Thursday, 22 July 2010

Facebook புரட்சி


இணைய உலகில் ஆரம்பித்து ஆறு வருடங்களில் Facebook பல புரட்சிகளைச் செய்துள்ளது.

ஐம்பது கோடி மக்கள் Facebook இணைந்திருக்கிறார்கள். ஒரு ஆண்டுக்கு முன் ஒன்றரைக் கோடியாக இருந்த தொகை இப்படிப் பெருகி இருக்கிறது.
  • உலகத்தில் பன்னிரண்டு பேரில் ஒருவர் Facebook இல் இணைந்திருக்கிறார். Facebook ஒரு நாடாக இருந்தால் அது உலகின் மூன்றாவது பெரிய நாடாகும்.
  • பிரித்தானியாவில் மூன்றில் ஒருவர் Facebook இணைந்திருக்கிறார்.
  • பலருக்கு Facebookஇல்லாமல் உலகமே இல்லை என்றாகிவிட்டது. கைப்பேசிகளைப் போல Facebookம் வாழ்க்கையின் ஒரு அம்சமாகிவிட்டது.
  • Facebook மார்க் ஜுக்கர்பேர்க்(இப்போது 26 வயது என்பவரால் அமெரிக்காவில் 2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப் பட்டது.
  • ஐம்பத்தி இரண்டரைக் கோடி பிரித்தானிய பவுண்கள் பெறுமதியான விளம்பர வருமானம் Facebook சென்ற ஆண்டு பெற்றது.
  • மாதமொன்றிற்கு ஏழாயிரம் கோடி மனித நிமிடங்கள் Facebookஇல் செலவழிக்கப் படுகிறது.
  • ஒவ்வொரு மாதமும் முன்னூறு கோடி படங்கள் Facebook தரவேற்றம் செய்யப் படுகிறது.
  • ஒருவர் சராசரியாக மாதமொன்றிற்கு 90 பதிவுகளை Facebookஇல் செய்கிறார்.
  • சராசரியாக ஒருவருக்கு 130 நண்பர்கள் Facebook இருக்கின்றனர். (எனக்கு 4950 நண்பர்கள்). ஒருவர் ஆகக் கூடியது 5000நண்பர்களை வைத்திருக்கலாம்.
  • தமிழ் உட்பட 70 மொழிகளில் Facebook கணக்குகளை ஆரம்பிக்கலாம்.
  • 550,000இற்கு மேற்பட்ட செயற்படு மென் பொருட்கள்(applications) Facebookஇல் உள்ளன.
  • ஒவ்வொரு நாளும் ஆறு கோடிப் பேர் தங்கள் நிலைப்பாடுகளை பதிகிறார்கள்.(Status update)

1 comment:

ராம்ஜி_யாஹூ said...

Facebook deserves for that, Keep rocking

Featured post

உலக கடலாதிக்கப் போட்டியில் விமானம் தாங்கிக் கப்பல்கள்

விமானம் தாங்கிக் கப்பல்கள்  என்பன பல போர்விமானங்கள் நிறுத்தக் கூடிய பாதுகாப்பான இடத்தையும் அவை பறக்கக் கூடிய ஓடுபாதையையும் கொண்டிருக்கும்...