Monday, 17 January 2011
நகைச்சுவை: ஆட்சி முறைகளும் கலைஞர் ஆட்சியும்
ஒவ்வொரு விதமான ஆட்சியிலும் மக்கள் வாழ்க்கை வெவ்வேறுவிதமாக இருக்கும்.
மதவாதிகளின் ஆட்சி: உங்களிடம் இரு பசுக்கள் இருந்தால் நீங்கள் கடவுளுக்கு ஒரு பகுதி பால் கொடுக்க வேண்டும் என்று சொல்லி சகலதையும் பிடுங்கிக் கொள்வார்கள்.
பாசிசவாதிகளின் ஆட்சி: உங்களிடம் இரு பசுக்கள் இருந்தால் அதை அரசு கையகப் படுத்திக் கொள்ளும். அப் பசுக்களை நீங்கள் பராமரிக்க வேண்டும். அரசு உங்களுக்கு பால் விற்பனை செய்யும்.
மக்களாட்சி: உங்களிடம் இருக்கும் பசுவையும் பாலையும் என்ன செய்வதென்பதை உங்கள் அயலவர்கள் வாக்களிப்பு மூலம் முடிவு செய்வர்.
சர்வாதிகார ஆட்சி: உங்கள் பசுக்களை அரசு பறித்துவிட்டு உங்களைக் கொன்று விடும்.
சிங்கப்பூர் பாணி ஆட்சி: உங்களிடம் இரு பசுக்கள் இருந்தால் தொடர் மாடிவீட்டில் பசு வைத்திருந்தமைக்காக நீங்கள் தண்டிக்கப்படுவீர்கள்.
இலங்கை ஆட்சி: தமிழ் பசுவாக இருந்தால் உயிருடன் புதைபடும். சிங்களப் பசுக்கள் மீது சவாரி செய்யப்படும்.
அமெரிக்க ஆட்சி: நீங்கள் வாக்களித்தால் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இரு பசுக்கள் தருவதாக வாக்குறுதி அளிப்பார். தேர்தலில் வென்ற பின் அவர் பசுக்களை வாங்குவார். அவர் அதில் புரிந்த ஊழல் cowgate என்று பத்திரிகைகள் எழுதிப் பெரும் பணம் சம்பாதிக்கும். யாருக்கும் பசு கிடைக்காது.
இத்தாலிச் சனியன் ஆட்சி: நாட்டில் உள்ள பசுக்கள் யாவற்றையும் அரசு பொறுப்பேற்று 1.72இலட்சம் கோடி நட்டத்திற்கு விற்பனை செய்யும்.
பிரித்தானிய ஆட்சி: உங்கள் பசுக்களுக்கு பன்றி இரத்தத்தில் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை தனியார் நிறுவங்கள் விற்பனை செய்து பெரும் பணம் சம்பாதிக்கும். உங்கள் பசுக்களுக்கு பைத்தியம் பிடிக்கும்(mad cow desease ). அரசு இவற்றைப்பற்றி எல்லாம் கவலைப் படமாட்டாது.
பெண்ணியவாதிகளின் ஆட்சி: இருபசுக்களும் திருமணம் செய்து கொண்டு ஒரு பசுக்கன்றைத் தத்தெடுத்துக் கொள்ளும். பாலைப் பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள். கன்றுக்கு புட்டிப்பால்.
பாக்கிஸ்த்தான் ஆட்சி: பசுக்களைக் கொன்று தின்ன வேண்டும் என்று அரசு உத்தரவிடும் இந்தியர்களை ஆத்திரப்படுத்த.
கலைஞர் ஆட்சி: குன்றுகள் போல் வாழ்ந்த தமிழினத்திற்கு கன்றுகள் இரண்டு இலவசம் என்று தேர்தல் பிரச்சாரத்தில் கலைஞர் சொல்லிடுவார். பிறகு சிலருக்கு பசுக்கன்றுகள் வழங்கப்படும். பசுக்களை வைத்து அவ்வப்போ கலைஞருக்கு பாராட்டு விழா நடாத்த வேண்டும். பசுக்களை வைத்துப் பராமரிக்க வீடுகளை விற்க வேண்டிவரும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
பிரபாகரன் கொல்லப் பட்டு விட்டாராம். அவரது உடல் கண்டு எடுக்கப் பட்டுள்ளது. இலங்கைத் தொலைக் காட்சியில் காட்டப் பட்ட படம் இரண்டாவதாக உள்ளது. அத...
9 comments:
இலங்கை ஆட்சி: தமிழ் பசுவாக இருந்தால் உயிருடன் புதைபடும். சிங்களப் பசுக்கள் மீது சவாரி செய்யப்படும்.
supppppppppppppper
ஆக கலைஞர் ஆட்சியில்தான் பசுக்கள் மக்களுக்கு (கொஞ்சம் பேருக்காவது) கிடைக்கும். மற்றவர்கள் ஆட்சியில் இருப்பதும் பறிபோய்விடும் என சொல்லாமல் சொல்கிறீறோ…!
ஆம் கலைஞர் ஆட்சியில் இருக்கும் போதுதானே 3 இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்
இலவசமாக கன்று மட்டுமா தருவார் அதற்க்கு ஒரு காளையும் சேர்த்து தருவார் நம்ம இலவச மன்னன்
இலவசமாக கன்று மட்டுமா தருவார் அதற்க்கு ஒரு காளையும் சேர்த்து தருவார் நம்ம இலவச மன்னன்
இலவசமாக கன்று மட்டுமா தருவார் அதற்க்கு ஒரு காளையும் சேர்த்து தருவார் நம்ம இலவச மன்னன்
கருணாநிதி வாரிசு யாராவது மாட்டு தீவன மொத்த வியாபாரியாக இருந்தால் மட்டுமே மக்களுக்கு இலவசமாக பசு. தனக்கு ஆதாயமில்லாமல் கருணாநிதி ஏதாவது செய்வார் என்கிறீர்கள்?
நண்பர்களே தமிழ் குறும்படங்களுக்கு என ஒரு இணையரங்கம் (www.kurumpadangal.com) செயல் படத் துவங்கியிருக்கிறது. பார்த்து மகிழ்ந்து
நண்பர்களுக்கும் அறிமுகப்படுத்த வேண்டுகிறோம். தங்களின் குறும்படங்களையும் இணைக்கவும்.
Tragic Truth... Let us take this bitter truth... and pray for some remedy...
Visit to my blog :
http://anubhudhi.blogspot.com/
Post a Comment