Saturday, 28 May 2011

ஹிலரியின் பாக்கிஸ்தான் பயணத்தின் பின்னணி


அமெரிக்க அரசுச் செயலர் ஹிலரி கிளிண்டனின் திடீர் பாக்கிஸ்த்தானியப் பயணம் பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஜீ-8 நாடுகளின் மாநாடு நடந்து கொண்டிருக்கும் வேளையில் அவர் பாக்கிஸ்த்தானில் இருப்பது அவரின் பயண்த்தின் அவசியத்தையும் அவசரத்தையும் உணர்த்துகிறது. அவர் அங்கு அவர் தலைவர் அஸிஃப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரசா கிலானி, படத்துறைத் தளபதி அஷ்ஃபாக் கயானி ஆகியோரைச் சந்தித்தமை முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.

பாக்கிஸ்த்தான் தனக்குத் தெரியாமல் பில் லாடன் மீதான படை நடவடிக்கை மேற்கொண்டமை மீதான தனது அதிருப்தியை ஹிலரியிடம் தெரிவித்தது. ஆனால் அதற்க்காக ஹிலரி வருத்தம் தெரிவிக்கவில்லை.

பின் லாடன் பாக்கிஸ்த்தானில் இருந்தமை பாக்கிஸ்தான் அரசுக்கோ உயர் படைத்துறையினருக்கோ தெரிந்திருக்கவில்லை என்றார் ஹிலரி.


பாக்கிஸ்த்தானில் உள்ள இசுலாமியத் தீவிரவாதிகளின் பட்டியல் பாக்கிஸ்தானிடம் கையளிக்கப் பட்டது. பின் லாடனின் உதவியாளர் ஐமன் அல் ஜவகிரி, தலிபான் தலைவர் முல்ல, தலிபான் தளபதி ஒமர் சிராஜ் ஹக்கானி, லிபிய அல் கெய்தாத் தலைவர் அதியா அப்துல் ரஹ்மான் போன்றவர்கள் அப்பட்டியலில் இருக்கின்றனர். இப்பட்டியல் கையளிக்கப் பட்டதன் நோக்கம் இவர்களை நீ பிடிக்கிறாயா அல்லது நான் பிடிக்கட்டுமா என்பதுதான் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவின் பாக்கிஸ்த்தானுக்கான இரண்டு பில்லியன் டொலர் உதவி இந்த ஒத்துழைப்புடன் சம்பந்தப்பட்டதாக இருக்கும்.

இசுலாமியத் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தாம் தீவிரப்படுத்துவதாக பாக்கிஸ்த்தான் தெரிவித்தது. பாக்கிஸ்தானுக்குள் அமெரிக்கா செய்யும் ஒருதலைப் பட்சமான நடவடிக்கைகளை தாம் மிதப்படுத்துவதாக ஹிலரி தெரிவித்தார்.

கடந்த பத்து ஆண்டுகளாக உலகின் மோசாமான பயங்கரவாதத் தலைவர்கள் பலர் பாக்கிஸ்த்தானில் வசித்து வருகிறார்கள் என்றார் ஹிலரி. தனது பாக்கிஸ்தானியப் பயணம் ஒரு திருப்பு முனையாக அமையும் என்கிறார் ஹிலரி.

என்ன திருப்பு முனை?

ஹிலரியின் பயணம் சுமூகமானதாகவே இருந்தது. ஒரு நாட்டுக்குள் அத்து மீறிப் புகுந்து அங்குள்ள அப்பாவிகள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தும் இன்னொரு நாட்டு அரசியல் பிரமுகர் சுமூகப் பயணம் மேற் கொள்வதன் சூட்டுமம் என்ன? இரு நாடுகளும் இணைந்து நாடகமாடுகின்றன. ஹிலரியின் பயண முடிவில் கூட்டறிக்கை வெளிவிடப்படவில்லை. பாக்கிஸ்தானிய அரசு ஹிலரியின் பயணத்தின் நோக்கத்தையோ அல்லது என்ன ஒத்துக் கொள்ளப் பட்டது என்பது பற்றியோ ஒன்றும் கூறவில்லை. அமெரிக்க எதிர்ப்பு வாதம் பாக்கிஸ்தானுக்கு எந்த விதத்திலும் உதவாது என்றார் ஹிலரி. இனி அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்த்தானில் இருந்து அத்து மீறிப் பிரவேசிக்கத் தேவையில்ல. உள் இருந்தே இசுலாமியத்தீவிரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்படலாம். ஹிலரி திருப்பு முனை என்று சொன்னது இனி அமெரிக்கப் படைகள் பாக்கிஸ்த்தானுக்குள் அனுமதிக்கப்பட்டு அவை பாக்கிஸ்த்தானியப் படைகளுடன் இணைந்து தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தும் என்பதாகத்தான் இருக்கும். 85 நவீன ஆளில்லா விமானங்களை அமெரிக்கா பாக்கிஸ்த்தானுக்கு வழங்குவதாக ஹிலரியின் பயணத்திற்கு முன்பதாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. பாக்கிஸ்த்தானியப் படைகள் அவற்றைப் பாவித்து அல்லது அமெரிக்கப் படைகளே பாக்கிஸ்த்தானுக்குள் இருந்து கொண்டு அவற்றின் மூலம் தாக்குதல்களை நடத்தலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...