Sunday, 16 January 2011
சிரி கதைகள் - பூதாக்கலம், அமரர் ஊர்தி
உணவுகளால் ஏற்படும் பாதகங்களைப் பற்றிய மாநாடு நடந்து கொண்டிருந்தது. இறைச்சி வகைகளை உண்பதால் ஏற்படும் பாதங்களைப்பற்றி ஒருவர் விளக்கினார். மரக்கறிவகைகளில் உள்ள மோசாமான இரசாயனப் பசளைகளால் உள்ள பாதகங்களைப்பற்றி இன்னொருவர் விளக்கினார். குடிக்கும் தண்ணீரில் உள்ள கிருமிகளைப்பற்றி இன்னொருவர் விளக்கினார். இறுதியில் ஒரு மனிதனுக்கு நீண்டகால பாதகம் தரக்கூடிய உணவு எது என்று கேள்வி வந்தது. ஒரு இந்துப் பெண் சொன்னார் தனது வாழ்வில் நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்திய சாப்பாடு தனது திருமணத்தின் போது சாப்பிட்ட பூதாக்கலம் என்றார். ஒரு கிருத்தவப் பெண் தனது திருமணத்திலன்று சாப்பிட்ட wedding cake என்றார்.
xxxx
அது ஒரு புதிய வாடகைக்கார். அதில் ஏறி ஒரு பயணி பெருமையுடன் பயம் செய்து கொண்டிருந்தார். அடுத்த சந்தியில் காரை நிறுத்தச் சொல்லிக் கேட்பதற்க்காக அவர் ஓட்டுனரின் தோளில் மெதுவாகத் தட்டினார். ஓட்டுனர் பெரும் பதட்டப்பட்டு காரை மிக வேகமாகச் செலுத்தி தெருவில் இருந்த கடைக் கதவை இடித்து கடைக்குள் கார் புகுந்து பெரும் களேபரம். நல்ல வேளை ஓட்டுனருக்கோ பயணிக்கோ பெரும் காயம் ஏற்படவில்லை. பயணி ஓட்டுனரைக் கேட்டார் நான் செய்தது உனது தோளில் மெதுவாகத் தட்டியதுதானே. அதற்கு ஏன் இந்த களேபரம். ஓட்டுனர் பதில் சொன்னார் இது தானய்யா பழக்க தோசம் என்பது. 14 வருடங்களாக அமரர் ஊர்தி ஓட்டிக் கொண்டிருந்த நான் இன்று தான் வாடகைக்கார் ஓட்ட வந்தேன். பின்னால் இருந்து சடலம் ஒருநாளும் தோளில் தட்டுவதில்லை.
xxxx
சிகை அலங்கரிப்பவர்கள் சிறந்த வாகனச் செலுத்துனர்கள். ஏன் தெரியுமா? அவர்களுக்குத்தான் நிறைய short cut தெரியும்.
xxxxx
உலகமே ஒரு நாடக மேடையாம்!! அப்போ பார்வையாளர்கள் எங்கு அமர்ந்திருக்கிறார்கள்???
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
1 comment:
Your attempt to make others laugh is ok,
But your writting n sex and love gives a misterious feeling very closer to vomiting. OK,
Write like this we will tolerate and politics would be fine. but not sex.
Why dont you have a seperate blogger for those things. Those who admire may see that.
Regards to a good man.
Oh my god,
Post a Comment