Thursday, 24 March 2011

கைப்பேசித் திருடனை GPS தொழில்நுட்பம் மூலம் பிடித்த மாணவர்கள்


GPS என்ப்படும் (Global Positioning System) உலகளாவிய இடம் அறியும் முறைமை கணனியையும் செய்மதியையும் இணைத்து ஒரு பொருளின் இடமறியும் முறையாகும். இந்த முறை பல வழிகளில் மக்களுக்குப் பயன்படுகிறது. வாகனங்களில் பொருத்தப் பட்டிருக்கும் Satellite Navigators வாகன ஓட்டி ஒர் இடத்தில் இருந்து இன்னோர் இடத்திற்குச் செல்வதற்கு தேவையான அறிவுறுத்தல்கள் அனைவற்றையும் வழங்கும்.

மன்செஸ்டர் பல்கலைக்கழக மாணவனின் ஐ-போன் திருட்டுப் போய்விட்டது. இதைக் கண்டு பிடிப்பதற்கான ஒரு செயலியை( application) அந்த மாணவன் உருவாக்கினான். அவனும் நண்பர்களும் தங்கள் கணனியை அமெரிக்க செய்மதியுடன் தொடர்புபடுத்தி பின்னர் செய்மதி மூலமாக திருட்டுப் போன ஐ-போனுடன் தொடர்பு கொண்டு அது இருக்கும் இடத்தைக் கண்டறிந்தனர். ஒருவர் கணனியில் தொடர்பில் இருக்க மற்ற மாணவர்கள் குறித்த இடத்திற்குச் சென்றனர். கணனியில் இருக்கும் மாணவன் தனது கைப்பேசி மூலம் தேடிச் சென்ற மாணவர்களின் கைப்பேசிக்கு தொடர்பு கொண்டு கைப்பேசித் திருடன் எங்கு இருக்கிறான் எங்கு செல்கிறான் என்ற தகவல்களைக் கொடுத்துக் கொண்டே இருந்தான். இவர்களைக் கண்டவுடன் கைப்பேசித் திருடன் அவர்கள் பார்வையில் இருந்து ஓடி மறைந்தான். ஆனாலும் தொழில்நுட்பக் கண்கள் அவனின் இருப்பிடத்தை அறிந்து வழங்கிக் கொண்டே இருந்தது. கண்ணாம் மூச்சி விளையாட்டு இறுதியில் ஒரு பேருந்தில் முடிந்தது. பேருந்தில் அவன் பிடிபட பின்னால் காவற்துறை வாகனம் வந்து அவனைக் கைது செய்து திருட்டுப் போன ஐபோனையும் மீட்டது.

1 comment:

Mohamed Faaique said...

sooper idea. naama eppa antha level'ku munneruvomo!!!!

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...