
சிசுக்கொலை
தமிழீழம் பெண் குழந்தையா
முள்ளிவாய்க்காலில் கொடுத்தனர்
கள்ளிப் பால்
மாற்றான் தாய்
இந்தியாவிற்கு இரு தாரமா
மாற்றாள் பிள்ளைகளுமா
தமிழ் மீனவர்கள்
மானிட மறதி
தேவை மனிதனிற்கு
நினைவூட்டற் கடிதம்
யாரென்றுணர
மேக மோகம்
மேகத் தம்பதியரின்
கட்டில் ஒலி
முழக்கம்
பாகுபாடு
அவன் கையசைவில் சந்தேகம்
அதன் நிறம் கறுப்பு
முத்தையா முரளீதரன்
1 comment:
உங்கள் கவிதைகள் மிகவும் அருமையாகவும் சிந்திக்கவும் வைக்கிறது வாழ்த்துக்கள். தங்களின் GSP+ கட்டுரை பார்த்தேன். ஐரோப்பா விதித்துள்ள நிபந்தனைகள் பற்றி என் mathisutha.blogspot.com ல் இட்டிருக்கிறேன். அதையும் உலகிற்கு தெரியப்படுத்துறிங்களா?
Post a Comment