Sunday, 30 January 2011

பாக்கிஸ்த்தானிய இளைஞர்களின் துர்நடத்தைகளுக்கு பிரபுத்துவ விளக்கம்.



பிரித்தானியாவில் வாழும் பாக்கிஸ்த்தானிய இளைஞர்கள் வெள்ளை இன சிறுமிகளை பாலியல் உறவுக்கு உடபடுத்துவதாக பிரித்தானிய அரசியல்வாதியான ஜக் ஸ்ரோ அவர்கள் குற்றம் சாட்டியிருந்தார். அவர் பாக்கிஸ்த்தானிய இளைஞர்கள் வெள்ளை இனச் சிறுமிகளை பாலியல் "இலகு தசைகளாக" எண்ணுவதாகக் குறிப்பிட்டிருந்தார். இது பிரித்தானியாவில் பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியிருந்தது. (Some Pakistani men look at white girls as ‘easy meat’ for sexual abuse.)

பாக்கிஸ்த்தானிய இளைஞர்களின் செய்கைகளுக்கு பிரித்தானியாவின் பிரபுக்கள் சபை உறுப்பினர் அஹமெட் புது வியாக்கியானம் அளித்துள்ளார்:
  • பல பாக்கிஸ்த்தானிய இளைஞர்கள் தங்களின் தந்தை அல்லது தாயின் சகோதரர்களின் மகள்களை கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் திருப்தி அடைவதில்லை. தங்கள் பாலியல் கேளிக்கை தேவைகளை நிறைவேற்ற வெள்ளை இனத்தைச் சேர்ந்த குறைந்த வயதுப் பெண்களை நாடுகின்றனர்.
  • வெள்ளை இன வயதுப் பெண்களை அவர்கள் நாடுவதாயின் அவர்கள் அர்த்தமான உறவைப் பேண வேண்டும். அதற்கு பணம் நேரம் போன்றவற்றை செலவழிக்க வேண்டும். இது அவர்களின் திருமணத்தை முறிக்கலாம்.

அண்மைக்காலங்களாக பாக்கிஸ்த்தானிய இளைஞர்கள் வெள்ளை இன சிறுமிகள் மீது பாலியல் பலாத்காரம் புரிந்ததாக பல வழக்குகள் வந்த பின்னரே இந்தச் சர்ச்சை உருவானது.

பிரபுக்கள் சபை உறுப்பினர் அஹமெட் இந்தியா பங்களாதேசத்து இளைஞர்கள் தங்களின் தந்தை அல்லது தாயின் சகோதரர்களின் மகள்களை கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுவது குறைவு என்றும் சுட்டிக் காட்டியுள்ளார்.

1 comment:

Anonymous said...

பல பாக்கிஸ்த்தானிய இளைஞர்கள் தங்களின் தந்தை அல்லது தாயின் சகோதரர்களின் மகள்களை கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்படுகிறார்கள். இதனால் அவர்கள் திருப்தி அடைவதில்லை. தங்கள் பாலியல் கேளிக்கை தேவைகளை நிறைவேற்ற வெள்ளை இனத்தைச் சேர்ந்த குறைந்த வயதுப் பெண்களை நாடுகின்றனர்.

நல்ல வியாக்கியானமப்பா....

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...