
இந்தியப் பாராளமன்றத்திற்கு ஒரு வயோதிபர் சென்றார். அவரை மறித்த கவலாளியிடம் நான் எமது நாட்டின் பிரதம மந்திரியான சோனியா காந்தியை சந்திக்கலாமா என்று கேட்டார். அதற்கு கவலாளி சோனியா காந்தி பிரதமர் அல்ல என்றான். வயோதிபர் சென்றுவிட்டார்.
மறுநாளும் அதே வயோதிபர் வந்து நான் எமது நாட்டின் பிரதம மந்திரியான சோனியா காந்தியை சந்திக்கலாமா என்று கேட்டார். அதற்கு கவலாளி சோனியா காந்தி பிரதமர் அல்ல என்றான். வயோதிபர் சென்றுவிட்டார்
அடுத்த நாளும் அதே வயோதிபர் வந்து நான் எமது நாட்டின் பிரதம மந்திரியான சோனியா காந்தியை சந்திக்கலாமா என்று கேட்டார். அதற்கு கவலாளி சோனியா காந்தி பிரதமர் அல்ல என்றான். வயோதிபர் சென்றுவிட்டார்.
அடுத்த நாளும் அதே வயோதிபர் வந்து நான் எமது நாட்டின் பிரதம மந்திரியான சோனியா காந்தியை சந்திக்கலாமா என்று கேட்டார். கவலாளிக்கு கடும் கோபம் வந்து விட்டது. உனக்கு இதே வேலையா போய் விட்டதா? என் உயிரை ஏன் எடுக்கிறாய்? என்று பாய்ந்தான். அதற்கு அந்த வயோதிபர் "சோனியா காந்தி பிரதமர் அல்ல என்று உன் வாயால் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது தெரியுமா மகனே . இதை ஒவ்வொரு நாளும் உன் வாயால் கேட்க வேண்டும்." என்றார்.
xxxxxxxxx
சவுதி அரேபியாவில் ஒரு சவுதி அரேபியனும் ஒரு இந்தியனும் ஒரு இலங்கையனும் ஒரு பாக்கிஸ்த்தானியனும் ஒன்றாக நடந்து கொண்டிருந்தனர். அவர்களை ஒரு நிரூபர் மறித்து "மன்னிக்கவும், உணவுத் தட்டுப்பாடு பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன" என்று கேட்டார்.
முதலில் மூவரும் திரு திரு என விழித்தனர்.
தட்டுப்பாடு என்றால் என்ன என்றான் சவுதி அரேபியன்.
சாப்பாடு என்றால் என்ன என்றான் இந்தியன்
கருத்துத் தெரிவிப்பது என்றால் என்ன என்றான் இலங்கையன்
மன்னிக்கவும் என்றால் என்ன என்றான் பாக்கிஸ்த்தானி.
2 comments:
இது நகைச்சுவையா????
It's really thinkable jokes.
Post a Comment