பார்வதி அம்மாள் உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் பெரும் அசிங்கம் அரங்கேறியுள்ளது.
பெப்ரவரி 22-ம் திகதி நள்ளிரவில் மயானத்திற்கு வாகனமொன்று வந்துள்ளது. அந்தப் பகுதி மக்கள் அதை அவதானித்த போதும் அச்சத்தால் எவரும் வெளியே வரவில்லை. சுமார் 40 நிமிடத்திற்குப் பின் அந்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. மறுநாள் காலை அப்பகுதி மக்கள் மயானத்திற்குச் சென்று பார்த்த போது, பூதவுடல் எரிந்த சாம்பல் அவ்விடத்திலிருந்து சமயக் கிரியைகளுக்கு சேகரிக்க முடியாதவாறு முற்றாக அகற்றப்பட்டு வெளியே வீசப்பட்டிருந்ததுடன் அவ்விடம் முழுவதும் கழிவு எண்ணெயும் டீசலும் ஊற்றப்பட்டிருந்ததுடன், சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் மூன்று நாய்களின் உடல்களும் சிதை எரிந்த இடத்தில் போடப்பட்டிருந்தன.
இரவில் யாழ்ப்பாணத்தில் மக்கள் வெளியில் நடமாடுவதில்லை. நடமாடினால் என்ன நடக்கும் என்று அவர்களுக்குத் தெரியும். நாடமாடுபவர்கள் சோதனைச் சாவடிகள் ரோந்து செல்லும் காவல்துறை மற்றும்படைத்துறை வாகனங்களைச் சந்திக்க வேண்டிவரும்.சந்திக்கும் வேளைகளில் விளைவுகள் பற்றி மக்கள் அறிவர்.
பலதரப்பினரும் இது இலங்கை அரச படையினரின் வேலையாக இருக்குமோ என்று சந்தேகிக்கின்றனர்.
சிங்கள மக்கள் வாழும் பகுதியில் ஒரு பிரேத ஊர்வலம் போகும்போது அனைவரும் காலணிகளை கழற்றி வைத்து மரியாதை செய்வர். பேருந்து நிறுத்தப் படும். அதில் உள்ளவர்கள் யாவரும் எழுந்து நின்று மரியாதை செய்வர். என்று கேள்விப்பட்டதுண்டு. அப்படிப்பட்ட சிங்களவர்கள் வாழும் நாட்டில் ஏன் இப்படி நடந்தது. இதனால் ஏதோ ஒரு நன்மை வரும் என்று எதிர்பார்த்தா?
பார்வதி அம்மாளின் சாம்பலை அசிங்கப்படுத்தியவர்களுக்கு நன்கு தெரியும் இதனால் தமக்கும் இலங்கைக்கும் ஆட்சியாளர்களுக்கும் கெட்ட பெயர் ஏற்படும் என்று. இப்படிப்பட்ட செயல்கள் கீழ்மட்டத்தில் முடிவெடுக்க முடியாது. ஒரு மேல் மட்டத்தில் இருந்துதான் இதற்கான முடிவு எடுத்திருக்க வேண்டும். இந்த சாம்பல் அசிங்கப்படுத்திய செய்தி வாஷிங்டன் போஸ்ட் வரைக்கும் செய்தியாக அடிபட்டுள்ளது. நாட்டுக்கு கெட்ட பெயர் வரும் என்று தெரிந்தும் இதனால் பெரிய ஒரு நன்மை கிடைக்க இருக்கும் என்று நம்பித்தான் இதைச் செய்திருக்க வேண்டும்
இந்த இறந்த ஒருவரின் சாம்பலை அசிங்கப்படுத்தும் செயலால் எதோ ஒரு நன்மை கிடைக்கும் என்று நம்பியே இப்படிச் செய்திருக்கிறார்களா என்ற கேள்விக்கு பாரதப் போரின் 18நாளில் நடந்தவை விடை பகிரும்.
பாரதப் போரின் 17-ம் நாளுடன் துரியோதனனின் சகல படைகளும் மாண்டுவிட்டன. ஒன்றல்ல இரண்டல்ல 99 தம்பிமார் கொல்லப்பட்டுவிட்டனர். உற்ற நண்பன் கொல்லப்பட்டுவிட்டான். தனித்து நின்ற துரியோதனன் நீருக்கடியில் சென்று தனக்கு ஒரு முனிவர் கற்றுக் கொடுத்த சிரஞ்சீவி மந்திரத்தை உச்சாடனம் செய்யத் தொடங்கிவிட்டான். அவன் அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்ய போர்க்களமான குருஷேத்திரத்தில் இறந்த உடல்கள் மீண்டும் துடிக்கத் தொடங்கிவிட்டன. "பரமாத்மா" கண்ணன் நிலமையைப் புரிந்து கொண்டுவிட்டான். துரியோதனன் இருக்கும் ஆற்றடிக்கு பாண்டவர்களை அழைத்துச் செல்கின்றான். பாண்டவர்கள் அவனை வெளியில் வரும்படி அறை கூவல் விடுக்கின்றனர். ஆனால் துரியோதனன் தொடர்ந்து தவ நிலையில் இருந்து மந்திரம் சொல்லிக் கொண்டே இருக்கிறான். தவ நிலையில் இருப்பவனை போய் இழுத்துக் கொண்டுவருதல் மகாபாவம் என்பதால் கண்ணன் துரியோதனனின் பரம விரோதியான வீமனை துரியோதனனுக்கு உசுப்பேற்றும் படி அறைகூவல் விடச் சொல்கிறான். வீமனின் அறை கூவலை கேட்ட துரியோதனன் நீருக்கடியில் இருந்து வீறு கொண்டு எழுகிறான். பின்னர் வீமனும் துரியோதனனும் மோதுகிறார்கள் வீமன் போர் விதிகளுக்கு முரணாக விமனின் ஆணுடம்பில் அடித்து அவனைக் கொல்கிறான்.
இப்போது ஈழத்திற்கு வருவோம்.
போர் 2009 மே மாதம் முடிவடைந்த பின்னர் எத்தனை விடுதலைப்புலிகள் மறைந்திருக்கிறார்கள் என்று யாருக்கும் தெரியாது. அவர்கள் மீளக்கூடி என்று வருவார்கள் என்று கொழும்பும் டில்லியும் அஞ்சிக் கொண்டிருக்கிறது. அவர்கள் ஒரு தலைமையின் கட்டளையின் பேரிலேயே இப்படி மறைந்திருக்கின்றனரா என்று கொழும்பும் டில்லியும் அஞ்சலாம். இவர்களை உசுப்பேத்தி உரிய காலத்திற்கு முதல் வெளிக் கொண்டுவர பார்வதி அம்மாளின் சாம்பல் அசிங்கப் படுத்தப்பட்டதா?
முள்ளி வாய்க்கால் பேரழிவிற்குப் பின்னர், 20 நாடுகள் தமிழர்கள் மீது "ரவுண்டு கட்டித் தாக்கி" அவர்கள் ஆயுத பலத்தை மழுங்கடித்த பின்னர், உயிரோடு மக்கள் கொன்று புதைக்கப்பட்ட பின்னர், ஒரு நாளில் மட்டும் 25000 பேர் கொல்லப்பட்ட பின்னர், இன்னும் தமிழ் இன உணர்வுடன் கொதித்து எழக்கூடியவர்கள் எவர்களாவது இருக்கிறார்களா என்று அறிய கொழும்பும் டில்லியும் மிக ஆவலுடன் இருக்கிறது. இப்படி தமிழர்களை உசுப்பேத்தி ஆத்திரப் படக் கூடிய செய்கைகளைக் செய்தால் யார் கொதித்து எழுகிறார்கள் என்று அறிந்து கொள்ளலாமா?
5 comments:
Break the silence...! Now the time to speak up..! Good post.. My wishes!
Parvathi patti veera thai
இன்னமும் நேரம் கனிந்து வரவில்லை!எப்படி உசுப்பேற்றினாலும்,இந்தக் கனவு பலிக்காது!எல்லா வழிகளிலும் முயற்சித்து எங்கள் உரிமைப் போரின் உண்மைகளை அகிலமெங்கணும் உணர்த்திய பின்னரே மேல் நடவடிக்கைகள் அமையும்!அது வரை ஆடட்டும்!வெல்வோம் பொறுமை காத்து!(நன்றி,வேல் தர்மா,என்னுடைய கோரிக்கைக்கு செவி மடுத்ததற்கு!தொடருங்கள்!வாழ்த்துக்கள்!)
அன்பின் யோகா எழுத்துப் பிழைகளைச் சுட்டிக்காடியியமைக்கு நன்றி. தயவு செய்து தொடர்ந்து சொற்பிழை பொருட் பிழைகளச் சுட்டிக்காட்டவும்.
http://powrnamy.blogspot.com/2011/02/blog-post_25.html
கேபிள் அழைக்கிறார் - மீனவர் பிணங்களுக்கு மத்தியில் கூத்தடிக்க பதிவர் சந்திப்பு
Post a Comment