு பாஹ்ரெய்னிற்கு வேறு.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...