Wednesday, 12 January 2011
நகைச்சுவைக் கதை: கண்விழித்த காங்கிரசுப் பூனை.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஒவ்வொரு நாளும் காலையில் ஒரு நடை போய் வந்தால் நல்லது என்று முடிவு செய்தார். சில நாட்கள் இப்படியே நடந்தது. ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு எங்கே நேரம். அதனால் ஒவ்வொரு வாரமும் நடப்பது என்று முடிவு செய்து விட்டார்.
ஒரு நாள் காலை ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நடந்து கொண்டிருக்கும் போது வழியில் ஒரு வீட்டு வாசலில் ஒரு சிறுவன் ஒரு பெட்டியை திறப்பதும் அதற்குள் கையை விட்டுத் தடவுவதுமாக இருந்தான். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் நின்று சிறுவனைப்பார்த்து பெட்டிக்குள் என்ன என்று கேட்டார். புதிதாகப் பிறந்த பூனை ஒன்று என்று சிறுவன் பதிலளித்தார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பெட்டிக்குள் எட்டிப் பார்த்தார். மிக அழகான பூனைக்குட்டி என்று சொன்ன ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அதன் பெயர் என்ன என்று கேட்டார். அதன் பெயர் காங்கிரஸ் என்று சிறுவன் பதிலளித்தான். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மிக்க மகிழ்ச்சியுடன் சிறுவனைத் தட்டிக் கொடுத்து விட்டுச் சென்று விட்டார்.
அடுத்த வாரம் ராகுல் காந்தி (எனப்படும் ராகுல் கான்) தமிழ்நாடு வந்தார். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவரைச் சந்தோசப் படுத்த நல்ல வாய்ப்பு என்று அவரை காலை தன்னுடன் நடைபோக வரும்படி அழத்தார். மத்திய உளவுத் துறை அதிகாரிகள் கரும்பூனைப் படையினர் முன்னும் பின்னும் திரள ஈ.வி.கே.எஸ் இளங்கோவனும் ராகுல் காந்தியும் நடந்து சென்றனர். ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் எதிர்பார்த்தபடியே சிறுவனும் பெட்டியை வைத்து அதைத் திறப்பதும் கைவிட்டுத் தடவுவதுமாக இருந்தான். உள்ளுக்குள். ராகுலை அந்தச் சிறுவனிடம் அழைத்துச் சென்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவனிடம் தம்பி இந்தப் பூனைக் குட்டியின் பெயர் என்ன என்று ஆங்கிலத்திலும் தமிழிலும் கேட்டார். அதற்கு பையன் பூனைக் குட்டியின் பெயர் மானத்தமிழன் என்று பதிலளித்தான்.
ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு கோபம் மிகுந்து விட்டது. சிறுவன் காதை முறுக்கிய படி அடே போன வாரம் கேட்ட போது அதன் பெயர் கங்கிரஸ் என்றாயே என்றார். அதற்குச் சிறுவன் பூனைக்குட்டி என்று கண்விழித்ததோ அன்றிலிருந்து அது காங்கிரஸ் என்று கூப்பிட்டால் சீறுது பிராண்டுது. பின்னர் அதற்கு எனது அம்மா மானத் தமிழன் என்று பெயர் வைத்துவிட்டார். மானத்தமிழன் என்று கூப்பிட்டால் மகிழ்ச்சியடைகிறது. சிறுவன் குடும்பம் புலி ஆதரவாளர்கள் என்று கைது செய்யப்பட்டனர்.
கதையின் நீதி: ஒரு பூனைக்குட்டியின் கண்கள் விழித்தது போல் இன்னும் பல கோடி கண்கள் விழிக்க வேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
Featured post
உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்
விமானம் தாங்கிக் கப்பல்கள் என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...
-
தம்மைத் தாமே துன்புறுத்தி சமயச் சடங்குகள் செய்பவர்களிடையே Aarhus University மானோதத்துவ விஞ்ஞானியான Xygalatas தனது சகாக்களுடன் இணைந்து ம...
-
கணினிகள் மனிதர்களைப் போல் சிந்தித்து விவேகமாகச் செயற்படல் செயற்கை விவேகம் எனப்படும். அது கண்டறிதல் , பேச்சுக்களை கேட்டறிதல் , முடிவுகளை...
-
சீனாவிற்கு எதிரான படைத்துறை ஒத்துழைப்பில் சிறந்த நட்பாக இந்தியாவைக் கருதும் அமெரிக்காவிற்கு ஏமாற்றமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2019 மார்ச்...
No comments:
Post a Comment