Tuesday, 24 May 2011

பத்மநாதனின் பேட்டியின் பின்னணி


பத்மநாதன் கைது செய்யப்பட்டு இலங்கைக்குக் கொண்டு வந்ததில் இருந்து அவரை விசாரிக்க அனுமதி வேண்டும் என்று இந்திய உளவுத்துறை இலங்கையிடம் கோரிக்கை விடுத்து வந்தது இலங்கையும் காலம் கடத்தி வந்தது. இப்போது திடீரென்று பத்மநாதன் ஒரு இந்திய ஊடகவியலாளர் வி. கே சசிக்குமாருக்கு பேட்டியளித்துள்ளார்.

பத்மநாதன் பேட்டி பற்றிய பத்திரிகைகளின் தலைப்புச் செய்திகள்:
  • இந்துஸ்த்தான் ரைம்ஸ்: திமுக கொள்கைகள் ராஜீவ் கொலையில் செல்வாக்கு செலுத்தியது.
  • ரைம்ஸ் ஒஃப் இண்டியா: விடுதலைப் புலிகளின் தலைவர் ராஜீவ் கொலைக்கு மன்னிப்புக் கோருகிறார்
  • இந்து: போர் முடிந்துவிட்டது. எமக்கு உள்ள ஒரு வழி, ஒரு சந்தர்ப்பம்- அமைதியான வழி அமைதியான பேச்சு வார்த்தை.
  • லங்கா மகசீன்: ஐநாவும் ஒரு மேற்கு நாடும் விடுதலைப் புலிகளின் தலைவர்கள் வெளியேற ஒரு கப்பலை அனுப்பத் தயாராக இருந்தன.
  • சனசா நியூஸ்: ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குழுவின் அறிக்கை ஒருவருக்கும் உதவாது.
திடீரென பத்மநாதன் இந்திய ஊடகத்திற்கு பேட்டி கொடுக்கும்படி என்ன நடந்தது? இரண்டு வருடங்களாகச் செய்யாததை இப்போது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இவற்றைச் அண்மையில் நடந்த இரு சம்பவங்களின் பின்னணியில் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒன்று இலங்கை மீதான ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலர் அமைத்த நிபுணர்கள் குழுவின் அறிக்கையைத் தொடர்ந்து இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸ் இந்தியாவிற்கு சென்று பேச்சு வார்த்தை நடத்தியமை. மற்றது தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் காங்கிரசுக் கட்சி படுதோல்வியைச் சந்தித்தமை. டில்லி சென்ற இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ எல் பீரிஸிடம் இந்தியா பத்மநாதனைத் தமது ஆட்கள் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தி இருக்க வேண்டும். பத்மநாதன் இந்திய உளவுத் துறை சொல்லிக் கொடுத்ததைத்தான் சொல்லியிருக்கிறார் போலும். இந்தப் பேட்டியின் மூலம் இந்தியா ராஜீவ் காந்தியைக் கொன்றது விடுதலைப் புலிகள்தான் என்று தமிழ் மக்களுக்குச் சொல்கிறது. பத்மநாதன் சென்ற ஆண்டில் ஜெயராஜிற்கு வழங்கிய பேட்டியில் விடுதலைப் புலிகள்தான் ராஜிவ் காந்தியைக் கொன்றார்கள் என்று சொல்லவில்லை. அது இலங்கை அரசு அரங்கேற்றிய பேட்டி.


பத்மநாதன் வி. கே சசிக்குமாருக்கு வழங்கிய பேட்டியை இந்திய உளவுத்துறை தமக்கும் ஆளும் கட்சிக்கும் சாதகமாக மாற்ற முயன்று தோல்வி கண்டுள்ளது. ஈழப் பிரச்சனையை வைத்து சீமான் போன்றோர் காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்தமை ஜெயலலிதாவை தமிழ்நாடு சட்ட சபைத் தேர்தலில் வெற்றி கொள்ள வைத்தது. இது தமிழீழ ஆதரவாளர்களுக்கும் ஜெயலலிதாவிற்கும் இடையில் ஒரு நிரந்தர உறவை ஏற்படுத்தி விடுமா என்று இந்திய உளவுத்துறையும் காங்கிரசுக் கட்சியும் பயப்படுகின்றன. இந்தப் பயத்தை பத்மநாதனைக் கொண்டு புலிகள் ஜெயலலிதாவைக் கொன்றிருப்பர் என்று சொல்ல வைத்து போக்கிக் கொள்ளப் பார்க்கிறது. பத்மநாதன் இலங்கையில் தமிழ் மக்கள் இருக்கும் இழி நிலையைத் தெளிவாகக் கூறியுள்ளார். தமிழர்களை குறைந்தது மனிதர்களாக ஆவது வாழவிடுங்கள் என்று அவர் இந்தியாவிடம் கெஞ்சுகிறார். தமிழர்களை இந்தியா மனிதர்களாக வாழவிடுகிறதில்லை என்பதை உணர்த்துகிறார் பத்மநாதன். விவாதத்திற்கு ராஜீவ் காந்தியை கொல்லப் பிரபாகரன் உத்தரவிட்டார் என வைத்துக் கொண்டாலும், இந்தியா ஏன் அமெரிக்கா பின் லாடனைக் கொன்றது போல் பிரபாகரனைக் கொல்லவில்லை அல்லது கொல்ல முயற்ச்சிக்கவில்லை. ஏன் மூன்று இலட்சத்திற்கு மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டனர்? ஏன் இத்தனை அழிவும் அவலமும் தமிழ் மக்கள் மீது திணிக்கப் பட்டது? தமிழ் மக்களின் அவலம் இன்றும் தொடர்வது ஏன்? இந்தியாவின் இலக்கு பிரபாகரனாபிரச்சனையை சரியான முறையில் சரியான பரிமாணத்தில் பார்க்காமல் அதற்குடிய தீர்வைக் காணமுடியாது. அடுத்த முறைத் தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசு இன்னும் மோசமான தோல்வியைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

பதமநாதன் திடீரென்று சொல்கிறார் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் ஆயிரம் ஆண்டுகள் நல்ல உறவு இருந்ததாம். இப்படிச் அவரைச் சொல்லச் சொன்னவர்கள் இலங்கையின் பிரச்சனைகளையோ வரலாற்றுப் பின்னணியையோ சரியாகப் புரிந்து கொள்ளாதவர்கள். சிலர் சொல்லுவர் இந்திய உளவுத்துறையினர் இலங்கைப் பிரச்சனைய சரியாகப் புரிந்து கொள்ளாத அறிவு கெட்ட முண்டங்கள் என்று.

போருக்குப் பின்னர் இந்திய உளவுத்துறை இலங்கைக் தமிழர்களுக்கு "இந்தியாவை விட்டால் வேறு ஒருவரும் தமிழர்களுக்கு உதவ மாட்டார்கள்" என்ற செய்தியை உணர்த்த விரும்புகிறது. இதைபலர் மூலம் தெரிவிக்கிறது. இலண்டன் வந்த தமிழருவி மணியனும் திருமாவளவனும் இதையே தெரிவித்தனர். இருவரும் தமிழர்களைப் பார்த்துக் கேட்டனர். உங்களுக்கு உதவ "நார்வே" வந்ததா அமெரிக்கா வந்ததா என்று? பத்மநாதனின் பேட்டி மூலமும் இந்தியா மீண்டும் இதையே சொல்கிறது. ஐநாவும் இன்னொரு ஐரோப்பிய நாடும் கப்பல் அனுப்பி விடுதலைப்புலிகளின் தலைவர்களை காப்பாற்ற முயன்றதாம். அதைத் தடுத்தது இந்தியா என்பது எமக்கெல்லாம் தெரியும். இந்தியா தன்னை விட்டால் எமக்கு உதவ யாரும் இல்லை என்று எமக்கு உணர்த்த முயல்கிறது. ஆனால் நாம் உணர்ந்து கொள்வது இதுதான்: "இந்தியாதான் எல்லாவற்றையும் கெடுத்தது. இந்தியாவே தமிழரின் முதலாம் எதிரி".

1 comment:

Jaya Raman said...

அருமையாக சொன்னிர்கள்

http://usetamil.net

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...