
கைப்பேசிகளின் பாவனையாளர்களின் பெரும் பிரச்சனை அவர்களின் மின்னிருப்பு எதிர்பாராத நேரங்களில் தீர்ந்து விடுவது. இதற்கு ஒரு தீர்வை தன் கொரிய விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர். சேயோல் பல்கலைக்கழக விஞ்ஞானி கலாநிதி சாங் வூ கிம் அதிர்வுகளில் இருந்து மின்சாரத்தை பிறப்பிக்கும் கருவையை உருவாக்கியுள்ளார். ஒலி பெருக்கிகளில் மின்சாரத்தில் இருந்து அதிர்வு பிறக்கிறது; அதிர்வில் இருந்து ஒலி பிறக்கிறது. அதை மாற்றி யோசித்தார் அவர்.
கலாநிதி சாங் வூ கிம் உருவாக்கிய கருவி ஒலி அலைகளால் ஒரு சிறு தகட்டை அதிர்வடையச் செய்கிறது. அந்த அதிர்வில் இருந்து மின் உருவாக்கப்படுகிறது. இதற்கு அவர் Zinc oxide wires பாவித்துள்ளார்.
பெருந்தெருக்களில் ஓடும் வாகன இரைச்சல், தொடரூந்து ஓடும் ஓசை எல்லாம் இனி மின்சாரமாக மாற்றப் படப் போகின்றன. தொடர்ந்து குறைந்த அளவு ஒலிகளில் இருந்தும் மின் பெறக்கூடியவகையில் இக்கருவி மேம்படுத்தப் படவிருக்கிறது. அது சரிவந்தால் கைப்பேசியில் மின்சாரம் இறங்கியவுடன் மனைவுயுடன் சண்டை போட வேண்டியதுதான். அவர் போடுக் கூச்சலில் உங்கள் கைப்பேசியில் மின்சாரம் ஏறிவிடும்.
இந்த முறையில் மின்சாரம் ஏற்றுவது கைப்பேசிகளுக்கு மட்டுமல்ல மற்ற சிறு உபகரணங்களிலும் பாவிக்கலாம்.
1 comment:
தகவலுக்கு நன்றி
Post a Comment