Saturday, 2 April 2011

கடாபிக்கு எதிராக அரங்கேறும் துரோகங்கள்.


லிபியத் தலைவர் கேர்ணல் மும்மர் கடாபியை பதவியில் இருந்து விலக்க மேற்குலக நாடுகள் பல வழிகளில் முயற்ச்சிகள் செய்கின்றன. லிபியாவில் கடாபிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் தொடங்கினவுடனேயே பிரித்தானிய உளவுத்துறை கடாபியின் படைத் துறை உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு கடாபியிடம் இருந்து விலகும் படியும் அல்லது அவர்களும் கொல்லப்படுவார்கள் என்றும் திரை மறைவில் மிரட்டியது.

விமானத் தாக்குதல்களுக்குத் தாக்குப் பிடித்த கடாபியின் படையினர்.
அமெரிக்க, பிரிதானிய, பிரெஞ்சு, கனடா போன்ற பல நாடுகளின் விமானப்படையினர் கடாபியின் பல படை நிலைகள் மீது நவீன குண்டுகளை வீசித் தாக்கினர். இதைதொடர்ந்து முன்னேறிய கடாபியின் எதிர்ப்பாளர்களின் மீது கடாபியின் படையினர் கடும் தாக்குதல் நடாத்தி அவர்களை திருப்பி ஓடச் செய்தனர். மேற்குலக நாடுகள் விமானத் தாக்குதலைத் தீவிரப் படுத்தினால் அது அப்பாவிப் பொதுமக்கள் அதிக அளவில் இறப்பில் முடிவடையலாம் என்று உணர்ந்து தமது தந்திரோபாயங்களை மாற்றியுள்ளனர்.



வெளிநாட்டமைச்சர் முசா குசாவின் கசாமுசா
லிபிய வெளிநாட்டமைச்சர் முசா குசா பேச்சு வார்த்தைக்கு பிரித்தானியா செல்வாதாக கடாபிக்கு தண்ணி காட்டிவிட்டு பிரித்தானியாவில் தஞ்சம் புகுந்துவிட்டார். அவர் மார்ச் 30-ம்திகதி பிரித்தானியாவிற்கு வந்துவிட்டார். இது பிரித்தானிய உளவுத் துறை அரங்கேற்றிய ஒரு நாடகம் என்றே பலரும் கருதுகின்றனர். முசா குசா மேற்கு நாடுகளுக்கு எதிராக பல தீவிரவாதத்( மேற்கு நாடுகளின் மொழியில் பயங்கரவாத) தாக்குதலை நெறிப்படுத்தியவர். முக்கியமாக 1988 டிசம்பரில் லோக்கபி விமானக் குண்டுத்தாக்குதல் இவரால் நெறிப்படுத்தப்பட்டதே என்று கருதப்படுவதால் இவர் மீது நீதிமன்ற விசாரணை நடாத்தப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. பிரான்ஸ் இவரை விசாரணைக்காக நாடுகடத்தும்படி கோருகிறது.

கடாபிக்கு எதிராக கடாபியின் மகன்
கடாபியின் மகன் சயிஃப் கடாபி இப்போது பல வெளிநாடுகளுடன் இரகசியமாகத் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார் என்று செய்திகள் இப்போது வெளிவந்துள்ளன. சயிfஇன் உதவியாளர்கள் மேற்குலக நாடுகளுடன் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் செய்திகள் சொல்லுகின்றன. அவர் தந்தை கடாபிக்கு எதிராகத் திரும்பலாம் அல்லது அவர் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று மேலும் செய்திகள் சொல்கின்றன. இவை கடாபி குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்த மேற்கு நாட்டு உளவுத்துறையினர் செய்த சதியாக இருக்கலாம்.

இன்னும் பல திரை மறைவு ஆப்புக்கள் கடாபிக்கு எதிராக அரங்கேறலாம்.

No comments:

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...