Tuesday, 8 March 2011
அசிங்கத்தில் மாட்டுப்பட்ட பிரித்தானியக் இள(கிழ)வரசர்
ஐம்பது வயதான பிரித்தானிய இளவரசர் அண்ரூ பிரித்தானிய அரசின் சம்பளம் வாங்காத வர்த்தகத் தூதுவராக கடமையாற்றுகிறார். பிரித்தானியாவின் வெளிநாட்டு வர்த்தகத்தை வளர்ப்பது அவரது பணி. சம்பளம் வாங்குவதில்லை என்ற பெயர்தான் ஆனால் ஆண்டொன்றுக்கு அவரது ஆடம்பரப் போக்குவரத்து மற்றும் தங்குமிடச் செலவுகள் மில்லியன் பவுண்களை எட்டும். இவர் தனது விமானப் பயணங்களுக்கு பெருந்தொகைப் பணத்தை அரசிடம் இருந்து கறப்பதால் இவர் Air miles Andy என்று கிண்டல் செய்யப்படுவார்.
வர்த்தகத் தூதுவர் பணியை அண்ரூ ஆற்றும் போதுபல வெளிநாட்டு வர்த்தகப் பிரமுகர்களைச் சந்திப்பது வழக்கம். இவர் 2001இல் அமெரிக்க வர்த்தகரான ஜெப்ரி எப்ஷ்ரீன் என்பவரைச் சந்தித்ததும் அவரது "விருந்தோம்பலை" அனுபவித்ததும் இளவரசர் அண்ரூவை வில்லங்கத்தில் மாட்டியுள்ளது. விருந்தோம்பலில் ஒரு பகுதியாக 17வயது அழகி வெர்ஜீனியா ரொபெர்ட்ஸ் இடம் பெற்றார். ஜெப்ரி எப்ஷ்ரீன் தனது விருந்தாகிய 17வயது அழகி வெர்ஜீனியா ரொபெர்ட்ஸ்ஐ ஒரு பாலியல் தொழிலாளியாக பயிற்றுவித்திருந்தாராம். விருந்தோம்பிய ஜெப்ரி எப்ஷ்ரீன்ஏற்கனவே சிறுவர் பாலியல் குற்றதிற்காக தண்டிக்கப்பட்டு சிறை சென்றவர். ஓர் இரவு அண்ரூவை வெர்ஜீனியா சந்தித்தார். மறு நாள் காலை ஜெப்ரி எப்ஷ்ரீன் வெர்ஜீனியாஐச் சந்தித்து நீ இரவு சிறப்பாகச் செயற்பட்டாய் என்று கூறிப் பெரும்தொகைப்பணத்தையும் வழங்கினாராம். இது தொடர்பாக அமெரிக்க FBI விசாரணையை ஆரம்பித்துள்ளது. இதைத் தொடர்ந்து அண்ரூவைப்பற்றி காரசாரமான விவாதங்கள் எழத் தொடங்கின.
FBIயின் விசாரணையில் ஜெப்ரி எப்ஷ்ரீனின் பணிப்பெண்கள் இருவர் அண்ரூ வயது குறைந்த பெண்களுடன் உடலுறவு கொண்டுள்ளதை மறுப்பதை நிராகரித்துவிட்டனர். FBIயின் விசாரணைக்கு எதிராக அண்ரூ அரசதந்திரப்பாதுகாப்புக்(diplomatic immunity) கோருவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
ஜெப்ரி எப்ஷ்ரீன் அண்ரூவின் முன்னாள் மனைவி சேராவின் கடன் ஒன்றை செலுத்தியதாகவும் செய்திகள் வெளிவந்தன
2007இல் அண்ரூ தனது மாளிகையை உண்மையான பெறுமதியிலும்பார்க்க மூன்று மில்லியன் பவுண்கள் கூடுதலாக விற்றது பல சந்தேகங்களைக் கிளப்பியது.
இளவரசர் அண்ரூ லிபியத் தலைவர் மும்மர் கடாபியுடனும் அவரது மகன் சய்f கடாபியுடனும் தொடர்புகளை வைத்திருந்தார். லிபிய அரச செலவில் உல்லாசப் பயணங்களையும் மேற்கொண்டார்.
பதவியில் இருந்து விரட்டப்பட்ட துனீசிய அதிபர் மகன் மருமகன்களுடன் அண்ரூ தொடர்புகளை வைத்திருந்தார். மருமகனுக்கு பக்கிங்காம் அரண்மனையில் விருந்தும் வழங்கப்பட்டது.
இளவரசர் அண்ரூவின் முன்னுக்குப் பின் முரணான கருத்துக்களால் சில மத்திய கிழக்கு நாடுகளில் கோமாளி இளவரசர் என்று பல அரச தந்திரிகள் இவரைக் கிண்டலடிப்பதும் உண்டு.
இவை போதாது என்று அண்ரூவின் மகள் பீர்ரீஸ் இலண்டனில் உள்ள ஒரு மட்டரகமான போதைப்பொருள்கள் புளக்கத்தில் உள்ள கேளிக்கை விடுதிக்குச் சென்றதாகச் செய்திகள் அடிபடுகின்றன
கேளிக்கை விடுதியால் வரும் அண்ரூவின் மகள். கண்ணில் என்ன கார்காலம்?
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
1 comment:
பெரியவர்களின் வண்டவாளம்,பெரிதாகத்தான் இருக்கிறது,.
Post a Comment