Sunday, 8 May 2011
பின் லாடனுக்குப் பின்.....
அமெரிக்க ஊடகம் ஒன்று இப்படி ஒரு கருத்துப்படத்தை வெளியிட்டது. பின் லாடனைக் கொன்றபின் சில தாக்குதல்கள் ஒரு குறுகிய காலத்திற்கு நடக்கும் அதன் பிறகு எல்லாம் ஓய்ந்துவிடும் என்று அமெரிக்கா தனது நட்பு நாடுகளுக்கு சொல்கிறதாம்!!!!
1979இல் சோவியத் ஒன்றியம் ஆப்கானிஸ்த்தான் மீது படையெடுத்தது. இதன் பின்னணியில் ஆப்கானிஸ்த்தானிற்கு தொலைத்தொடர்பு கோபுரம் அமைத்து கொடுத்த அமெரிக்கா அதில் சோவியத்தை உளவு பார்க்கும் கருவிகளையும் பொருத்தியமையே. சோவியத்தை விரட்ட இலகுவான வழி பொதுவுடமை என்பது இசுலாமிய மார்க்கத்திற்கு எதிரானது என்று ஆப்கானிஸ்தானில் இசுலாமியத் தீவிரவாதம் வளர்க்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் பிறந்த ஒசாமா பின் லாடன் இசுலாமியச் சட்டமான ஷரியாப்படியே இசுலாமிய நாடுகள் ஆளப்படவேண்டும் என்ற நம்பிக்கையுடையவர். கம்யூனிசம், சோசலிசம், மக்களாட்சி போன்ற ஆட்சி முறைகள் இசுலாமிற்கு எதிரானவை என்ற கொள்கை கொண்டவர்.
ஆப்கானிஸ்த்தானில் சோவியத் படைகளின் அட்டூழியங்களைப் பொறுக்காத பின் லாடன் அங்கு சென்று ஆப்கானிஸ்தானிற்காக முஜாகிதீன் போராளிகளுடன் இணைந்து போரிட்டார்.
அமெரிக்காவின் Operation Cyclone
ஆப்கானிஸ்த்தனில் சோவியத் ஒன்றியப் படைகளுக்கு எதிராக அமெரிக்காவின் Operation Cyclone என்னும் படை நடவடிக்கை மூலம் திரை மறைவில் பல உதவிகளை ஆப்கானிஸ்த்தான் விடுதலைப் போராளிகளான முஜாஹிதீனிற்கு செய்தது. முஜாஹிதீனில் பின் லாடன் ஒரு புகழ் மிக்க படைத் தளபதியானார்.
1988இல் பின் லாடன் அல் கெய்தா அமைப்பை ஆரம்பித்தார். பின் லாடன் சோவியத் ஒன்றியத்திற்கு எதிரான போரில் கற்றுக் கொண்ட முக்கிய பாடம் எதிரியின் பொருளாதாரத்தைச் சிதறடிக்க வேண்டும் என்பதாகும். கற்றுக் கொண்ட மற்றப் பாடம் எதிரிமீதான வெறுப்பை பலதரப்பிலும் வளர்த்து ஆதரவு திரட்டுவது. இதை பின் லாடன் தனது இரு பெரும் கொள்கையாகக் கொண்டிருந்தார். இந்தக் கொள்கையை பின் லாடன் தனது இயக்க ஆதரவாளர்கள் மத்தியில் ஆழமாக வளர்த்துள்ளார். உலகெங்கும் உள்ள அல் கெய்தா ஆதரவாளர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தைச் சிதைக்க வேண்டும் என்ற நோக்கத்தையும் அமெரிக்காமீதான வெறுப்பையும் தம் மனதில் ஆழமாகப் பதித்து வைத்துள்ளனர்.
பின் லாடனுக்குப் பின் மேற்குலக நாடுகளுக்கு முக்கியமாக அமெரிக்காவிற்கு பெரும் தலையிடியாக இருக்கப்போவது பின் லாடனின் மேற்கூறிய இந்த இரு கொள்கைகளுமே.
பின் லாடன் கொல்லப்பட்டமை அல் கெய்தாவிற்கு பேரிழப்பு என்று கூறினாலும் அது அல் கெய்தாவின் முடிவாக அமையாது. அல் கெய்தா ஒரு உலகமயமாக்கப் பட்ட அமைப்பு. உள்ளூர்த் தலைமைகளின் கீழ் பல நாடுகளிலும் செயற்படுகின்றது. இந்த அமைப்புக்கள் தம் உள்ளூர் நிலமைகளுக்கு ஏற்பத் தமது கொள்கைகளை தாமே மேலிடத் தலையீடின்றி வகுத்துச் செயற்படுகின்றன. இவற்றில் பல பின் லாடனின் கொலைக்கு பழிவாங்கத் துடிக்கின்றன. இவற்றின் வருங்கால நடவடிக்கைகள் பராக் ஒபாமாவின் தேர்தல் வெற்றியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தலாம்.
அல் கெய்தாவின் பெரும் பின்னடைவு
பின் லாடன் கொல்லப் பட்டதிலும் பார்க்க பெரிய பின்னடைவ அல் கெய்தாவிற்குக் கொடுக்கப் போவது பின் லாடனின் மாளிகையில் இருந்து அமெரிக்கா எடுத்துச் சென்ற கணனிகளும் பதிவேடுகளும் கைப்பேசிகளுமே. இவை அல் கெய்தாவிற்கு எதிராக கிடைத்த தங்கப் புதையல். இப்படி ஒரு பெரிய தகவல் திரட்டு இதற்கு முன் ஒரு போதும் எந்த ஒரு அமைப்பிடம் இருந்தும் கைப்பற்றப் படவில்லை. பின் லாடனின் அடுத்த நிலைத் தலைகள் பல உருளுவதற்கான வாய்ப்புக்களை இப்போது அதிகரித்துள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
இமேஜ் அற்புதமாக இருக்கிறது நன்றி நீங்கள் சொல்லுவதுபடி பார்த்தால் அல் கெய்தாவின் பெரும் பின்னடைவு போல்தெரிகிறது
Post a Comment