Friday, 1 April 2011
மாணவர்கள் கையில் ஆசிரியையின் அரை நிர்வாணப்படம்
அது பிரித்தானியாவில் உலகப் பிரசித்தி பெற்ற பாடசாலை. ஹரோ ஸ்கூல் (Harrow School)அதன் பெயர். பல்கலைக்கழகம் என்றால் கேம்பிரிட்ச், ஆக்ஸ்போர்ட் போல் பாடசாலை என்றால் ஹரோ ஸ்கூல். பிரித்தானியாவின் இரண்டு அரசர்கள் ஏழு பிரதம மந்திரிகள் அங்கு கல்வி கற்றவர்கள். அது மட்டுமல்ல ஜவகர் லால் நேரு உட்பட பல வெளிநாட்டு அரச தலைவர்கள் அங்கு கல்வி கற்றுள்ளனர்.
பெருமை மிகு ஹரோ ஸ்கூலில் ஒரு அழகிய ஆசிரியை. முன்னாள் அழகு ராணி, முன்னாள் மாடல் அழகி Joanne Salley அங்கு ஓவியப் பயிற்றுவிக்கும் ஆசிரியை. அவர் புகைப்படத் துறையைச் சேர்ந்த தனது சக ஆசிரியைக்கு அரை நிர்வாணமாக கவர்ச்சீகரமாக நின்றபடி கொடுத்த நிலை விபரீதமாக முடிந்து விட்டது.
படமெடுத்த புகைப்பட ஆசிரியை அதை ஒரு நினைவுத் தடியில்(memory stick) பதிவு செய்து வைத்திருந்தார். அந்த நினைவுத் தடியை ஞாபக மறதியாக கலைக் கூடத்தில் (studio)வைத்துவிட்டுச் சென்று விட்டார். ஒரு மாணவன் கையில் அது அகப்பட்டுவிட்டது. அது காட்டுத் தீபோல பாடசாலை முழுக்கப் பரவியதுடன் Joanne Salley முன்பு கல்வி கற்பித்த பாடசாலைக்கும் போய்விட்டது. செய்தி கேள்விப்பட்ட Joanne Salley கண்ணீருடன் பாடசாலை நிர்வாகிகளால் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டார். பாடசாலை நிர்வாகம் அவர்மீது எந்தக் குற்றமும் இல்லை என்று சொல்கிறது.
பிரெஞ்சு பேர்ஜோ காருக்கு மாடலாக செயற்பட்டவர், வட அயர்லாந்தில் அழகு இராணி, ஐக்கிய இராச்சிய அழகு ராணிப் போட்டியில் இரண்டாவதாக வந்தவர், தொலைக்காட்சியில் பணியாற்றியவர், இப்படிப் பல பெருமைகளைக் கொண்டவர் Joanne Salley.
Joanne Salley முன்பு கல்வி கற்பித்த பாடசாலையில் அவர்மீது ஒரு மாணவன் பைத்தியமாய் அலைந்தான். இன்னொரு மாணவன் இவரது வகுப்பில் இல்லாத போதும் இவர் வகுப்பு நடத்தும் போது அங்கு களவாக வந்து மற்ற மாணவர்களோடு தானுன் ஒருவனாக இருந்துடுவான்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
No comments:
Post a Comment