Monday, 25 April 2011
நம்பியாரின் வில்லத்தனத்தால் ஐநா நிபுணர் குழு அறிக்கை வெளிவருவதில் தாமதம்.
பிந்திய செய்தி: இன்று ஐநா பணிமனை மூடிய பின் நிபுணர் குழுவின் அறிக்கை வெளிவிடப்பட்டுள்ளது. அதை இந்த இணைப்பில் காணலாம்: அறிக்கை
ஐநாவின் நிபுணர்குழு இலங்கையில் நடந்த போர்க்குற்றம் தொடர்பாக ஒரு விசாரணை தேவை என்று சொல்லியிருந்தும், இலங்கை நடத்தும் விசாரணையில் நம்பிக்கை என்று குறிப்பிட்டிருந்தும், இலங்கையின் நீதித் துறையில் சுதந்திரம் இல்லை என்று சுட்டிக் காட்டி இருந்தும், ஒரு பன்னாட்டு மட்ட விசாரணையை தன்னால் ஆரம்பிக்க முடியாது என்று பான் கீ மூன் தெரிவித்துள்ளார். அப்படி ஒரு விசாரணையை ஆரம்பிக்க ஒன்றில் இலங்கை சம்மதிக்க வேண்டும் அல்லது ஐநா உறுப்பு நாடுகள் தீர்மானிக்க வேண்டும் என்கிறார் பான் கீ மூன்.
இலங்கையில் இறுதிப் போரின் நடந்தவை தொடர்பாக ஒரு வகை சொல்லலை இலங்க அரசு மேற் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலர் பான் கீ மூன் தனக்கு ஆலோசனை சொல்ல ஒரு குழுவை அமைத்திருந்தார். இந்தோனேசியாவைச் சேர்ந்த முன்னாள் சட்டமா அதிபர் மர்சுகி டறுஸ்மன் (Marzuki Darusman), தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மனித உரிமைகள் சட்டவாளர், நீதியாளர் யஸ்மின் சூகா (Yasmin Sooka), அமெரிக்காவைச் சேர்ந்த சட்டத்துறைப் பேராசிரியர் ஸ்ரிவன் ரட்னர் (Steven Ratner) ஆகியோர் இந்த ஆலோசனைக் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
பான் கீ மூனின் நிபுணர் குழு தனது அறிக்கையை 31-03-2011இல் முடித்து விட்டது. இந்த அறிக்கை எதிர்பார்த்தமைக்கு மாறாக இலங்கைக்கு பெரும் பாதக மாக அமைந்தது. டெல்லித் தமிழின விரோதிகள் , கொழும்புத் தமிழின விரோதிகள், பான் கீ மூனின் துணைவர் விஜய் நம்பியார் என்ற தமிழினத்தின் வில்லன் ஆகியவர்கள் கூட்டுச் சேர்ந்து இந்த அறிக்கையை வெளியிடுவதை இழுத்தடித்து வந்தனர். பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கை இறுதியில் இலங்கையிடம் கையளித்ததுடன் அறிக்கையை விஜய் நம்பியாரின் மீள் பார்வைக்கும் பான் கீ மூன் குரங்குகள் கையில் பூமலை கொடுப்பது போல் சமர்ப்பித்தார்.
ஐநாவின் விருப்பத்திற்கு மாறாக பான் கீ மூனின் நிபுணர் குழுவின் அறிக்கை இலங்கையில் கசியவிடப்பட்டதுடன் அறிக்கைபற்றி காரசாரமாக விமர்சிக்கவும்பட்டது. விடுதலைப் புலிகளுக்கு ஏற்ப அறிக்கை தயாரிக்கப் பட்டது என்றும் கூறப்பட்டது.
வேறு சந்தர்ப்பங்களில் உதாரணமாக பெனாஷீர் பூட்டோ கொலை தொடர்பான ஐநா விசாரணைக் குழு அறிக்கை தயாரானவுடன் பகிரங்கப் படுத்தப் பட்டது. ஆனால் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று வெளிவிடப்படும் என்று தெரிவிக்கப்பட்ட போதிலும் இது எழுதும் வரை (GMT- 17.36) வரை அறிக்கையை ஐநா அதிகாரபூர்வமாகப் பகிரங்கப்படுத்தப்படவில்லை.
இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் இன்று பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையின் பிரதி ஒன்றைப் பெற்றுக் கொண்டதாகத் தெரிவித்து. அறிக்கையில் 171-172 ஆம் பத்திகளில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தவர்கள் கொல்லப் பட்ட விவகாரம் குறிப்பிடப் பட்டுள்ளது என இன்னர் சிற்றி பிரஸ் ஊடகம் தெரிவிக்கிறது. அது நம்பியார் அறிக்கையுடன் சம்பந்தப் பட்டதை இப்படிச் சொல்கிறது:
This is a blatant conflict of interest, and may explain the delay of, and prospectively the inaction on, the report.
அறிக்கை வெளிவராமைக்கு விஜய் நம்பியாரை இன்னர் சிற்றி பிரஸ் குற்றம் சாட்டுகிறது.
பந்தி 171-172 இல் நம்பியாரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. பந்தி 170இல் ஐநா அதிகாரிகள் என்றே குறிப்பிடப் பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment