Wednesday, 25 May 2011

கடாபிக்கு எதிரான சதிகள்


ஐக்கிய நாடுகள் சபையில் லிபியத் தலைவர் மும்மர் கடாஃபியின் ஆட்சிக்கு எதிரான தீர்மானம்-1973 இந்த ஆண்டும் மார்ச் 17-ம் திகதி கொண்டுவரப்பட்ட போது சீனாவும் இரசியாவும் தங்கள் இரத்து அதிகாரத்தைப் பாவிக்காமலும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமலும் இருந்து கொண்டன. தீர்மானம் இரத்துச் செய்யப்பட்டாலும் நேட்டோப் படைகள் ஐநாவிற்கு வெளியில் கூடி முடிவெடுத்து லிபியாவிற்கு எதிராக படை நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று தெரிந்துதான் இரண்டும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் விட்டன. இத்தனைக்கும் கடாபியின் லிபியாவிற்கும் இரசியாவிற்கும் இடையில் பல பில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத விற்பனை ஒப்பந்தம் நடைமுறையில் உண்டு.


லிபியத் தலைவர் கடாஃபியை ஒரு மேற்கத்திய சார்பாளராக மாற்ற பல சதிகள் திரை மறைவில் நடந்தன. கடாஃபி வித்தியாசமான பேர்வழி தனது படைவீரர்களுக்கு அவர் பயிற்ச்சி அளிப்பது குறைவு. அவர்கள் தன்னையே கவிழ்த்து விடுவார்கள் என்ற அச்சம். இதற்காக அவர் மேற்குலகம் அவரை அணுகிய போது அவர் வேறு விதமாக செயற்பட்டார். தனது மகன் சயிf அல் இஸ்லாமிற்கு London School of Economics கல்வி பயில ஏற்பாடு செய்தார். சயிf கடாஃபி London School of Economicsஇல் "பயின்று" கலாநிதிப்பட்டமும் பெற்றார். சயிf கடாஃபி ஒரு மேற்கத்திய ஆதரவாளராக உருவெடுப்பார் என்று அமெரிக்க பிரித்தானியக் வெளியுறவுக் கொள்கை வகுப்பாளர்கள் நம்பினார்கள். சயிf கடாஃபி லிபியாவில் மேற்குலக அரசு பாணிச் சீர்திருத்தங்களை செய்வார் என்றும் நம்பினர். ஆனால் கடாபி தனது மகனையே நம்பவில்லை. சயிf கடாஃபி தன்னைக் காவிழ்க்கலாம் என்ற அச்சம் அவரிடம் இருந்தது. அதனால் தனது மற்ற மகனாகிய முத்தாசிம் கடாஃபியை ஒரு தீவிர மேற்குலக எதிர்ப்பாளராக உருவாக்கி அவரையே படைத்துறைக்கும் பொறுப்பாக்கினார்.

கடாபியைப் பதவியில் இருந்து விலக்க பல முயற்ச்சிகள் நடக்கின்றன. நேட்டோப் படைகள் 24-05-2011 காலையில் இருந்து லிபியத் தலைநகர் திரிப்போலி மீது நேட்டோப் படைகள் தமது தாக்குதலை அதிதீவிரப்படுத்தியுள்ளன. கடாபி ஆதரவுப் படைகள் பாவிக்கும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும் கட்டிடம் மீதும் படைத்துறை வழங்கல் பொருட்கள் வைத்திருக்கும் கட்டிடங்கள் மீதும் முப்பது நிமிடங்களுக்குள் இருபது குண்டுகள் வீசித் தரை மட்டமாக்கப் பட்டன. காப்பரண்களை ஊடறுத்து தகர்க்கும் குண்டுகளும் வீசப்பட்டன. நேட்டோப் படைகள் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் வேளை அமெரிக்கா கடாபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களை தமது நாட்டில் ஒரு பணிமனையை அமைக்குமாறு அழைப்பு விடுத்தது.

சிக்கல் மிகுந்த விமானத் தாக்குதல்கள்
லிபியாவிற்கும் குண்டு வீசச் செல்லும் நேட்டோ விமானங்கள் தங்கள் இலக்கு குடிசார் இலக்கல்ல என்று உறுதி செய்த பின்னரே குண்டுகளை வீசவேண்டும் என்று பணிக்கப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே நேட்டோப் படையினர் கடாபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டன. குடிமக்கள் மீது குண்டுகள் வீசப்பட்டால் எதிர் மறையான் விளைவுகள் ஏற்படும் என்று நேட்டோ நாடுகள் உணர்ந்துள்ளன.

தேக்க நிலையில் நேட்டோ நடவடிக்கைகள்
கடந்த சில வாரங்களாக கடாபிக்கு எதிரான படை நடவடிக்கை ஒரு தேக்க நிலையை அடைந்திருந்தன. பிரித்தானியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவிடம் பத்திரிகையாளர்கள் ஏன் இந்தத் தேக்க நிலை என்று வினவினர். கடாஃபியைப் அகற்றும் பணிக்கான ஏற்பாடுகள் சிறப்பாக மேற் கொள்ளப்பட்டு விட்ட்ன விரைவில் அவர் அகற்றப்படுவார் என்றார். ஆனால் எப்போது என்று அவர் சொல்லவில்லை.

லிபியாவில் தமது தரைப்படையினரை இறக்க நேட்டோ தயாரில்லை. ஏற்கனவே ஈராக்கிலும் ஆப்கானிஸ்த்தானிலும் இருந்து நேட்டோப் படைகள் விலகவேண்டும் என்று அந்நாட்டு மக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் பிரித்தானிய ஒரு சதித் திட்டத்தைத் தீட்டியுள்ளது அதன்படி பிரித்தானியப் படைகளில் ஒரு தொகுதியினர் விடுப்பில் செல்ல அனுமதிக்கப்படுவர். அவர்களை ஐக்கிய் அரபு எமிரேட்சும் ஜோர்தானும் "வேலைக்கு அமர்த்தி" அவர்கள் லிபியாவில் கடாஃபிக்கு எதிரான படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன் கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களிற்கு பயிற்ச்சிகளும் அளிப்பர். அது மட்டுமல்ல ஆப்கானிஸ்த்தானில் இருந்து திரும்பிய பிரித்தானியப் படையினர் 700 பேர் லிபியா செல்லத் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். கடாஃபியின் நகர்வுகள் இனி எப்படி இருக்கும்?

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...