
தலை முடி உதிர்வதற்கான காரணிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்து விட்டனர். ஆனால் இதற்கான சரியான நிவாரண மருந்துகள் உறபத்தி செய்ய சில காலம் எடுக்கும். ஆனால் சில தினசரி பழக்க வழக்கங்கள் தலை முடி உதிரவதைத் தடுக்கும்.
1. கடுமையாகத் தலை சீவ வேண்டாம். தலையை அடிக்கடி சீவுதல் தலைக்கு இரத்த ஓட்டம் பாயச் செய்யும். ஆனால் மென்மையாகச் சீவவேண்டும்.
2. தலையைத் துப்பரவாக வைத்திருக்க வேண்டும். பொடுகு எக்சிமா போன்றவை தலைமுடிகளை உதிரச் செய்யும். இவை வராமல் பார்த்துக் கொள்ளவேண்டும்.
3. காலையில் புரதச் சத்து மிக்க சமைத்த உணவுகளை உண்ணுங்கள். தலை முடியில் இருக்கும் கெரட்டின்(Keratin) அதன் பலத்தை நிர்ணயம் செய்கிறது. காலையில் நல்ல சத்துள்ள சமைத்த உணவுகளை உண்பது தலை முடியின் பலத்தை அதிகரித்து உதிர்வைத் தடுக்கும்.
4. தலைக்குப் பாவிக்கும் Wax, gel போன்றவற்றில் பெற்றோலியம் சம்பந்தப் பட்ட மூலப் பொருட்கள் இருக்கக்க் கூடாது. நீங்கள் தலைக்குப் பாவிக்கும் எந்த தைலங்களிலோ மற்றப் பொருட்களிலோ paraffin அல்லது petroleum சம்பந்தப் பட்ட மூலப் பொருட்கள் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
5. தியானம் யோகா போன்ற மனதை அமைதிப்படுத்தும் வழிவகைகளைக் கையாளுங்கள். மனம் அவலப்படும் போது அல்லது கவலைப் படும் போது தலை முடியில் இருந்து follicle என்னும் பொருள் இறங்குவதால் தலை முடி பலமிழக்கிறது. இது உதிர்வை அதிகரிக்கும்.
6. சாப்பாட்டில் நல்ல இரும்புச் சத்துள்ளவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். கடலை பருப்பு வகைகள் கரும்பச்சை நிறக் காய்கறிகள் இறைச்சிவகைகளை உணவில் சேர்த்தால் தலைமுடி பலம் பெறும்.
7. தலைக்கு சாயம் பூசுவதைத் தவிருங்கள். இவற்றில் உள்ள bleach தலைமுடியில் இயற்க்கையாக உள்ள் ஈரலிப்பை அகற்றி உதிர்வை அதிகரிக்கும்.
8. புகைத்தலை நிறுத்துங்கள். புகைத்தல் தலை முடிக்கான இரத்த ஓட்டத்தை குறைக்கும்.
2 comments:
தல நல்லாப பதிவு . ஆனால் எனக்கு ஒரு சந்தேகம் இந்தப் பதிவு தலைமுடி இருக்கிறவர்களுக்கு . ஆனால் தலைமுடியே இல்லாதவர்கள் என்ன செய்வது .அதற்கும் ஏதாவது ஒரு பதிவு கொடுங்கள்
சீனாவிலயோ,சிங்கப்பூரிலியோ தெரியல!நம்மூரில வயல்ல நாத்து நடுவாங்க இல்ல?அப்புடி நாட்டி வுடுறாங்களாம்!அக்குபஞ்சரோ கசுமாலமோன்னு சொல்லுறாங்க!ட்ரை பண்ணுங்க தல!!!!!!!!!!!!!!
Post a Comment