Thursday, 26 May 2011
ராகுல் காந்தி - இந்தியாவின் தலைவனா? தலைவிதியா?
ராகுல் காந்தியின் அம்மா தற்போதைய இந்தியப் பிரதம மந்திரியைப் பெருவிரலின் கீழ் வைத்திருப்பவர். அப்பா இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி. அப்பம்மா இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி. பாட்டன் இந்தியாவின் முன்னாள் பிரதம மந்திரி. இதனால் உலகெங்கும் உள்ள பத்திரிகைகள் ராகுல் காந்தியை "காத்திருக்கும் பிரதம மந்திரி" (Prime minister-in-waiting) என்று சொல்கின்றனர். மொத்ததில் ராகுலை இம்சைப் பிரதமர் ஐந்தாம் நேரு-மூன்றாம் காந்தி என்று சொல்லலாமா?
ராகுல் ஆன ராஉல் - Raul became Rahul
ராஜீவ் காந்தி தனது பெயரை ரொபேர்ட்டோ என்று மாற்றி கத்தோலிக்கரான சனியோ மரினோவைத் திருமணம் செய்து பியங்கா என்னும் மகளையும் ராஉல் என்னும் மகனையும் பெற்றார். அவர் அரசியலுக்கு வந்த போது அவர்கள் பெயர்கள் பிரியாங்கா என்றும் ராகுல் என்றும் இந்திய மயப்படுத்தப்பட்டது.
தங்க மகன்
பிரபல சட்டவாளரும் இந்தியப் பாராளமன்ற உறுப்பினருமான ராம் ஜெத்மாலினி காந்தி குடும்பத்திற்கு சுவிஸ் வங்கியில் பணம் உண்டு என்று தான் நம்புவதாக 22-02-2011இலன்று தெரிவித்தார். 1991 நவம்பரில் சுவிசில் இருந்து வெளிவரும் இலஸ்ரே என்னும் சஞ்சிகை ராஜிவ் காந்தி சுவிஸ் வங்கியில் இரண்டரை பில்லியன் சுவிஸ் பிராங்குகளை வைப்பிலிட்டதாகக் குற்றம் சாட்டியது. இதை காந்தி குடும்ப்பம் இதுவரை மறுக்கவில்லை. அந்தப் பணம் இப்போது இந்திய நாணயப் பெறுமதியில் நாற்பத்தி இரண்டாயிரத்து முன்னூற்று நாற்பத்தைந்து கோடிகளாக வளர்ந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இலக்கத்தில் போட்டால் 423,450,000,000ரூபாக்கள்
சுப்பிரமணிய சுவாமி இந்தியப் பிரதமருக்கு 29-04-2011இலன்று எழுதிய கடிதத்தில் சோனியா காந்தியின் சகோதரிகள் இந்தியா பிரான்சிடம் இருந்து வாங்க முடிவு செய்திருக்கும் போர் விமானங்கள் சம்பந்தப்பட்ட நடவடிக்கையில் பிரான்சிடம் இருந்து பெருந்தொகைப்பணம் இலஞ்சமாக வாங்கியமைக்கான நம்பகரமான ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகச் சொல்லியுள்ளார்.
கல்விமான் ராகுல்
இந்தியாவின் பிரபல கல்லூரிக்ளில் ஒன்றான சென்ர் ஸ்ரிஃபன் கல்ல்லூரியில் நுழைவுத் தேர்வு கடினமானது. அங்கு ராகுல் காந்திக்கு விளையாட்டுத்துறையில் வல்லவர் என்ற அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் கைத்துப்பாக்கி சுடும் விளையாட்டு. அவர் அந்த விளையாட்டில் வல்லவராக இருந்தாரா என்பதும் கேள்விக்குறி. அங்கு அவரால் ஒரு வருடத்திற்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. பின்னர் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள ரொலின்ஸ் கல்லூரியில் ராஉல் வின்சி என்னும் இத்தாலியப் பெயரில் ராகுல் காந்தி கல்வி பயின்றாராம். ராகுலுடன் நெருங்கிப் பழகியவர்கள் அவர் ஒரு மந்தமான சிந்தனையாளர் என்கின்றனர்.
வெரோனிக்காவின் காதலன்
2004-ம் ஆண்டு ஏப்ரல் 28-ம் திகதி ராகுல் காந்தி தனக்கு வெரோலிக்கா என்ற ஸ்பானியப் பெண் காதலி இருக்கின்றார் என்றார். இப்போது அவர்கள் பிரிந்துவிட்டார்கள். பின்னர் ராகுலுக்குத் திருமணம் செய்ய முயற்ச்சிகள் நடந்தன. இதுவரை திருமணம் நடக்கவில்லை.
அரசியலில் இருந்தும் அனுபவம் இல்லாமல் இருக்கிறார்.
ராகுல் காந்தி அரசியலில் இருந்தும் அவர் இதுவரை இந்தியாவின் தலையாய பிரச்சனைகள் ஒன்றைக்கூடக் கையாண்டதில்லை. அவரை அப்படிக் கையாளவிடுமிடத்து அவரது பலவீனங்கள் வெளிப்பட்டுவிடும் என்று அவரைச் சார்ந்தவர்கள் கருதுகிறார்கள். ஒரு பெரிய பேட்டி கூட அவர் இதுவரை கொடுத்ததில்லை. அவருக்கு மந்திரிப் பதவி கூட வழங்கப்படவில்லை. அவருக்கு தலைமைத்துவப் பண்புகள் எதுவும் இல்லை என்பதை அவரைச் சார்ந்தவர்கள் அறிவர். டிசம்பர் 2010இல் தமிழ்நாட்டுக்கு வந்த ராகுல் காந்தி இலங்கைத் தமிழர் பிரச்சனையில் தானே நேரில் தலையிட்டு தீர்வு காண முடிவு செய்துள்ளேன் என்றார். ஆனால் அவரிடம் இதுவரை அந்தப் பிரசனையை கையாளும்படி கையளிக்கப்படவில்லை.
பிஹார் தேர்தலில் காங்கிரசை மண் கவ்வ வைத்த ராகுல்
பிஹார் தேர்தலில் காங்கிரசுக் கட்சியை ராகுல் கையாண்ட திறமையால் காங்கிரசுக் கட்சி 234 இடங்களில் 4 இடங்களில் வெற்றி பெற்றது. சில எதிர்க்கட்சியினர் ராகுலுக்குப் பாராட்டும் தெரிவித்தனர் தம்மை வெல்ல வைத்தமைக்கு. இதனால் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ராகுலை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே காங்கிரசுக் கட்சி பயன்படுத்தியது. இருந்தும் அவர் அமைத்த இளைஞர் அணி காங்கிரசுக் கட்சியின் குழுச் சண்டையை மேலும் மோசமாக்கி காங்கிரசின் தோல்விக்கு வழிவகுத்தது.
விக்கிலீக்கும் ராகுலை விட்டு வைக்கவில்லை
ராகுல் காந்தி இந்தியா இசுலாமியத் தீவிரவாதிகளிலும் பார்க்க இந்துத் தீவிரவாதிகளால் அதிக ஆபத்தை நோக்குகிறது என்று தெர்வித்ததைப் பகிரங்கப் படுத்தியது.
ராகுல் காந்தியைப்பற்றி விமர்சகர்கள்
ராகுல் காந்தியில் அரசியல் திறமை அவரை எங்கும் இட்டுச் செல்லாது என்கிறார் காந்தி குடும்பத்தைப்பற்றி புத்தகம் எழுதும் ஆர்த்தி ராமச்சந்திரன். அருண் சர்மா என்பவர் ராகுல் இதுவரை எந்த ஒரு பிரச்சனியிலும் தனது திறமையைக் காட்டவில்லை என்கிறார். காந்தி குடும்பத்தைப் பற்றி ஆய்வு செய்யும் ரஷீட் கிட்வாய் என்பவர் ராகுல் காந்தி தனது பெயருடன் ஏதாவது சாதனைகளை இணைக்க வேண்டும் என்கிறார். ராகுல் இதுவரை எதையும் கிழிக்கவில்லை என்பதை அவர் இப்படிச் சொல்கிறார்.
தனக்கு பெயர் சேர்க்க முயன்ற ராகுல்.
அடுத்த ஆண்டு தேர்தலை எதிர் நோக்கும் உத்தரப் பிரதேசத்தில் நடந்த விவசாயிகளின் போராட்டத்தில் தானும் பங்கு கொண்டு தனக்குப் பெயர் சேர்க்க முயன்றார் ராகுல் காந்தி. அவரும் விவசாயிகளுடன் சேர்ந்து போராடினார். அவர் கைது செய்யப்பட்டு விடுதலையும் செய்யப்பட்டார். அவரை இந்தியாவே ஒரு முறை திரும்பிப் பார்த்து.அத்துடன் வாயை மூடிக்கொண்டிருந்தால் ஒழுங்காக இருந்திருக்கும். பின்னர் டில்லிக்குப் போனவர் மாநிலத்தில் மக்கள் கொல்லப்பட்டுக் கொன்று எரிக்கப்பட்டுள்ளனர். மக்கள் எரிக்கப்பட்ட எழுபது அடி சாம்பல் மேட்டை நான் பார்த்தேன் என்றார். உடன் அங்கு விரந்து சென்ற காவல்துறை ராகுல் குறிப்பிட்ட சாம்பல் மேட்டில் பழைய இரும்புப் பொருட்களும் குப்பைகளும் சாணிகளுமே கொழுத்தப்பட்டிருந்தன என்று சாம்பலைப் பரிசோதனை செய்தபின் அறிவித்தனர். இது ராகுலிற்கு ஒரு பலத்த அடியாக அமைந்தது. பின்னர் ராகுல் தன்னிடம் உள்ளூர் மக்கள் கூறியவற்றைத்தான் தானி கூறியதாகச் சொல்லித்தப்பித்துக் கொண்டார்.
முன்னாள் "வருங்காலப் பிரதம மந்திரி"
ராகுலின் தொடர் தவறுகளால் அவரை விமர்சிப்பவர்கள் இப்போது அவரை முன்னாள் வருங்காலப் பிரதம மந்திரி என்று அழைக்கத் தொடங்கி விட்டனர். காந்தி குடும்ப ஆலோசகர்கள் சிலர் இவன் வேலைக்கு ஆக மாட்டான் பேசாமல் பிரியங்காவை அரசியலுக்கு கொண்டு வாருங்கள் என்று ஆலொசனை சொல்கின்றனர்.
வேகமாக வளர்ந்து வரும் நாடு, வருங்கால வல்லரசு. வருங்கால பணக்கார நாடு என்றேல்லாம் கூறப்படும் இந்தியா இன்னொரு மொக்கை காந்தியால் ஆளப்படவேண்டியது அதன் தலைவிதி
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
4 comments:
நீ என்னதான் சொன்னாலும் அந்தக் குடும்பம்தான் இந்தியாவை ஆளும்...
india
oru
sabakkedu
இவன் இந்தியாவின் தலைவனுமில்லை, தலைவிதியுமில்லை, தலைவலி.
-சீனு
பிரபாகரன் இலங்கை தமிழர்களின் தலைவன் என்று சொல்லபடும் கொடுமையை விட இதில் என்ன பெரிதாக இருக்கிறது?
Post a Comment