Sunday, 6 March 2011
நகைச்சுவைக்கதை: மெரீனா கடற்கரையில் நாய்மீது விடுதலைப் புலி தாக்குதல்
காலை நேரம். சென்னை மெரீனா கடற்கரையில் பலர் நடந்து கொண்டிருந்தனர். அதில் ஒருவர் ஒரு பெரிய பயங்கரத் தோற்றமுடைய நாயுடன் நடந்து கொண்டிருந்தார். அந்த நாய் திடீரென்று வெறிபிடித்து அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு சிறுமி மீது பாய்ந்தது. அந்தச் சிறுமி அலற அங்கு நடந்து கொண்டிருந்த ஒரு இளைஞன் அந்த நாயுடன் நீண்ட நேரம் போராடி அந்தச் சிறுமியைக் காப்பாற்றினான்.
அப்போது அங்கு நடந்து கொண்டிருந்த குந்து பத்திரிகையின் ஆசிரியர் சிங்களரத்தினா சொறிநாய்ராம் அதைப்பார்த்து வியந்து அந்த இளைஞனிடம் சென்று அம்பி உன்னைப் பாராட்டுகிறேன்டா நீ ஷேமமாய் இருப்பாய்டா. நாளை எனது குந்துப் பத்திரிகையில் உனது படமும் பெயரும் பெரிதாக வரவேண்டும். "சிறுமியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய சென்னையச் சேர்ந்த இளைஞன்" என்ற தலைப்பில் செய்திவரும் என்றார். அதற்க்கு அந்த இளைஞன் நான் சென்னையைச் சேர்ந்தவன் அல்ல என்றான். அதற்கு சிங்களரத்தினா சொறிநாய்ராம் அப்படியாயின் "சிறுமியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய தமிழ்நாட்டு இளைஞன்" என்று செய்திவரும் என்றார். அதற்கு அந்த இளைஞன் நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன் அல்ல என்றான். ஓ அப்படியா! "சிறுமியை உயிரைக் கொடுத்துக் காப்பாற்றிய இந்திய இளைஞன்" என்று செய்தி வரும் எனது குந்துப் பத்திரிகையில் என்றார் சிங்களரத்தினா சொறிநாய்ராம். இப்போது அந்த இளைஞன் நான் இந்தியன் அல்ல என்றான். அந்த இளைஞனை இப்போது சிங்களரத்தினா ஏற இறங்கப் பார்த்து அப்போ நீ எந்த நாடடா அம்பி என்றார். அதற்கு அந்த இளைஞன் நான் ஈழத்தைச் சார்ந்தவன் என்றான். இப்போது குந்து பத்திரிகையின் ஆசிரியர் சிங்களரத்தினா சொறிநாய்ராம் இரண்டு மீட்டர் பின்னால் நகர்ந்து நின்று கொண்டு தலையில் அடித்துக் கொண்டு அந்த இளைஞனை ஏற இறங்கப் பார்த்து விட்டுப் பின்னர் அவ்விடத்தில் இருந்து நழுவி விட்டார்.
அடுத்த நாள் குந்துப் பத்திரிகையில் வந்த செய்தித் தலையங்கம்: "மெரீனா கடற்கரையில் அப்பாவி நாய்மீது வெறி கொண்டு பாய்ந்து தாக்கிய விடுதலைப்புலிப் பயங்கரவாதி".
இந்தச் செய்தியை திரித்து வெளியிட்ட்மைக்காக கொழும்பில் இருந்து குந்துப் பத்திரிகை ஆசிரியருக்கு வழமையாக அனுப்பும் பணத்திலும் பார்க்க மேலும் ஒருஇலட்சம் சேர்த்து அனுப்பப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
4 comments:
கதை கரு மாறிப் போச்சு....
எனது வலைபூவில் இன்று:
இந்தியா - அயர்லாந்து சுட சுட ஹைலைட்ஸ் - வீடியோ
கொலை வெறி தாக்குதல் போல... ஹா ஹா ஹா...
என்ன குற்றம் கண்டீர்,தமிழ்வாசி பிரகாஷ்?சொற்குற்றமா?பொருட்குற்றமா?நாகரீகம் கருதி வேல் தர்மா மறைத்திருக்கிறார்!அவ்வளவே!இப்போது சிங்கள ரத்னா!மறு முறையும் காங்கிரஸ் ஆட்சி?!அமைத்தால் "அவருக்கு" பாரத ரத்னா பட்டம் கூட கிடைக்கும் சாத்தியமுண்டு!(அவர்,அவர் சார்ந்த பத்திரிகையில்?!ஆற்றிய?!பணிக்காக?!)
கலக்கல் கதை பொந்துராமை நாயுடன் ஒப்பிட்டு நாய்களை கேவலப்படுத்தியமைக்கு கண்டனங்கள்.
Post a Comment